காவல் செய்திகள்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவை மதிக்காத நிலக்கோட்டை   காவல் நிலைய காவல் ஆய்வாளர்!?
புகார் கொடுப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் அவல நிலை! நடவடிக்கை எடுப்பாரா தென்மண்டல ஐ ஜி.!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பெயரில் நிலக்கோட்டை  டிஎஸ்பி  நிலக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளரை விசாரணைக்கு நியமித்தார். விசாரணை என்ற பெயரில்
புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண் மீது வழக்கு பதிவு செய்யும் அவல நிலை! நடவடிக்கை எடுப்பாரா தென்மண்டல ஐ ஜி.!

காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் கொடுக்கிறார் என்றால், அந்த புகாரில் அவர் குற்றம் சாட்டும் நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற அவசிசியம் கிடையாது.புகாரின்படி, முதலில், உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்; சாட்சிகளை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். புகார்களின் தன்மைக்கேற்ப, போலீஸ் அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும்.
ஆனால் தற்போது காவல் நிலையங்களில்,
பஞ்சாயத்து களங்களாக மாறி விட்டதாக, பொதுவான கருத்து நிலவுகிறது. காவல் நிலையங்களில் உள்ள ஒரு சில காவல் உயர் அதிகாரிகளின் தவறான அணுகுமுறை, ஒட்டுமொத்த துறைக்கும், கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்கள் வைக்கின்றனர்.

தற்போது அதேபோல்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அணைப்பட்டி அருகில் மேட்டுப் பட்டி கிராமத்தில் வசிக்கும்
பாரத ரோஜா( 36) (கணவர் பெயர் கண்ணன் )இவர்களுக்கு இரண்டு வீடு இருக்கிறது ஒரு வீட்டில் உறவினரான
ஜெகதீஷ்  குடும்பத்திற்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர். சில மாதம்  முன்பு ஜெகதீஷ் குடும்பத்திற்கும் பாரத ரோஜா குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் நடந்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெகதீஷ் தூண்டுதல் பெயரில் அவரது உறவினர்கள் அடித்ததால் நடவடிக்கை எடுக்கவும் ஜெகதீஷை வீட்டை விட்டு காலி செய்து தருமாறு  பாரத ரோஜா மே மாதம்  நிலக்கோட்டை காவல் நிலையத்தில் ஜெகதீஷ் மீது புகார் கொடுத்துள்ளார்.

ஜெகதீஷ் குடும்பத்தினர் பாரத ரோஜாவை தலைமுடியைப் பிடித்து அடித்த புகைப்படம்

புகாரின் பேரில் ஜெகதீசை காவல் நிலையத்திற்கு வரவழைத்து காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தியதில் அந்த வீட்டில் எனக்கும் பங்கு உள்ளது என்று ஜெகதீஷ் கூறியுள்ளார்.அதற்கு காவல் ஆய்வாளர் சொத்து பங்கு இருந்தால் நீதிமன்றத்தில் சென்று வழக்கு போட்டுக் கொள்ளவும் . 60 நாட்களில் வீட்டை காலி செய்து விடுகிறேன் என்று எழுதி வாங்கி அனுப்பி உள்ளார் . ஆனால்  60 நாட்கள் முடியும் முன்பு ஜெகதீஷ் குடியிருந்த வீட்டில்  வேறு மதத்தைச் சேர்ந்த தோப்புச்சாமி என்பவரை குடியிருக்க வைத்துள்ளார்.

நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் குரு வெங்கட்

இந்நிலையில் காவல் நிலையத்தில் எழுதி கொடுத்த 60 நாட்கள் முடிவடைந்த விட்டதால் வீட்டை காலி செய்யுமாறு ஜெகதீஷிடம் பாரத ரோஜா கூறியுள்ளார் அதற்கு ஜெகதீஷ் மகன் பாரத ரோஜா வீட்டிற்குள் நுழைந்து வீட்டை காலி செய்ய முடியாது என்றும் அந்த வீட்டில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்றும்  தகாத வார்த்தையில் பேசி பாரத ரோஜாவை அடித்து துன்புறுத்தியதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் 03/07/2023 அன்று புகார் கொடுத்துள்ளார்.

நிலக்கோட்டை காவல் நிலையத்தில் 4/07/23 அன்று பாரத ரோஜா பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார்

புகாரின் மீது நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரை விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பரிந்துரை செய்துள்ளார்.
நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் அவர்களை விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார்
5/07/2023 அன்று
  நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் குரு வெங்கட்ராஜ்  சார்பு ஆய்வாளர்  அருண் பிரசாத்  இரண்டு இரண்டு பேரும் ஜெக தீசனை அழைத்து விசாரணை செய்துள்ளனர். அப்போது காவல் நிலையத்தில் ஒருதலைப் பட்சமாக விசாரணை நடத்தியதாகவும் நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளாமல் கட்டப்பஞ்சாயத்து செய்வது போல் புகார் கொடுத்த பெண்மணி இடம் காவல் ஆய்வாளர்கள் நடந்து கொண்டதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் ஏன் புகார் கொடுத்தாய்  என்று காவல் ஆய்வாளர் அந்த பெண்ணை மிரட்டியதாகவும். அது மட்டும் இல்லாமல் ஜெக தீஷை  பாரத ரோஜா மீது புகார் கொடுக்க வைத்து  அந்த புகார் மீது பாரத ரோஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டதாக புகார் கொடுத்த பெண்ணுக்கு எதிராக காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரும் சார்பு ஆய்வாளரும் செயல்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல் புகார் கொடுத்த பெண்மணி குற்றச்சாட்டு  வைத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button