போக்குவரத்துத் துறை

புதிய வழித்தடத்திற்கான பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்கள்!


விருதுநகர் மாவட்டம்
புதிய வழித்தடத்திற்கான பேருந்துகளை
போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தும் மற்றும்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் வீரசோழனில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(மதுரை)லிட், விருதுநகர் மண்டலத்தின் மூலம் 5 புதிய வழித்தடத்திற்கான பேருந்துகளையும், நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்படும் 3 நகர வழித்தடங்களுக்கான பேருந்துகளையும் மற்றும் ஒரு விரைவு வழித்தடத்திற்கான பேருந்தையும் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி,அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் .முருகேசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன் ஆகியோர்கள் முன்னிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்;.ராமச்சந்திரன் அவர்கள்;, மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர்கள் இன்று (29.07.2021) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்கள்.
பின்னர், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்”; திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு ரூ.12.82 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பேருந்துகளின் பராமரிப்பினை மேம்படுத்திடவும், பேருந்து வழித்தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திடவும், போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பேருந்துகளை ஒதுக்கீடு செய்யவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், போக்குவரத்து கழகங்களின் நிதி நிலை செயல்பாட்டு திறன்களை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், விருதுநகர் மாவட்டத்திற்கு 5 புதிய வழித்தடத்திற்கான பேருந்துகளையும், நிறுத்தப்பட்டு மீண்டும் 3 நகர வழித்தடங்களுக்கான பேருந்துகளையும் மற்றும் 1 விரைவு வழித்தடத்திற்கான பேருந்தையும் ஒதுக்கீடு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி விருதுநகரிலிருந்து திருச்சுழி வழித்தடத்திற்கு மல்லாங்கிணறு, கல்குறிச்சி, கிருஷ்ணாபுரம், பி.புதுப்பட்டி விளக்கு வழியாக ஒரு நகர பேருந்தையும், நரிக்குடியிலிருந்து திருப்புவனம் வழித்தடத்திற்கு எ.முக்குளம், புல்வாய்க்கரை, ஆவாரங்குளம், எஸ்.நாங்கூர், கருவக்குடி வழியாக ஒரு நகர பேருந்தையும், அருப்புக்கோட்டை – திருச்சுழி வழித்தடத்திற்கு ஆத்திப்பட்டி, கண்டமங்கலம், பாறைக்குளம், கொட்டம், புலிக்குறிச்சி வழியாக ஒரு நகர பேருந்தையும், காரியாப்பட்டி – திருச்சுழி வழித்தடத்திற்கு முடுக்கன்குளம், எசலி, குமிழங்குளம், இனக்கனேரி வழியாக ஒரு நகர பேருந்தையும், காரியாபட்டி – அல்லாலப்பேரி வழித்தடத்திற்கு முடுக்கன்குளம், ஆவாரம்பட்டி, உடுப்புக்குளம், மனைவியேந்தல் வழியாக ஒரு நகர பேருந்தையும் என மொத்தம் 5 புதிய வழித்தடத்திற்கான பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நிறுத்தப்பட்டுள்ள நகரப்பேருந்துகளான காரியாபட்டியிலிருந்து ஸ்ரீராம்பூர், முடுக்கன்குளம், தேனூர் வழியாக சொக்கனேந்தல் வழித்தடத்திற்கான பேருந்தும், அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி, நரிக்குடி, மறையூர், மாயலேரி, பிடாரிசேரி வழியாக வேளானேரி வழித்தடத்திற்கான பேருந்தும், காரியாபட்டியிலிருந்து மீனாட்சிபுரம், முஷ்டகுறிச்சி, எஸ்.நாங்கூர், கருவக்குடி, அல்லிநகரம் வழியாக திருப்புவனம் வழித்தடத்திற்கான பேருந்தும் என 3 பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வீரசோழனிலிருந்து சென்னைக்கு பார்த்திபனூர், பரமக்குடி, இளையான்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், திருமயம், புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் வழித்தடத்திற்கான ஒரு புதிய அரசு விரைவு பேருந்தும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர் மாவட்டத்திற்கு பேருந்து வசதி தேவையிருப்பின் அதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தார்கள்.


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button