மதுரை மீண்டும் ஒரு அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்ததால் உச்சக்கட்ட கோபத்தில் ஆர் பி உதயகுமார்,அதிமுக வேட்பாளர்களை மிரட்டி பல லட்சம்ரூபாய் பணம் கொடுத்து திமுக விலைக்கு வாங்கி வருகின்றனர் ஆர் பி உதயகுமார் ஆவேசம்!
தமிழ்நாட்டில் ஊரக நகராட்சித் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் திமுக மற்றும் அதிமுக கட்சி வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். அதேபோல் திமுக அமைச்சர்கள் அந்தந்த மாவட்டத்தில் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோல் அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பல பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர்களாக அதிமுக கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிமுகவின் தலைமையின் மீது அதிருப்தியில் திமுகவில் இணைந்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 98 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் திமுக அதிமுக நேரடியாக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் சோழவந்தான் 15வது வார்டில் ஜெனகராசன் அதிமுக வேட்பாளர்.இவர் போட்டியிடும் வார்டில் சுமார் 800 வாக்காளர்கள் உள்ளனர். இவரை அதிமுக சார்பில் வேட்பாளராக நியமித்து இதிலிருந்து தேர்தல் பிரச்சாரம் முடியும் வரை வேட்பாளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க தன்னுடைய ஆதரவுகளுடன் வாக்காளர்களை சந்திக்க வாக்கு சேகரிக்க தன்னிடம் பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு இருந்துள்ளார். இது சம்பந்தமாக அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் தன்னுடைய நிலைமையை எடுத்துக் கூறியுள்ளார்.ஆனால் அதிமுக கட்சி நிர்வாகிகள் வேட்பாளர்கள் அவர்கள் வார்டுகளில் அவர்களே தான் செலவு செய்து கொள்ள வேண்டும் என்றும் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியுள்ளனர். அதிமுக கட்சி நிர்வாகிகள் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் சோழவந்தான் திமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலையில் ஜெனகராசன் திமுகவில் இணைந்தார் .இதனால் மதுரை மாவட்டம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக திமுக சார்பில் மதுரை மாவட்டத்தில் அமைச்சர் மூர்த்தி அவர்கள் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்ற நிலையில் ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் திமுக அமோக வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றும் என்று உறுதியளித்து வாக்கு சேகரித்து வந்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் திமுகவுக்கு மறைமுக ஆதரவாகவும் நேரடியாக கட்சியில் சேர்வதும் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகின்றது. இந்த நிலையில்தான் சோழவந்தான் பேரூராட்சி அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தது சோழவந்தான் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சோழவந்தான் அதிமுக கட்சி நிர்வாகிகளில் முக்கியமாக பங்கு வைக்கும் ஒரு நபர் சுயநலமாக செயல்பட்டு வருவதாகவும் அதை மற்ற அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை என்றும் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிமுக வேட்பாளர் திமுகவில் சேர்ந்து சோழவந்தான் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பெரும் நெருக்கடியை அதிமுக தலைமை கொடுக்கும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். சோழவந்தான் அதிமுக கட்சி நிர்வாகிகள் மீது அதிமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல்!
அதிமுக கட்சியில் இருப்பவர்களிடம் இதை பற்றி கேட்டதற்கு திமுக நேரடியாக மோத முடியாமல் வேட்பாளர்களை மிரட்டி பல லட்சம்ரூபாய் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டை பற்றி திமுக கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல் இருப்பதால் தான் இப்படி திமுகவில் வந்து சேருகின்றனர் என்றும் திமுக மீது அவர்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் அதனால் திமுக கட்சியில் இணைந்து வருகின்றனர் என்றும் தெரிவித்தனர்
22ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் நிலையில் எத்தனை அதிமுக வேட்பாளர்கள் திமுகவுக்கு ஆதரவாக செல்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!