மதுரை மாவட்டத்தில் கலைஞரால் அமைக்கப்பட்ட முதல் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைப்பு பணிக்காக முன்னறிவிப்பின்றி இடிப்பு!?உடைமைகளுடன் மரத்தடியில் தஞ்சம்!பாதுகாப்பு வழங்க வாடிப்பட்டி வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?

பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம்’ என்று தன் வாழ்வில் சமத்துவத்துக்காகப் போராடியவர் தந்தை பெரியார். “தோழமைதான் சமத்துவத்தின் கனி; சமதர்ம மணம்; அதைக் காண வேண்டுமானால் சாதி தொலைய வேண்டும்” என்றார் அறிஞர் அண்ணா. முன்னவர்கள் காட்டிய வழியில், சமூக மாற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுத்தது கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு சமூக அமைப்பில் சமத்துவம் நிலவும் வகையில் சமத்துவபுரம் திட்டத்தைத் தமிழகத்துக்குப் பரிசளித்தார்.
1997ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதியன்று தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலமாக, ஒரு மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது.

ஐந்து ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட 100 வீடுகள் . நிஇந்தக் குடியிருப்பில் இருக்கும். குடிநீர், சாலை, கல்விக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்டதாக, இவை உருவாக்கப்பட்டன. சமத்துவபுரம் அமைக்கும் இடத்திலெல்லாம் தந்தை பெரியார் சிலை நிறுவ முடிவானது. ஆனால், எந்த மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத் தலங்களுக்கும் சமத்துவபுரம் வளாகத்தில் இடமில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
வீடுகளை ஒதுக்குவதிலும் சமூகநீதி பின்பற்றப்பட்டது. ஆதிதிராவிடர்களுக்கு 40, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25, இதர சமூகத்தினருக்கு 10 என்று சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.
தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில், சாதிகள் ஒழித்து சமத்துவம் நிலவும் எண்ணத்தில், தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் சமத்துவபுரமானது மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் உருவானது. 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று திறந்து வைத்து உரையாற்றினார் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர். இதனைப் பயன்படுத்துபவர்கள் இங்கே அறிவினை வளர்க்கவும், நல்ல பிள்ளைகளை உருவாக்கவும் ஒத்துழைக்க வேண்டுமென்று அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். “சமத்துவபுரத்திலே குடியேறுகின்ற நீங்கள் காட்டுகின்ற ஒற்றுமை இந்த மாநிலத்திற்கும், நாட்டிற்கும் வழிகாட்டியாக அமைய வேண்டும். சமத்துவபுரங்கள் வளரட்டும். தமிழ்நாடே சமத்துவபுரமாக ஆகட்டும்! இந்தியத் திருநாடே சமத்துவபுரமாக ஆகட்டும்!” என்று அங்கு குடியிருந்த மக்களிடையே கலைஞர் பேசியது குறிப்பிடத் தக்கது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சமத்துவபுர வீடுகள் மறுசீரமைப்புக்கு196 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார் மதுரை மாவட்டம் குட்லாடம்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் 1998 ஆம் ஆண்டு கட்டி 24 வருடங்கள் ஆன நிலையில் தற்போது வீடுகளின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுவதால் மறுசீரமைப்பு செய்து புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதற்கு 2.5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தற்போது அப்பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. தற்போது ஒப்பந்தம் எடுத்தவர்கள் மறுசீரமைப்பு செய்ய முதலில் அந்தக் கட்டிடங்களின் மேல் கூறைகளை இடித்து அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கு அங்கு வசிக்கும் மக்களிடையே வரவேற்பு இருந்தாலும் அங்கு வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்காமல் அதிகாரிகள் எந்த ஒரு முன்னறிவிப்பும் தெரிவிக்காமல் சமத்துவபுரம் கட்டிடங்களை இடிக்கும் பணி ஆரம்பித்திருப்பதால் மறு சீரமைப்பு பணி முடியும்வரை அங்கு கூடியிருந்தவர்களுக்கு பாதுகாப்பான இடம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.


ஆகவே தற்போது தங்களது வீட்டில் உள்ள பொருள் மற்றும் உடமைகளை மரத்தடியில் போட்டு வைத்துள்ளதால் அந்த உடமைகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதாகவும். அதேபோல் அங்கு கூடியிருந்த பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும் அதனால் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் முகம் தெரியாத தன்னைப் பற்றிய விவரங்களை வெளியிட முடியாத நபர்களை இத்திட்டத்தில் தலையிடுவதை தடுத்து அரசு அதிகாரிகளின் நேரடி பார்வையில் பராமரிப்பு வேலைகள் நடைபெற வேண்டும். அதேபோல் மறுசீரமைப்புபணி தரமாக நடைபெறுகிறது என்பதற்கான உத்தரவாதத்தை சோழவந்தான் திமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தரவேண்டும். என்ற நிபந்தனைகளை எல்லாம் மதுரை மாவட்டம் T.வட்டிப்பட்டி வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் அவர்களுக்கு சமத்துவபுரத்தில் குடியிருந்தவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( ML) வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் முத்துராக்கு கோரிக்கையாக மனு அளித்துள்ளார்..
எது எப்படியோ கலைஞரின் கனவு திட்டமான சமத்துவபுர திட்டத்தில் எந்த ஒரு முறைகேடும் இல்லாமல் நியாயமான நேர்மையான முறையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அதேபோல் அங்கு முறைகேடாக குடியிருப்பவர்கள் மீதும் அரசு அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.