மயான தகன மேடை கட்டுவதில் 10 லட்ச ரூபாய் முறைகேடு!
வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பஞ்சாயத்து உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் பரிந்துரை!
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 உராட்சிகள் உள்ளது. அதில் குடிமங்கலம் ஊராட்சியில்
பட்டியலினத்து சமூகத்தைச் சார்ந்தவர்களுக்காக மயான தகன மேடை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் நிதியை சட்டவிரோதமாக வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் பயன்படுத்தும் மயானத்தில் தகனமேடை கட்டிக் கொண்டிருப்பதாக செய்தித்தாள்களில் வெளிவந்த செய்தியைக் கொண்டு
தேசிய அதிதி திராவிடர் ஆணையம் தலைவர் அறிவுறுத்தலின் படி தேசிய ஆதிதிராவிட ஆணையம் குழு
உடுமலை குடிமங்கலம் பகுதியில் மயான தகன மேடை கட்டிக்கொண்டு இருக்கும் இடத்தை ஆய்வு நடத்தியபோது பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேற சமூகத்தைச் சார்ந்த வர்களுக்காக வேறு பகுதியில் கட்டப்பட்டு வந்தது.அந்த மயான தகனம் மேடை கட்டும் பணியை அப்படியே நிறுத்தி விட்டு பட்டியலின மக்கள் புதைக்கக் கூடிய பகுதிக்கு மயான தகன மேடையை கட்டிக் கொடுக்குமாறு தேசிய ஆதிதிராவிட ஆணையர் குழு உத்தரவிட்டுள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் பட்டியிலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் இரண்டு குவளைகள் பயன்படுத்துகிறார்களா என்பதை ஆய்வு மேற்கொண்டோம் அது மட்டும் இல்லாமல் தெருக்களில் நடந்து செல்லும் போது காலணிகளை கையில் எடுத்து கொண்டு செல்லும் வழக்கம் இன்னும் நடைமுறையில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ததாகவும் அது மட்டும் இல்லாமல் கோயில்களுக்கு பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய தடை ஏதும் இருக்கிறதா என்பதை தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் குழு ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்பு பட்டியலை இன மக்களிடம் இப்பகுதிகளில் டீக்கடைகளில் இரட்டை கொலை நடைமுறை தெருக்களில் காலணிகளை கையில் எடுத்துச் செல்லும் வழக்கம் மற்றும் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் உடனே தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திற்கு தகவல் கொடுக்குமாறு அந்த குழு கேட்டுக் கொண்டனர். அது மட்டும் இல்லாமல் பட்டியிலன மக்களுக்கு ஒதுக்கிய நிதியை முறைகேடாக பயன்படுத்திய
வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் கணேஷ் மாலா மற்றும் பஞ்சாயத்து உதவி ஆணையர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் ஆதிதிராவிடர் ஆணையத்திலிருந்து வந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய ஆதிதிராவிடர் ஆணையக் குழு ஆய்வு மேற்கொண்ட போது உடன் உடுமலை கோட்டாட்சியர் யஷ்வந்த் கண்ணன் . துணைக் காவல் கண்காணிப்பாளர் சுகுமார் வட்டாரவளர்ச்சி அலுவலர் செந்தில் கணேஷ் மாலா உடன் இருந்தனனர் என்பது குறிப்பிடத்தக்கது.