மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் பேசும் மதுரை மாவட்ட ஆட்சியர் RDO, DRO மூன்று பேருக்கும் காதுகள் கேட்பதில்லையோ மக்கள் குமுறல்!கவனத்தில் கொள்வாரா தமிழக முதல்வர்!?
ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டிற்க்கு ஆளுநர் எதற்கு !? ஆளுநர் தேவையில்லை!!
அதேபோல் மாவட்டங்களுக்கு RDO DRO இந்த இரண்டு பேரும் தேவையில்லை மக்கள் குமுறல்!கவனத்தில் கொள்வாரா தமிழக முதல்வர்!?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் ஒப்புதலுடன் கொண்டு வரப்படும் சட்ட மசோதாக்கள் மீது ஒப்புதல் வழங்க மனமில்லாமல் காலதாமதம் செய்து மக்களை வஞ்சிக்கும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக ஆளுநரை போல
தமிழகத்தில் உள்ள மாவட்ட RDO DRO அலுவலகத்தில் உள்ள மனுக்கள் மீது தீர்வு காணாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டு பொதுமக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பகிரங்கமாக குற்றச்சாட்டு?
தமிழ்நாட்டில் தற்போது பல உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழக சட்டமன்றத்தில் அவசர சட்டம் இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தமிழக ஆளுநர் வஞ்சித்து வருவதாகவும் மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள் பேசி வரும் நிலையில் வாய் பேசும் ஆளுநருக்கு காதுகள் கேட்கவில்லையோ என்று தமிழக முதல்வர் தனது காட்டமான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கள ஆய்வில் முதல்வர் :
சில தினங்களுக்கு முன்பு மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டப் பணிகளை கள ஆய்வு செய்தார். ஆனால் இதனால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். ஏனென்றால் ஐந்து மாவட்ட ஆட்சியாளர்கள் அலுவலகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் எத்தனை.
தீர்வு காணப்பட்ட மனுக்கள் எத்தனை. அப்படி தீர்வு காணப்பட்ட மனுக்கள் எப்போது கொடுக்கப்பட்டது. தீர்வு காணப்படாத மனுக்கள் எப்போது கொடுக்கப்பட்டது என்பதை முதல்வர் கள ஆய்வில் எடுத்து வைத்திருந்தால் முதல்வருக்கு தெரிந்து இருக்கும் ஐந்து மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டின் உண்மை நிலை தெரிந்து வந்திருக்கும்.
ஐந்து வருடமாக பட்டா வழங்காமல் இழுத்தடிக்கும் மதுரை மாவட்ட வருவாய் துறை நிர்வாகம். தேசிய நெடுஞ்சாலை துறை திண்டுக்கல் கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக மதுரை மாவட்ட வாடிப்பட்டி தாதம்பட்டி கிராமத்தில் உள்ள நஞ்சை நிலங்களை மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் மூலம் நிலத்தை எடுத்துக்கொண்டது. அதன் பின்பு நீதிமன்றம் மூலம் நிலத்திற்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.ஆனால் நான்கு வழிச்சாலைக்காக சப் டிவிஷன் செய்யப்பட்டு நிலத்தை எடுத்த பிறகு மீதமுள்ள நிலத்திற்கு பட்டா வழங்காமல் 10 ஆண்டுகளாக மதுரை மாவட்ட வருவாய் நிர்வாகம் அலட்சிய போக்கை கடைபிடித்து வருகிறது
இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் udr பட்டா சர்வே எண்ணில் வேறு பெயர்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.25 வருடம் முன்பு பத்திரப்பதிவு செய்துள்ள நிலத்தின் உரிமையாளர் பெயர் இல்லாமல் தற்போது உயிரோடு இல்லாத மூன்று நபர்கள் பெயர் எப்படி அதில் வந்தது. கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடந்த குளறுபாட்டை மறைப்பதற்காக விசாரணை என்ற பெயரில் கிராம நிர்வாக அலுவலர் தாசில்தார் ஆர்டிஓ இவர்கள் மூன்று பேரும் கண்துடைப்பு நாடகம் செய்து வருவதாக பத்திரிக்கையில் செய்து வந்தது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் வாடிப்பட்டி தாதம்பட்டி கிராம நிர்வாக அலுவலருக்கு விசாரணை செய்ய தொலைபேசி மூலம் கூறியுள்ளார். தாதம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் எங்கோ இருந்து கொண்டு தலையாரியை அனுப்பி ஒரு சிறு காகிதத்தில் பெயரை எழுதிக் கொடுத்து விசாரித்து வரச் சொல்கிறார். கொண்டு வந்த காகிதத்தில் நான்கு பெயர்கள் இருந்தது அதில் சம்பந்தமே இல்லாத விஜி என்ற பெயர் எழுதி விஜி என்ற பெயரை எப்படி கிராம நிர்வாக அலுவலர் எழுதி கொடுத்து அனுப்புகிறார் என்று சம்பந்தமில்லாத நபர்களை எழுதி விசாரிக்க சொன்னால் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த விசாரணை முடிவடையாது. பட்டா வழங்குவதற்கு UDR இல் தவறாக இருக்கும் நபர்களின் இறந்த சான்றிதழ்கள் கொடுத்தும் இறந்தவர்களை எத்தனை முறை விசாரிப்பார்கள் என்று தெரியவில்லை .அதுவும் கிராம நிர்வாக அலுவலர் நேரில் வருவதில்லை தலையாரியை அனுப்பி விசாரித்து வருகிறார் . அதிலும் இல்லாத பெயர் ஒன்றை எழுதி அனுப்பி விசாரிக்க சொல்வது சட்டத்துக்கு புறமானதுபுறம்பான பெரிய ஊழல் முறைகேடு சட்டப்படி குற்றம். அதற்காகவே கிராம நிர்வாக அலுவலர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கலாம்.
அதைவிட ஒரு பெரிய குளறுபடி வாடிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்தது தனக்கு வீடு இல்லை என்று இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஒரு நபர் மனு கொடுத்ததற்கு வாடிப்பட்டி தாசில்தார் தாதம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அவர்களை விசாரிக்க கூறியுள்ளார். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் விசாரிக்காமல் அருகில் தலையாரியிடம் கேட்டுள்ளார் அவர் மனுதாரருக்கு சொந்த வீடு இருக்கின்றது என்று கூறிய பதிலைக் கேட்டு தாசில்தாருக்கு விசாரணை அறிக்கை அனுப்பி உள்ளார். தாசில்தார் மனுதாரருக்கு உங்களுக்கு சொந்த வீடு இருப்பதால் இலவச வீட்டு மனை பட்டா கொடுக்க முடியாது என்று பதில் அனுப்பி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனுதாரர் பத்திரிக்கை அலுவலகத்தில் தகவல் கொடுத்தார் இது சம்பந்தமாக தாசில்தார் இடம் விசாரித்த போது விஏஓ தவறு செய்துவிட்டார் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார் ஆனால் கிராம நிர்வாக அலுவலர் பத்திரிகை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு சார் தெரியாமல் நடந்துவிட்டது அதற்கு மன்னிப்பு கேட்கிறேன் இனிமேல் அதுபோல் தவறு நடக்காது என்றும் தலையாரி தவறாக சொல்லிவிட்டார் என்று மன்னிப்பு கேட்ட வரலாறும் மதுரை மாவட்ட வாடிப்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் கிராம நிர்வாக அலுவலர்கள் யாரும் நேரில் மனுதாரர்களிடம் சென்று விசாரணை நடத்துவதில்லை என்பது தான் நிதர்சனம் . அதுமட்டுமில்லாமல் வாடிப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் பட்டா வழங்குவதற்கு 5000 முதல் ஒரு லட்சம் வரை லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் ஆக பணியில் இருக்கும் விக்ரம் என்ற நபர் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து தற்போது வரை மூன்றாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இருப்பதாகவும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பட்டா வழங்கி வருகிறார் என்றும் இல்லையென்றால் அவரை நேரில் சென்று பார்க்கவே முடியாத அவல நிலைதான் தற்போது உள்ளது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால் மாவட்ட ஆட்சியாளர் இதையெல்லாம் கண்டு காணாமலும் வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள நில அளவையர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையை அளிக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கணவர் இறந்ததால் அவர்பெயரில் உள்ள நிலத்திற்கு வாரிசு அடிப்படையில் பட்டா கேட்டு மனு கொடுத்த மனுவுக்கு தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விசாரணை என்ற பெயரில் காலதாமதம் செய்து கொண்டு அலட்சியப் போக்கை கடைபிடித்து வரும் மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமலா. இதேபோன்று ஆயிரக்கணக்கான மனுக்கள் விசாரணை என்ற பெயரில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
ஆகையால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இந்த ஒரு மனு முதல்வர் கவனத்திற்கு போதும் என்று சமூக ஆர்வலர் நினைக்கிறார்கள்.
அதேபோல் தற்போது தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியர்களுக்கும் (district collector) மாவட்ட வருவாய் அலுவலர் ( district revenue officer )மற்றும் வருவாய் கோட்டாட்சியர் (Revenue Divisional Office) இவர்கள் மூன்று பேரும் பேசுவதைப் போல் இவர்களுக்கு காதுகள் கேட்பதில்லை என்று பொதுமக்கள் பகிரங்கமாக குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக கிடப்பில் போடுவது போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் இவர்கள் மூன்று பேரும் தீர்வு காணாமல் கிடப்பில் போட்டு பொதுமக்களை அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது!
கடந்த அதிமுக ஆட்சியில் கொடுத்த புகார் மனுக்களுக்கு தற்போது திமுக ஆட்சி வந்த பிறகும் இரண்டு வருடங்களாக தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள் உள்ள ஆட்சியாளர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் இவர்கள் மூன்று பேரும் இதுவரை தீர்வு காணவில்லை என்று பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் வருவாய்த்துறை நிர்வாகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை என்றால் ஏதோ விரோதிகள் போல் பார்க்கின்றனர். லஞ்சம் தலை விரித்து ஆடுவதாக குற்றம் சாட்டுகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் கொடுத்த புகார் மனுக் களுக்கு இதுவரை விசாரணை என்ற பெயரில் கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியாளர் வரை கண்துடைப்பு நாடகம் நடத்தி வந்து பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வைத்துக் கொண்டுள்ளனர். பத்து ஆண்டுகளுக்குப் பின்பு ஆட்சியில் வந்திருக்கும் திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரிய பாதிப்பை வருங்காலத்தில் ஏற்படுத்தும் என்று பொதுமக்களின் ஆதங்கமாகும்.
கள ஆய்வில் முதல்வர் : சில தினங்களுக்கு முன்பு மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். ஆனால் இதனால் பொதுமக்களுக்கு என்ன!? எந்த ஒரு பயனும் இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். ஏனென்றால் மாவட்ட ஐந்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் எத்தனை.
தீர்வு காணப்பட்ட மனுக்கள் எத்தனை. அப்படி தீர்வு காணப்பட்ட மனுக்கள் எப்போது கொடுக்கப்பட்டது. தீர்வு காணப்படாத மனுக்கள் எப்போது கொடுக்கப்பட்டது என்பதை முதல்வர் கள ஆய்வில் எடுத்து வைத்திருந்தால் முதல்வருக்கு தெரிந்து இருக்கும் ஐந்து மாவட்ட ஆட்சியாளர்களின் அவல நிலையை. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத லட்சக்கணக்கான கோரிக்கை மனுக்கள் கடந்த இரண்டு வருடங்களாக கொடுத்து வருகின்றனர். இதில் பல லட்சம் கோரிக்கை மனுக்களை ஒரு நபர் பத்து முறை 20 முறையாவது மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் தினத்தில் கொடுத்து வருவதாகவும் அந்த கோரிக்கை மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .இதில் முக்கியமாக வருவாய்த் துறையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் முதல் தாசில்தார் RDO DRO இவர்களை பொதுமக்கள் நேரில் சந்திக்க வேண்டும் என்றால் குறைந்தது பத்து முறையாவது அலுவலகத்திற்கு அலைக்கழிக்கப்பட்டு அதன் பின்னர் முதல்வர் வரை கோரிக்கை மனு வழங்கிய பின்பு தான் கிராம நிர்வாக அலுவலர் கோரிக்கை மனுவை பெற்றுக் கொள்வார்கள்.
அதன் பின்பு மனுவின் மீது கிராம நிர்வாகம் அலுவலர்கள் விசாரணைக்கு அழைப்பு கொடுப்பார்கள் . மனு கொடுத்த பொதுமக்கள் காலையில் சாப்பிடாமல் கொள்ளாமல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் காத்திருப்பார்கள் ஆனால் கிராம நிர்வாக அலுவலர் அவருக்கு சன்மானம் கிடைக்கும் இடங்களுக்கு சென்று விட்டு அதன் பின்பு பூட்டி இருக்கும் தன்னுடைய அலுவலகத்திற்கு வருவார் . அலுவலகத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர்கள் விசாரணைக்கு அழைத்த பொதுமக்களிடம் மனுவில் கொடுத்த ஆவணங்களை எல்லாவற்றிலும் நகல் ஒன்று கேட்பார். உடனே அந்த பாமர பொதுமக்கள் எதுவுமே பதில் பேசாமல் நகல் எடுத்துக் கொடுப்பார்கள்
அதைப் பெற்றுக் கொண்டு நாங்கள் மறுபடியும் அழைக்கிறோம் என்று அனுப்பி விடுவார் கிராம நிர்வாக அலுவலர்.அதன் பின்பு எந்த பதிலும் வரவில்லை என்று மனு கொடுத்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு காலையிலிருந்து தனக்கு கப்பம் கட்டுபவர்களை அழைத்து அறையில் உட்கார வைத்து ஆலோசனை என்ற பெயரில் நேரத்தை வீணடித்து அதன் பின்பு தன்னுடைய உதவியாளரை அழைத்து காத்திருக்கும் பொது மக்களிடம் மாவட்ட ஆட்சியாளர் மீட்டிங்கு RDO செல்கிறார் என்றும் நீங்கள் நாளை வாருங்கள் என்று சர்வ சாதாரணமாக சொல்லி அனுப்பி விடுவார்கள்.இதுபோன்று பத்து முறையாவது சொல்லி அனுப்புவார்கள் என்பது தான் நிதர்சனம்.அதன் பின்பு செய்வதறியாத பொதுமக்கள் மறுபடியும் தங்கள் கோரிக்கை மனு மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் மனு கொடுப்பார்கள் . உடனே மாவட்ட ஆட்சியர் அலுவலர் ( Revenue Divisional Office ) அவர்களை விசாரணை நடத்த உத்தரவு உடனே பொதுமக்களின் கோரிக்கை மனு மீது தாசில்தாரிடம் விளக்கம் கேட்பார் தாசில்தார் கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய இது குறைந்தது ஒரு வருடம் அதன் பின்பு தாசில்தார் ஆர்டிஓ அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்வார் அதன் பின்பு ஆர்டிஓ மனுதாரரை விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்புவார் ஆர்டிஓ விசாரணைக்கு அழைத்து விட்டாரே என்று மறுபடியும் பாமர ஏழை பொதுமக்கள் காலையில் எழுந்து சாப்பிடாமல் கொள்ளாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பார்கள் . ஆனால் அங்கேயும் சன்மானம் கொடுக்கும் முக்கிய புள்ளிகள் உடன் ஆர்டிஓ ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பார்.காலையிலிருந்து மாலை வரை காத்திருந்த பொது பொதுமக்களை ஆர்டிஓ அலுவலக உதவியாளர் ஆர்டிஓ அவர்கள் மாவட்ட ஆட்சியாளர்கள் மீட்டிங் சென்றுள்ளார் என்று காத்திருக்க சொல்லுவார். ஆனால் மாவட்ட ஆட்சியாளரிடம் எந்த ஒரு ஆலோசனை கூட்டமும் நடக்காது.பொதுமக்களை ஏமாற்ற மாவட்ட ஆட்சியாளரிடம் ஆலோசனை என்ற ஒரு ஆயுதத்தை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி வருவார்கள் .மாலை ஐந்து மணிக்கு மேல் ஆர்டிஓ அலுவலக வாசலில் காத்திருக்கும் பொது மக்களிடம் பெயர் சொல்லி அழைப்பார்கள் . உள்ளே செல்லும் பொது மக்களிடம் ஆர்டிஓ உங்கள் கோரிக்கை மனுவை கொடுங்கள் என்று வாங்கி வைத்துக்கொண்டு நாங்கள் அழைக்கிறோம் என்று அனுப்பி அவ்வளவுதான் அதன் பின்பு அந்த கோரிக்கை மனு மீது எந்த ஒரு விசாரணை நடத்த சொல்லியும் உத்தரவு போட மாட்டார் மனு கொடுத்த பொதுமக்கள் இன்று நாளை என்று பல மாதங்கள் காத்திருந்தது தான் அதன் பின்பு பொதுமக்கள் முதல்வருக்கு கோரிக்கை மனு அளிப்பார்கள் . அங்கிருந்து ஒரு குறுஞ்செய்தி வரும் . உங்கள் மனு மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பதில் அதன்பின்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இருந்து மனுதாரரை அழைப்பார்கள் மறுபடியும் முதலிலிருந்து அனைத்து பேப்பர்களையும் கேட்டு வாங்கிக் கொள்வார்கள் . இது மட்டுமே வருவாய்த் துறையில் நடந்து வரும் சாவக்கேடு என்று கூட சொல்லலாம்.
தமிழகத்தில் எப்படி ஆளுநர் தேவை இல்லையோ அதேபோல் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஆர்டிஓ என்ற ஒரு பதவி தேவையில்லை என்று தான் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏனென்றால் ஆர்டிஓ என்ற பதவி மாவட்ட நீதிபதிக்கு சமம். ஏனென்றால் நீதிமன்றம் சென்றாலே ஆடியோ விசாரணைக்கு தான் நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது.அப்படி நீதிமன்றம் பரிந்துரை செய்யும் மிகப்பெரிய பொறுப்பான RDO பதவியை தமிழக ஆளுநர் எப்படி மசோதாவை கிடப்பில் போடுகிறாரோ அதேபோல் மாவட்ட ஆட்சியாளரின் அலுவலகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திலும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் கிடப்பில் போடப்படுகிறது . இதை யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாத எழுதப்படாத சட்டமாக உள்ளது என்பதுதான் நிதர்சனமாக உள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் ஆளுநர் என்ற பதவி தேவையில்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் விசாரணை அதிகாரியாக என்ற ஆர்டிஓ தேவையில்லை . இவர்கள் இரண்டு பேரும் இருக்கும் வரை தமிழகத்தில் ஆட்சி செய்யும் ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்திக் கொண்டே தான் இருப்பார்கள் என்பதுதான் நிதர்சனம்.
ஆட்சி மாறினாலும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் காட்சிகள் மாறவில்லை!