மூதாட்டி பெயரில் தொகுப்பு வீடு கட்டி முடித்ததாக ரூபாய் 1,70,000 பணம் முறைகேடு!!சீர்காழி செம்மங்குடி ஊராட்சி கிளார்க்சங்கர் ஊழல் முறைகேடு செய்துள்ளதாக 70 வயது மூதாட்டி குற்றச்சாட்டு! மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
மூதாட்டி பெயரில் தொகுப்பு வீடு கட்டி முடித்ததாக ரூபாய் 1,70,000 பணம் முறைகேடு!!சீர்காழி செம்மங்குடி ஊராட்சி கிளார்க் ஊழல் முறைகேடு செய்துள்ளதாக மூதாட்டி குற்றச்சாட்டு!
நாட்டின் ஏழை எளிய மக்களுக்கும் வீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 2022 இல் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு என்ற கனவு திட்டம்.
நாட்டில் உள்ள அனைத்து ஏழை மக்களும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தருதல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டம் 2016 -2017ஆம் ஆண்டு முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது இந்தியா முழுவதும் மொத்தம் 1.05,736 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 8,385 வீடுகள் ஒதுக்கப் பட்டது.
தமிழ் நாட்டிற்கு மட்டும் 5,36,278 வீடுகள் கட்ட ஒப்புதல்.
கட்ட ஆரம்பித்த. வீடுகள் 4,15,903
ஒதுக்கப் பட்ட மொத்தத் தொகை
Rs.8,186 கோடி. ரூபாய்.
முதல் கட்டமாக 2015 இல்ஜூன்மாதம் நகர் பகுதியில் வீடுகள் கட்ட தொடங்கப் பட்டது.
பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டம் 2021 – 2022ன் கீழ் வீடுகள் கட்டி வரும் பயனாளிகளிடம், அவர்களின் வீட்டிற்கு அரசினால் வழங்கப்படும் தொகை ரூ.2.27,290 குறித்தும், வீடுகள் அளவீடுகள் துறை மூலம் வழங்கப்படும் சிமெண்ட் மூட்டைகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் குறித்தும் பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசிடமிருந்து 3,213 கையேடுகள் அனைத்து மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டது.
ஒருவேளை உங்களது பெயர் பட்டியலில் இடம்பெறாமல் இருக்கலாம். அதை நீங்களே ஆன்லைன் மூலமாக சரிபார்க்கலாம்.பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் செல்ல வேண்டும். (pmaymis.gov.in)அதில் ‘Track your assessment status’ என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பின்னர் உங்களது ரெஜிஸ்டர் நம்பர் மற்றும் விவரங்களை நிரப்ப வேண்டும்.
உங்களது மாநிலம், மாவட்டம், கிரமம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும். அதில் உங்களது ஸ்டேட்டஸ் நிலையை பார்க்க முடியும்.
இத்திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கும் நீங்கள் pmaymis.gov.in என்ற வெப்சைட்டில் சென்று விண்ணப்பிக்கலாம்.
சீர்காழி செம்மங்குடி ஊராட்சி அலுவலகத்தில் முறைகேடு!
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முன்பு
ஒருங்கிணைந்த
நாகப்பட்டினம் மாவட்டமாக இருந்த போது 8,385 வீடுகள் ஒதுக்கப்பட்டது.
சீர்காழி செம்மங்குடி ஊராட்சி அலுவலகத்தில் முறைகேடு!
மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழி தாலுகா
சீர்காழி ஒன்றியம்.
செம்மங்குடி ஊராட்சி கிராமத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மீனாட்சி (கணவர் பெயர் கோவிந்தன்) என்ற மூதாட்டி (சுமார் வயது 70 )பெயரில் இலவச வீடு கட்டி முடிக்கப்பட்டதாக (18/05/2018 தேதி)(TN1267140) ஊராட்சி மன்ற பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(மொத்த வீட்டின் மதிப்பு.1.70 லட்சம் ரூபாய் )
ஆனால் கடந்த கிராம சபை கூட்டத்தில் இந்த மூதாட்டி 30 வருடமாக ஓலை குடிசை வீட்டில் வாடகைக்கு வசித்து வருவதாகவும் தனக்கு இலவச வீடு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார். ஆனால் ஊராட்சி மன்ற அலுவலக கிளார்க் சங்கர் அந்த மூதாட்டியிடம் உன் பெயரில் ஏற்கனவே வீடு கட்டி கொடுத்து விட்டு முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட அந்த மூதாட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார். செம்மங்குடி ஊராட்சி மன்ற கிளர்க் சங்கரிடம் அந்த மூதாட்டி எனக்கு இடமே இல்லை நானே தற்போது குடிசை வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறேன். எப்படி வீடு கட்டி கொடுத்தீர்கள் என்று கேட்டுள்ளார். 2018 இல் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தற்போது ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது .இதுவரை எனக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. அப்படி இருக்கும்போது எனக்கு எப்படி என் பெயரில் வீடு கட்டி கொடுக்க முடியும் என்று கேட்டுள்ளார். இதை அறிந்த அந்தப் பகுதி சமூக ஆர்வலர்கள் மூதாட்டியை அழைத்து நடந்ததை கேட்டுள்ளனர் அதன் பின்பு அந்த மூதாட்டியை சமூக ஆர்வலர் ரிப்போட்டர் விஷன் பத்திரிகை நிருபருக்கு தகவல் கொடுத்தார்.. அப்போது நிருபரிடம் அந்த மூதாட்டி கூறிய போது என்னை அழைத்து செம்மங்குடி கிளார்க் சங்கர் ஒரு பேப்பரில் கைரேகை வைக்க சொன்னார் வைத்து விட்டு வந்தேன் அதன் பின்பு ஒருநாள் அழைத்தனர் மறுபடியும் கைரேகை வைத்து வந்தேன் அப்பொழுது கையில் 200 ரூபாய் கொடுத்து விட்டார்கள் என்றும் ஆனால் என் பெயரில் வீடு கட்டி முடித்து விட்டதாகவும் எனக்கு வீடு கொடுத்து விட்டதாகவும் பதிவேட்டில் இருப்பதை பார்த்து மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. ஆகையால் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் கொடுத்துள்ளேன் என்றும் என் பெயரில் வீடுகட்டி முடித்ததாக முறைகேடாக பணத்தை எடுத்த செம்மங்குடி ஊராட்சி மன்ற கிளார்க் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எனக்கு இலவச வீடு தர மாவட்ட ஆட்சியர் முன் வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இது சம்மந்தமாக அப் பகுதியில் விசாரித்த போது இன்னும் பல திடிக்கிடும் தகவல் வந்துள்ளது.
இலவச வீடு திட்டத்தில் இன்னும் சில நபர்கள் பெயரில் வீடு கொடுக்கப்பட்டுள்ளதாக மோசடி ஊழல் முறைகேடு நடந்துள்ளதாகவும் யார் யார் அந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் பட்டியல் செப்டம்பர் மாத” ரிப்போர்ட்டர் விஷன் “இதழில் வெளிவர உள்ளது.
.
.
.