போலி இணையதள வர்த்தகம் மூலம் முன்னாள் ராணுவ வீரரிடம் 45 லட்சம் ரூபாய் மோசடி !குற்றவாளிகளை மேற்கு வங்கத்தில் தட்டி தூக்கிய நீலகிரி மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல்துறை!
நீலகிரி மாவட்டம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 03/08/2024 அன்று நீலகிரி வெல்டிங்டன் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் 45 லட்சம் ரூபாய் பணத்தை (ஆன்லைன் டிரேடிங்) இணையதளம் வர்த்தகம் மூலம் முதலீடு செய்துள்ளார்.ஆனால் அந்த இணையதள வர்த்தகம் போலியானது என்றும் தான் 45 லட்சம் ரூபாய் ஏமார்ந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் நீலகிரி மாவட்டம் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 03/08/2024 அன்று புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரின்படி நீலகிரி சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர்( குற்ற எண்.12/2024 US/318 4. BNS r/w/66D IT Act 2000) வழக்கு பதிவு செய்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தர ராஜன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் பிரவீனா தலைமையில் தனிப்படையினர் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததாக புகார் கொடுத்த நபர் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் பணம் செலுத்திய வங்கிக் கணக்கிலிருந்து பலமுறை முதலீடு செய்த வங்கிக் கணக்கின் உரிமையாளர்கள் யார் என விசாரணை மேற்கொண்டபோது அந்த வங்கிக் கணக்கின் உரிமையாளர்கள் மேற்கு வங்கம் ஹவுரா பகுதியை சேர்ந்த சைலேஷ் குப்தா (56) ருஷ்தம் அலி (37)
என தெரிய வந்ததன் அடிப்படையில் அடிப்படையினர் மேற்குவங்கம் ஹவுரா பகுதிக்கு சென்று மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் 23/12/2024 அன்று கைது செய்து அவர்கள் இருவரையும் நீலகிரி மாவட்டம் அழைத்து வந்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். போலி ஆன்லைன் வர்த்தக மோசடி நபர்களை புனிதமாக கண்டுபிடித்த சைபர் கிரீம் குற்றப்பிரிவு காவல் துறையினரை பாராட்டிய நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கூறியபோது பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆன்லைன் வர்த்தகத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் அதிக பணத்திற்கு ஆசை போலியான இணையதள வர்த்தகங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்றும் தெரியாத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசியில் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் உங்களுடைய சுய விவரங்களை பகிர வேண்டாம் என்றும் அதுமட்டுமில்லாமல் வெளி மாநில காவல் துறையினர் பேசுவதாக whatsapp வீடியோ அழைப்புகளில் வந்து இணைய வழியில் கைது செய்திருப்பதாக கூறி அதிலிருந்து உங்களை விடுவிக்க வேண்டும் என்றால் அவர்கள் கூறும் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புமாறு கூறினால் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டாம் என்றும் சந்தேகப்படும்படி யாராவது தங்களுக்கு இது போன்ற அழைத்து பணம் கேட்டால் அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் உடனடியாக தகவல் கொடுக்குமாறும் அதுமட்டுமில்லாமல் சைபர் குற்ற பிரிவு கட்டணமில்லா தொலைபேசி 1930 எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்படியும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் இது போன்ற அழைப்புகளை கண்டு அஞ்சாமல் கணினிசார் குற்றப் பிரிவு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.* இது போன்ற அழைப்புகளை துண்டித்து விட்டு குறிப்பிடப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு அழைப்பவரின் அடையாளத்தை உறுதி செய்யவும் . தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் தொலைபேசியில் அளிக்காதீர்கள்.* மோசடி செய்பவர்கள் நமக்கு யோசிக்க நேரமளிக்காமல் அவசரமான சூழலில் இருப்பதாக நம்ப செய்வர். நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து செயல்படவும்.* சைபர் மோசடிகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத்தந்திரங்களை தொடர்ந்து அறிந்து வைத்திருங்கள். குற்றம் நடைபெறாமல் தடுக்க விழிப்புடன் இருப்பது முக்கியம்.* உங்கள் வங்கி மற்றும் கடனட்டை கணக்குகளில் அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதும் உள்ளதா என தவறாமல் சரிபார்க்கவும்.* முக்கியமான கணக்குகளில் இரு காரணி பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.* மேலும், பொதுமக்கள் தங்களது வங்கிக்கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது போன்ற கணக்குகள் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும் என
பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம். ஆகவே பொதுமக்கள் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு தங்களது பணத்தை போலி இணைய வர்த்தகங்களில் முதலீடு செய்யாமல் இருப்பதை வைத்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் இதுவே நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் .