நீதி மன்றம் தீர்ப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் வாகனத்தை ஜப்தி செய்த நீதிமன்றம் ஊழியர்கள்!

1981 இல் வீட்டு வசதி மாற்று வாரியத்திற்கு 99 சென்ட் நிலம் அரசு கையகப்படுத்திய வழக்கில் இழப்பீடு வழங்காமல் இருந்ததால் மதுரை மாவட்ட ஆட்சியர் வாகனம் மற்றும் பொருட்களை ஜப்தி செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிலத்தின் உரிமையாளர் 12 பேருக்கு உரிய காலகட்டத்தில் நிலத்திற்கான இழப்பீடு வழங்காததால் 1984 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கின் தீர்ப்பின் படி முதல் கட்டமாக 1999 ஆம் வருடம் 8 இலட்சத்து 70 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. இழப்பீடு முழுமையாக வழங்கப்படாத காரணத்தால் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி 8 இலட்சத்து 70 ஆயிரத்து 166 ரூபாய் 30 காசுகள் இழப்பீடு தொகைக்காக மாவட்ட ஆட்சியரின் 6 வாகனங்கள் மற்றும் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தது.

தீர்ப்பின் படி நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை ஜப்தி செய்தனர.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பேச்சுவார்த்தைக்காக நீதிமன்ற குழுவினரை அழைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இவ்வழக்கில் 37 ஆண்டுகளுக்கு பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி மன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் முன் வந்துள்ளது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button