அரசியல்

மக்களை பாதுகாக்க ஒன்றிய அரசை கண்டித்து டிச 10ந்த்தேதி 10 நிமிடம் வாகங்களை நிறுத்துவோம் – சிஐடியு

மக்களை வதைக்கும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 10ஆம் தேதி 10 நிமிடம் வாகனங்களை நிறுத்துவோம் என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றமும் அதனால் ஏற்படும் இதர பொருட்களின் விலையேற்றமும் ஏழை, நடுத்தர குடும்பங்களை கடுமையாக பாதித்து வருகிறது.

பெட்ரோலியப் பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயிப்பதை மாற்றி அன்றாட சந்தை விலையோடு இணைத்தபோது கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன் பலன் மக்களுக்கு கிடைக்கும் என்றார்கள். ஆனால் கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்த போதும் கூட ஒன்றிய அரசு கலால் வரியை ஏற்றி அந்த பலனை தானே அபகரித்து கொண்டது. 1 லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி 33 ரூபாய். 1 லிட்டர் டீசலுக்கு கலால் வரி 32 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது தவிர மாநில அரசின் வரிகள், ஒன்றிய அரசின் சிறப்பு தீர்வை வசூலிக்கப்படுகிறது.

சமையல் எரிவாயுவுக்கு ஒரு வருடத்தில் 604 ரூபாயில் இருந்து 915 ரூபாயாக விலை ஏற்றப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டு கலால் வரி மூலம் அரசுக்கு கிடைத்தது 99,000 கோடி ரூபாய். தற்போது கலால் வரி மூலம் கிடைத்துள்ள ஆண்டு வருமானம் 3.73 லட்சம் கோடி ரூபாய். கடந்த 7 ஆண்டுகளில் கலால் வரி 277 விழுக்காடு உயர்ந்துள்ளது. இப்படி மக்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் தான் பெரும் பெருமுதலாளிகளுக்கு தூக்கிக்கொடுக்கப்படுகிறது.

பெட்ரோல் விலை 1 லிட்டர் 65 ரூபாய்க்கு. டீசல் விலை 1 லிட்டர் 55 ரூபாய்க்கும் சமையல் எரிவாயு விலை 500 ரூபாய்க்கு கீழ் குறைக்க வேண்டும்.நம்மிடம் பெட்ரோலியத்தை வாங்கி விற்கும் நேபாளத்தில் கூட பெட்ரோலிய விலை நம்மைவிட குறைவாக உள்ளது. பெட்ரோல் டீசல் . சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு முழுவதும் 10 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. டிசம்பர் 10 ஆம் தேதி பகல் 12 மணி முதல் 12.10 வரை 10 நிமிடங்கள் வாகனங்களை ஆங்காங்கே சென்று கொண்டிருக்கும் இடங்களில் நிறுத்தி எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என வாகன உரிமையாளர்களையும், வாகன ஓட்டுநர்களையும் கேட்டுக் கொள்கிறோம். தேசத்தை காக்கும் இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் தமிழகத்தில் உள்ள பல பஞ்சாலைகளில் கொத்தடிமை முறையில் பெண்கள் பணி செய்து வருகின்றனர். மாநில அரசு தானாக முன்வந்து எல்லா பஞ்சாலை மற்றும் வர்த்த நிறுவனங்களில் உரிய முறையில் ஆய்வு செய்து கொத்தடிமை தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ 26 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த முறை பணிகளை ஒழித்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், போக்குவரத்துறையில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத்தொகை மாநில அரசு போக்குவரத்துறைக்கு வழங்கவேண்டும் என சிஐடியு, தொமுச தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாணவர், மாதர்கள், , மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்துகளில் சலுகை வழங்குவது ஒரு ஆக்கப்பூர்வமான சமூக பணியாகும், மக்களின் நலனுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கையில் நட்டம் ஏற்பட்டால் அதனை அரசு ஈடுசெய்ய வேண்டும், டாஸ்மாக் விற்பனை நேரத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது சிஐடியு பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன், துணைப் பொதுச்செயலாளர்கள் வி.குமார், கே.திருச்செல்வம், துணைத் தலைவர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button