பேக்கரி மற்றும் உணவகங்களில் ஆய்வு என்ற பெயரில் மாதம் பல லட்சம் லஞ்சம் வாங்கும் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்!?
பேக்கரி மற்றும் உணவகங்களில் ஆய்வு என்ற பெயரில் மாதம் பல லட்சம் லஞ்சம் வாங்கும் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்!?
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பேக்கரி ,உணவகங்கள் மற்றும் சாலையோர தள்ளுவண்டிகளில் டீ கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு விற்பனை செய்து வருவதாகவும் அவற்றை கண்டு கொள்ளாமல் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அக்டோபர் மாதம் நாமக்கல் பரமத்தி வேலூர் உணவகத்தில் வாங்கி சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழந்ததை அடுத்து தமிழக முழுவதும் உணவகங்களில் அதிரடி சோதனையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர்.
அப்படி சோதனை செய்தபோது தரமற்ற உணவு இருந்ததாக ஒரு சில உணவகங்கள் மீது அபதாரம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர்.
அதையடுத்து
கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி சட்டம் தன் கடமையை செய்யும்” -என ஹோட்டல்களுக்கு திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி விஜய லலிதா அம்பிகை எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அப்போது கூறிய போது
திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில கடைகள் செய்யும் தவறினால் மற்ற கடைகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் மீண்டும் தவறுகள் செய்யும் பட்சத்தில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். ஒவ்வொரு கடைகளிலும் உணவுகள் முறையான பாதுகாப்பின்றி கிடப்பதை பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.
கறிக்கடைகளில் பயன்படுத்தும் பொருட்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும். தனி ஒழுக்கம் என்பது கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் இறைச்சி வாங்கும்போது இலைகளில் கட்டி வாங்க வேண்டும் அல்லது பாத்திரங்களில் வாங்கிச் செல்ல வேண்டும்.மேலும் வீடுகளில் மக்கள் சமைக்கிற போது அன்றன்று வாங்கிய இறைச்சிகளை அன்றே சாப்பிட்டு முடிக்க வேண்டும். அதை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து குழந்தைகளுக்கு காலை பரிமாறுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
உணவுக் கூடங்களில் இரவு மீதமுள்ள உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து காலை அதே உணவுகளை சமைத்து பரிமாறுதல் மிகவும் ஆபத்தானது. இதை மீண்டும் மீண்டும் செய்தால் சட்டம் தன் கடமையை செய்யும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
1.கடைகளில் பயன்படுத்தும் ஆயில் டின்களில் உரிய தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட விவரங்கள் இருக்க வேண்டும்.
2.ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தாமல் மறு சுழற்சிக்கு பயோ டீசலாக மாற்ற விற்பனை செய்ய வேண்டும்.
3.எண்ணை, மாவு, காய்கறிகள் இவை அனைத்தும் தரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
4.உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு துணிப்பை மற்றும் காகித கப் போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
5.குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் விழிப்புணர்வு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
6.தள்ளுவண்டி கடைக்காரர்கள் சுத்தமான முறையில் உணவை வழங்க வேண்டும்.
7.இறைச்சி விற்பனை செய்கிறவர்கள் ஆடு வதைக்கூடத்தில் கால்நடை மருத்துவரின் சான்றிதழுடன் வதை செய்ய வேண்டும். இதனை மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
7.எண்ணெய் நிறுவனங்கள் எந்த வித கலப்படமின்றி விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
கலப்பட டீத்தூள், பிளாஸ்டிக் பை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்றவற்றை விற்பனை செய்வது தெரிந்தால்,
கலப்படம் மற்றும் உணவு பொருள் தரம் குறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியின் எச்சரிக்கையை காற்றில் பறக்க விட்டு பேக்கரி டீக்கடை உணவகங்களின் உரிமையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் விதிகளை மதிக்காமல் நடைமுறைப்படுத்தாமல் எப்போதும் போல் தரமற்ற உணவு வகைகளை விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
திருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள உடுமலை ,பல்லடம் தாராபுரம் காங்கேயம் வெள்ளக் கோயில் ஆகிய நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதி லட்சம் குடும்பங்கள் வசித்து வருக்கின்றனர். மேலும் இந்தப் பகுதிகளில் தொழிலாளர்களும் அதிக அளவில் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார நெடுஞ்சாலைகளில் அதிகமான பேக்கரிகள் உணவகங்கள் இருக்கிறது . தொழிலாளிகள் இந்த பகுதியில் உள்ள பேக்கரிகள் மற்றும் டீக்கடை உணவகங்களில் அதிக அளவில் உணவு வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பல பேக்கரி மற்றும் உணவக உரிமையாளர்கள்
பல்வேறு இடங்களில் சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும் குறிப்பாக டீக்கடை பேக்கரி உணவகங்களில் பயன்படுத்தும் என்னை மிகவும் தரமற்ற தாகவும் அதுவும் ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை வடை மற்றும் தோசை புரோட்டோ போன்றவைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் இதனால் இந்த உணவை வாங்கி சாப்பிடும் பல கூலித் தொழிலாளிகளுக்கு வயிற்று வலியால் மிகவும் பாதிக்கப்பட்டு அவர்கள் உடல் மிகவும் சோர்வடைந்து காணப்படுவதாகவும் அவர்களால் வேலை செய்யும் இடத்தில் சோர்வடைந்து காணப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் டீக்கடை பேக்கரி உணவகங்களில்
காலாவதியான தின்பண்டங்களை தீங்கு விளைவிக்கும் வகையில் விற்பனை செய்து வருகின்றனர். பல டீக்கடைகளில் கலப்பட டீ தூளும்- பயன் படுத்தப்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற முறை இந்த உணவுகளை பொதுமக்கள் உண்பதால் வாந்தி, வயிற்றுப்போக்கு உள் பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு விற்பனையாளர்கள் இருக்கின்றனர் இதில் 5000க்கும் மேற்பட்ட உணவு விற்பனை அவர்கள் முறையான அனுமதி பெறவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் உரிய அனுமதி பெறாமலும் இயங்கி வருகின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
இது சம்பந்தமாக பகுதியில் விசாரித்த போது பல உணவகங்கள் பேக்கரி டீக்கடை உரிமையாளர்கள் சேர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மாதம் சுமார் ஐந்து லட்சம் வரை லஞ்சமாக கொடுத்து வருவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
எது எப்படியோ உயிர்களை துச்சமாக நினைத்து பணத்திற்காக மட்டுமே உணவகங்களை நடத்தும் உரிமையாளர்கள் மீது
பொது மக்களின் நலன் கருதி சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பெயரளவுக்கு மாதத்தில் ஒன்று இரண்டு கடைகளுக்கு ஆய்வு மேற்கொண்டு கண்துடைப்பு நாடகம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் கடை உரிமையாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலப்படம் இல்லாத பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த முடியும் .
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆய்வு என்ற பெயரில் கண் துடைப்பு நாடகம் நடத்தி மெத்தனப் போக்கை கடைபிடித்து வந்தால் இது போன்ற குற்றச்செயல்கள் நடந்து கொண்டே தான் இருக்கும் என்பதுதான் நிதர்சனம். .
வணிக உணவு நிறுவனங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்பதற்காக
திருப்பூர் ஓட்டல் சங்க நிர்வாகிகள் உணவு நிறுவனங்களில் பார்சல் வாங்க பாத்திரங்கள் கொண்டு வரும் நுகர்வோருக்கு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வழங்குவதாகவும் தெரிவித்தனர். அதையெல்லாம் தற்போது செயல்படுத்தி வருகிறார்களா என்பதை
திருப்பூர் ஓட்டல் சங்க நிர்வாகிகள் மனசாட்சிக்கு விட்டு விடலாம்.
சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டின் மீது திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்.
.