மதங்களின் அடிப்படையில் நாட்டை பிளக்கும் சதியில் ஈடுபட்டுள்ள காவிகளின் கொட்டத்தை அடக்குவோம்!! உங்கள் ஓட்டு ஊழலுக்கா!? உரிமைக்கா!?இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ML)

உங்கள் ஓட்டு ஊழலுக்கா!?உரிமைக்கா!?
மாமதுரை மாநகராட்சியை மக்களின் மாநகராட்சி ஆக்குவோம்!
ஊழலுக்காக பதவி என்ற நாகரீகத்தை முறியடித்து உரிமைகளுக்காகப் போராடுவதற்கே பதவி என்ற பாதையில் முன்னேறுவோம்!

மதுரை மாநகருக்கு ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்து என்று மோடியும் தமிழக ஆட்சியாளர்களும் கூக்குரலிட்டனர். ஆனால், மக்களுக்கு போக்குவரத்து நெருக்கடியும், தூசும் நோய்களும் பரிசாகக் கிடைத்தன. காண்ட்ராக்ட் எடுத்த கம்பெனிகளும், அதிகாரிகளும், மந்திரிகளும் சம்பாதித்துக்கொண்டனர்.
கண்மாய்களை மூடாத, வைகை சாக்கடையாக்காதா, விளையாட்டு திடல்களும், மரங்கள் அடர்ந்த பூங்காக்களுமே மக்களின் தேவை. கட்டுமான கம்பெனிகளுக்குத் கனவான ஸ்மார்ட் சிட்டி மறுப்போம்! மக்கள் மாமதுரையை அமைப்போம்!
மாடக்குளம் போன்ற மிச்சமுள்ள கண்மாய்களையும், நகருக்குள் உள்ள நீர்நிலைகள், கோவில் குளங்களையும் காத்து நிற்போம்! கிருதுமால் நதியை மீட்டெடுக்கத் திட்டம் உருவாக்குவோம்! வைகை சாக்கடை ஆவதைத் தடுத்திடுவோம்! கொசுக்கள் உருவாக்கத்தைத் தடுத்திடுவோம்!
நகரின் துப்புரவும் கழிவு நீர் வெளியேற்றமும் அரைகுறையாக இருப்பதற்கு முடிவு கட்டி அனைத்து மக்களின் ஆரோக்கியம் காப்போம்! துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி நிரந்தரம் செய்வோம்! ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு முடிவு கட்டுவோம்! பாதாள சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் யந்திரங்களை அதிகப்படுத்துவோம்! பாதாளச் சாக்கடையில் இறங்க உத்தரவிடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்போம்!
மாநகராட்சி நூலகங்களை அமைத்திடுவோம்! மாநகராட்சி பள்ளிகளை அதிகப்படுத்திடுவோம்! இருக்கும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவோம்! வார்டுகள் தோறும் மாநகராட்சி நூலகங்கள் அமைப்போம்!
மதுரையில் அரசுக் கல்லூரிகளை உருவாக்க போராடுவோம்! அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள், அரசிடமும் பணம் பெற்றுக்கொண்டு, மாணவர்களிடம் கொள்ளைக் கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்குத் தெருவில் இறங்கிப் போராடுவோம்! அரசு நிர்ணயம் செய்த கட்டணத்திற்கு கூடுதலாக வசூல் செய்யும் பள்ளிகளின் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்!
ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துவோம்! கர்ப்பிணி பெண்களுக்கான உதவி வழங்கும் திட்டத்தில் உள்ள ஊழலை ஒழிப்போம்!
மாநகருக்குள் குழுக் கடன் கம்பெனிகள் கொள்ளை அதிகரித்து வருகிறது. அதற்கெதிராக, அரசே குறைவான வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்று மாமன்றத்தில் குரல் எழுப்புவோம்! பெண்கள் அமைப்பாக்கி கடன் கம்பெனிகளின் அத்துமீறலை எதிர்த்து நிற்போம்!
மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பெற்றுத் தருவோம்…
மூன்றாம் பாலினத்தவருக்கான முன்னேற்ற குழு ஒன்றுஅமைத்து அவர்களுக்கான பிரச்சனைகள் சரிசெய்யப்படும்.
மாநகர மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்த வேண்டும் என்று குரல் கொடுப்போம்!
அனைவரும் நாட்டு குடிமக்கள்! மதங்களின் அடிப்படையில் நாட்டை பிளக்கும் காவிகளின் சதிக்கு இடம் தர மாட்டோம்!குடியுரிமை சட்டத் திருத்தங்களைக் கைவிடக் கோரி போராடுவோம்! ஹிஜாப் போன்ற ஆடைகளின் மூலம் வேறுபாடு/ வெறுப்பு காட்டுவதை எதிர்த்து நிற்போம்!
முஸ்லீம் சிறைக் கைதிகளையும், 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மாமன்றத்தில் குரல் கொடுப்போம்! போராட்டங்களைக் கட்டமைப்போம்!
வார்டு உறுப்பினராக வேண்டுவது ஊழல் நிர்வாகத்தின் பங்காளியாக இருப்பதற்காக அல்ல! மாறாக, வார்டு உறுப்பினர் பதவியைப் பயன்படுத்தி மாமன்றத்தில் குரல் எழுப்புவதும், மேலே சொன்ன பிரச்சனைகளுக்காக மக்களின் போராட்டங்களுக்கு வலு சேர்ப்பதுவே கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் பணி.
ஊழலை ஒழிப்போம்! மக்களுக்கான மாநகர நிர்வாகத்தை உருவாக்கும் போராட்டத்தைத் துவங்கிடுவோம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) (விடுதலை) CPI (ML) (L)
மதுரை மாநகர் போன் 94868 24491