மூடப்பட்ட சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க முதல்வர் ஸ்டாலினுக்கு ஆர் பி உதயகுமார் கோரிக்கை!
செயல்பட்டு வந்த சர்க்கரை ஆலையை திறக்கச் சொல்லி போராடி வரும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாத நிலையில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த ஆர்பி உதயகுமார் தென் மாவட்டங்களுக்கு ஆபத்து பாந்தவனாக இருந்த அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை 2017 .18 ஆம் ஆண்டு மூடப்பட்டது தற்போது முறை மூடப்பட்டுள்ளது தமிழகத்தில் உள்ள கூட்டுறவு ஆலைகளிலேயே மிகப்பெரிய ஆலை இது. கடந்த காலங்களில் ஆண்டுக்கு 2000 ஏக்கர் கரும்பு ஆலையில் பதிவு செய்யப்பட்டு அறுவடை செய்த போது 70 ஆயிரம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டது அதேபோல் பதிவு செய்யப்படாத 1.5 லட்சம் டன் கரும்பு கிடைத்தது அதுபோக பிற ஆலையிலிருந்து அரவைக்கு தயாராக கரும்புகள் கிடைக்கக்கூடிய நிலையில் இருந்தது. இந்த சூழ்நிலையில் ஆலையை மூடியது அரசின் கையால் ஆகாத தனமாக பார்க்கப்படுகிறது தொடர்ந்து இந்த சர்க்கரை ஆலை செயல் படுவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் இது போன்ற ஆலைகளை அரசு லாபம் மட்டும் பார்க்காமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பார்க்க வேண்டும் இது போன்ற ஆலையை மீண்டும் உருவாக்குவது சாதாரணமான விஷயம் இல்லை தென் மாவட்டங்களில் சர்க்கரை ஆலை இல்லாத காலத்தில் 1961ஆம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை ஆனது. ராஜேஸ்வரி சர்க்கரை ஆலை போன்ற தனியார் ஆலைகளுக்கு கரும்பு பிரித்து கொடுத்த காரணத்தால் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வரத்து குறைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். 2011 ஆம் ஆண்டில் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைகள் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டது 85% அதன் பணிகள் நிறைவு பெற்று அதன் பிறகு நடைபெற்ற ஆட்சி மாற்றத்தால் அந்த பணிகள் தடைபட்டுள்ளது அதற்கு அரசுஎந்த விளக்கமும் தரவில்லை
ஆகையால் தமிழக அரசு இந்த ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகளும் தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் கோரிக்கை வைத்துள்ளனர் ஏற்கனவே இதே இடத்தில் ஆலையை திறக்க வலியுறுத்தி போராட்டத்தை நடத்தினார்கள் ஏற்கனவே நடந்த போராட்டத்திற்கு எடப்பாடி ஆதரவு தெரிவித்தார் இந்த மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள் ஆனால் ஆலையை திறப்பதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது கொரோனா காலத்தில் கூட ஆலையை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை நாங்கள் எடுத்திருந்தோம் அப்போது ஆலையை இயக்குவதற்கு நாங்கள் 23 கோடி ரூபாய் ஆலையை பராமரிப்பதற்கு ஒதுக்கி இருந்தோம் தற்போது இந்த ஆலையை திறப்பதற்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை மனு அளித்து வந்திருந்தார் ஆனால் திறப்பதற்கான எந்த வழியும் காணவில்லை
ஐம்பதாயிரம் விவசாயிகளுடைய வாழ்வாதாரம் கரும்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாய தொழிலாளர்கள் மில் தொழிலாளர்கள் என பலருடைய வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை மீண்டும் தொடங்க வேண்டும் 11 கோடி ரூபாய் இருந்தால் கூட ஆலையை தொடர்ந்து இயக்க முடியும் ஆனால் அரசு அமைத்த குழுவில் 27 கோடி ரூபாய் தேவைப்படுவதாக கூறியிருக்கிறார்கள் ஆனால் இன்றைய முதலமைச்சர் தொழில் முதலீட்டுகளை ஈர்ப்பதற்கு அமெரிக்கா சென்று உள்ளார் ஆனால் இங்கு தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள ஆலையை திறப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வெறும் 27 கோடி ரூபாய் கொடுத்தால் மூடப்பட்டுள்ள ஆலையை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் இதை விடுத்து அமெரிக்காவிற்கு சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்கப் போகிறேன் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் போது கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் சர்க்கரை ஆலை சீரமைக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார் பல மாதங்களுக்கு முன்பு இதேஇடத்தில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள் மேலும் ஆளை உற்பத்திக்கு புதிதாக இதுவரை யாரையும் பணியமத்தப்படவில்லை ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கும் முறையாக பண பலன்கள் கொடுப்பதில்லை கடந்த காலங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒரு லட்சம் டன் கரும்பு அறுவை செய்து 2017 .18 இல் 30 ஆயிரம் டன் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு 2100 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டது 95 ஆயிரம் குவின்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது தற்போது இவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது
இந்தப் பிரச்சினையை உடனடியாகபொதுச் செயலாளர் எடப்பாடி கவனத்திற்கு கொண்டு சென்று அவர் அனுமதி பெற்று இங்குள்ள நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்து சர்க்கரை ஆலையை திறக்க மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் அமெரிக்கா சென்ற முதல்வர் 900 கோடி முதலீடுகளை ஈட்டி இருப்பதாக அனைத்து பத்திரிகைகளிளும் தலைப்பு செய்தி ஆக வந்துள்ளது இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஜெகத்ரட்சகன் எம்பி அமலாக்க துறைக்கு செலுத்த வேண்டிய நிலைவை தொகை 908 கோடி என்று கூறியுள்ளது விசித்திரமாக உள்ளது தமிழகத்தினுடைய வருவாய் கவலைக்குரியதாக உள்ளது திமுக உடைய வருவாய்தான் உயர்ந்துள்ளது இந்த ஆலையை திறப்பதற்கு மூன்று ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம்