மலை போல் காட்சியளிக்கும் தேங்கி கிடக்கும் கழிவு குப்பைகள்! அதிர்ச்சி வீடியோ!துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம்! அச்சத்தில் பக்தர்கள்!
நடவடிக்கை எடுக்குமா! பழனி கோவில் நிர்வாகம்

பழனியில் உள்ள இடும்பனை முதலில் வழிபட்டு, பின்னர் முருகனை வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இன்னும் சில தினங்கள் இருக்கும் நிலையில்
பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு சுமார் ஒரு கோடி பக்தர்கள் வருவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்
இடும்பன் கோவிலில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்லும் சாலையில் கழுவிக் குப்பைகள் அகற்றப்படாமல் மலை போல் குவிந்து காட்சியளிக்கிறது.
ஆகையால் தைப்பூசத்திற்கு வரும் பக்தர்கள் பழனி தண்டாயுதபாணி மலை கோவில் மீது முருகனை வழிபடச் செல்வதற்கு முன்பு மலைப்பாதையில் உள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்வது வழக்கம்.
பழனிமலை முருகனை தரிசிக்க
தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில்
பாதயாத்திரையாக வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் இடும்பன் குளத்தில் நீராடிய பின்பே மலைக் கோயிலுக்கு செல்வது வழக்கம்,
இடும்பன் மலையில் உள்ள இடும்பன் கோயிலில் தரிசனம் செய்து, காவடி எடுத்துச் செல்வதன் மூலம் முருகனை வழிபடுகிறார்கள். அது மட்டுமில்லாமல் முடிக்காணிக்கை செலுத்துதல், அலகு குத்துதல், அபிஷேகம் செய்தல், வஸ்திரம் அணிவித்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
பழனி இடும்பன்குளம் என்பது வெறும் நீர்நிலை மட்டுமல்ல, அது பழனி முருகனை அடைவதற்கான பாதையின் முக்கியமான படியாகும், இங்கு நீராடி, நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதன் மூலம் பக்தர்கள் முருகனின் அருளைப் பெறுகிறார்கள்.
கார்த்திகை மார்கழி தை ஆகிய மூன்று மாதங்களுக்கு பழனிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை வந்து தரிசனம் செய்கின்றனர். பழனி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மலைப்பாதையில் உள்ள இடும்பன் குளத்தில் நீராடிய பின்பே மலைக் கோயிலுக்கு செல்வது வழக்கம், ஆகவே தற்போது
இடும்பன் குளத்தில் இருந்து பழனி மலை கோயிலுக்கு செல்லும் சுற்றுப்புறச் சாலைகளில் பல நாட்களாக கழிவு குப்பைகள் கற்றப்படாமல் மலைபோல் குவிந்து சுகாதாரமற்ற நிலையில் சீர்கெட்டு கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதால் நடந்து செல்லும் பக்தர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் செல்கின்றனர்.
அது மட்டுமில்லாமல் இதுபோன்று குப்பைகள் தேங்கி கிடப்பதால்
நீர் நிலைகளையும் மாசுபடுத்தி வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பழைய துணிகள், குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
குறிப்பாக சாலை ஓரங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் கால்நடைகள் மற்றும் நாய்கள் போன்ற விலங்குகள் பைகளில் கிடைக்கும் கழிவுகளை சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது, மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக உள்ளது.
சேகரிக்கும் கழிவு குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தவும், பொது இடங்களில் கொட்டுவதைத் தடுக்கவும் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் பக்தர்கள் நலன் கருதி பல நாட்களாக அகற்றப்படாமல் சாலைகளில் கொட்டிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாக ஆணையர் மற்றும் இணை ஆணையர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




