பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாக சீர்கேட்டால் திறந்தவெளி கழிப்பிடமாக மாறிவரும் வாரச்சந்தை பகுதி! சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் நகரங்களில் பொன்னமராவதியும் ஒன்று. பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. தி.மு.க.வை சேர்ந்த சுந்தரி அழகப்பன்

பொன்னமராவதி பேரூராட்சி தலைவராக இருக்கிறார்.

15 வார்டுகளும், 164 தெருக்கள் உள்ளன.பொன்னமராவதி வட்டாரம் ஆலவயல், கண்டியாநத்தம், கல்லம்பட்டி, நகரப்பட்டி, அம்மன்குறிச்சி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தோட்ட விவசாயமே பிரதான தொழிலாக உள்ள நிலையில், விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய உழவா் சந்தை இருந்தால் போதிய விலை கிடைக்கும் என்பதாலேயே பொதுமக்களின் நீண்ட நாள் வலியுறுத்தலுக்கு பிறகு சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதியின் முயற்சியால் பொன்னமராவதி-திருப்பத்தூா் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகே உழவா் சந்தை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு,

கடந்த 04-09-2023-இல் திறப்பு விழா நடைபெற்றது.60 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கான 16 கடைகள், அலுவலகம், கழிப்பறைகளுடன் கூடிய இந்த உழவா் சந்தையை அமைச்சா் எஸ்.ரகுபதி திறந்துவைத்தாா். தொடக்கத்தில் 16 கடைகளில் வியாபாரம் செய்ய 16 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு 16 கடைகளும் செயல்பட்டு வந்தன. ஆனால், 1 மாத காலத்தில் போதிய வியாபாரமின்றி அது 6 கடைகளாக குறைந்தது. அதையடுத்து சில மாதங்களில் 2 கடைகளாக குறைந்து தற்போது கடைகள் இல்லாமல் உழவர் சந்தை திறந்தவெளி பொதுக்களிப்பிடமாக மட்டுமே தற்போது உள்ளது. ஆகையால் பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட 42 ஊராட்சி மக்களும் பயன்பெறும் வகையில் உழவா் சந்தையை விரிவாக்கம் செய்து, கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதில் விவசாயிகளுக்கு கூடுதல் கடைகளும், சாலையோர வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய கடைகள் வழங்கியும் மேம்படுத்த மாவட்ட ஆட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் பொன்னமராவதி பஸ் நிலையம் கிழக்குப்புறம் செவ்வாய் சனிக்கிழமைகளில் நடக்கும் வார சந்தைக்கு புதுக்கோட்டை. சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த சந்தைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் சந்தை அமைந்துள்ள பகுதியில் பொதுமக்களுக்கான கழிப்பறை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதி இல்லை எனவும் அது மட்டும் இல்லாமல் சந்தை இயங்கி வரும் பகுதி

திறந்தவெளி கழிப்பிடமாக பொதுமக்கள் பயன்படுத்தி வருவதாகவும் .மட்டுமில்லாமல் சந்தை செயல்படும் பகுதிகளில் கழிவுநீர் சூழப்பட்டு சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் சந்தைக்கு காய்கள் வாங்கச்செல்லும் பொதுமக்களுக்கு டெங்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது மட்டும்

இல்லாமல்சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் வாரச்சந்தை கட்டிடம் கட்டப்பட்டு கடந்த இருண்ட வருடங்கள் ஆகியும்

பணி முழுமை அடையாத நிலையில் பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாகம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் அருகே உள்ள கழிப்பறை கட்டிடம்

பராமரிப்பு இன்றி சுகாதாரமற்ற மோசமான நிலையில் இருப்பதால் அப்பகுதி முழுவதும்

துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதிகளில் பொதுமக்கள் வந்து செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது சம்பந்தமாக பலமுறை பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் அண்ணாதுரை மற்றும் பேரூராட்சி தலைவர் அலட்சிய போக்கை கடைபிடித்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள் ஆளாகி இருப்பதாகவும் சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சியில் தமிழகத்திலே முதல் முறையாக 2020 ஆண்டு குப்பைகள் தினசரி வீடு வீடாக தரம் பிரிதது சேகரம் செய்வதை டிஜிட்டல் கார்டு மூலம் மின்னணு முறையில் கண்காணிக்கும் மென்பொருள் யூனிக் டெக்னாலஜி நிறுவனர் ராஜ்குமார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு அப்போது இருந்த பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவு க்கரசு மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி ஆகி யோரால் பொன்னமராவதி பேரூராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது பொன்னமராவதி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் உள்ள கழிவு குப்பைகளை கொண்டு வந்து வளம் மீட்பு பூங்காவில் கொட்டப்பட்டு குப்பை கொட்டும் கிடங்காக மட்டுமே இருப்பதாகவும் ஆனால். பொன்னமராவதி பேரூராட்சியின் வளம் மீட்கும் பூங்காவில் தரம் பிரிக்கும் கட்டிடம், மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் மையம், பிளாஸ்டிக் குப்பைகளை அரைக்கும் எந்திரம், மாதிரி காய்கறி தோட்டம், பூந்தோட்டம் போன்ற எதுவுமே இல்லாமல் செயல்படாமல்

வெறும் குப்பை கொட்டும் கிடங்காக மட்டுமே செயல்பட்டு வருகிறது.
.15 வார்டுகளில் இருந்து தினமும் சேகரமாகும் குப்பைகள் தரம் பிரித்து, மறு சுழற்சி செய்யப்பட வேண்டும்.மக்கா குப்பைகளை மறுசுழற்சி செய்து விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகை, அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும். ஆனால் வளம் மீட்பு பூங்காவை பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாகம் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டதால் அங்கு கொட்டப்படும் கழிவு குப்பை மலை போல் தேங்கி கிடப்பதால் வளம் மீட்பு பூங்காவை சுற்றி இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் குடியிருப்பு பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதாகவும் இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்களை உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும். அது மட்டும் இல்லாமல் பேரூராட்சி நிர்வாகம் அவ்வப்போது குப்பைகளை தீ வைத்து வருவதால் குப்பைகளில் இருந்து வரும் புகை மூட்டத்தால் பகுதி முழுவதும் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகையால் பொதுமக்கள் நலன் கருதி செயலற்று கோமாவில் இருக்கும் பொன்னமராவதி பேரூராட்சியை மீட்டெடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை!!