லஞ்ச ஒழிப்புத் துறை

மோட்டார் வாகன சட்ட விதிகளை காற்றில் பறக்கவிட்டு  லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடிகட்டி பறக்கும்  காரைக்குடி   மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்!

சிவகங்கை மாவட்டத்தின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் (RTO) கீழ்
காரைக்குடியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் திருச்சி – ராமேஸ்வரம் நெடுஞ்சாலைக்கு அருகில்,புதிய அலுவலகக் கட்டிடம் ரூ.1.93 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளராக அனிதா இருக்கிறார்.
காரைக்குடி மற்றும் இந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள  பொதுமக்கள் தாங்கள் புதிதாக வாங்கப்பட்ட பைக், கார், வேன், லாரி, பஸ் உள்ளிட்ட
வாகனங்கள் பதிவு செய்து நம்பர் பெற
மற்றும் பழைய வாகனங்கள் எப்.சி, செய்ய    காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமானோர் வருவது வழக்கம்.
ஆனால்

காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில்
காத்திருப்பு அறைகள் மூடப்பட்டிருப்பதால்

பொதுமக்கள் திறந்தவெளியில் அடிப்படை வசதிகளின்றி காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அதுமட்டுமில்லாமல் காரைக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர்  தாமதமாக வருவதால் பொதுமக்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதல் நீண்ட நேரம்  காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  சாட்டை வைத்துள்ளனர்.

ஓட்டுனர் உரிமம் மற்றும் புதிய வாகனங்களை புதுப்பிக்க வரும் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாகனப் பதிவு போன்ற பல்வேறு சேவைகளில் இடைத்தரகர்கள் தலையிடுவதாகவும், பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் நேரடியாக சேவை பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் புரோக்கர் பிடியில் சிக்கி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

காரைக்குடி மோட்டார் வாகன அலுவலகத்திற்கு  வந்து செல்லும் பொதுமக்களை  மோட்டார் வாகன ஆய்வாளர் கண்டுகொள்ளாமல்
புரோக்கர்கள் மூலம் வரும் நபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாகவும், அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பணி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒட்டுனர் உரிமம் விண்ணப்பித்தல், வாகன பதிவு எண் பெறுதல், பழைய வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு புரோக்கர்கள்  மூலம் மோட்டார் வாகன ஆய்வாளர் லஞ்சம் வாங்குவதாகவும்  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர்

ஒரு வாடகை வாகனத்தில் உரிமம் புதுப்பிக்க,
1 .படிவம் 25
பதிவுச் சான்றிதழ்
2.ஆர்.சி கையேடு
3. வாகனத்தில் உள்ள பிரேக் மற்றும் கிளர்ச்சி,ஹெட் லைட் இன்டிகேட்டர் , இன்ஜினிலிருந்து வரும் புகையின் தன்மை மற்றும் வாகனத்தின் உறுதித்தன்மை அனைத்தும் சரி செய்து சான்றிதழ்  பெற்றிருக்க வேண்டும்
4.பி.யூ.சி.
புதுப்பிக்கப்பட்ட சாலை வரி செலுத்துதலுக்கான சான்று
5.உரிமையாளரின் கையொப்ப அடையாளம்
6.எஞ்சின் மற்றும் சேசிஸ் பென்சில் அச்சு
7.வாகன காப்பீட்டு சான்றிதழ்
8.படிவம் 60 அல்லது 61
பான் கார்டு நகல்
முகவரிச் சான்று இவை அனைத்தும் சரியாக இருக்கிறதா!?காலாவதி தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் புதுப்பித்தல் செய்யப்பட வேண்டும் என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989, விதி 81 இன் வழிகாட்டுதல்களின்படி, நீங்கள் செலுத்த வேண்டிய வாகன வரிகள் மற்றும் அபராதங்களையும் செலுத்தப்பட்டுள்ளதா என மோட்டார் வாகன ஆய்வாளர் சரிபார்த்த  பின்பு தான் வாகனங்களுக்கு உரிமம் புதுப்பிக்க வேண்டும்.
ஆனால்  மோட்டார் வாகன சட்ட விதிகளை அத்தனை இருந்தும் அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர்  உரிமம் புதுப்பிக்க வரும் இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் ஆறு சக்கர வாகனம் எட்டு சக்கர வாகனம் 16 சக்கர வாகனம் என வரும்  வாகனங்களுக்கு  ஏற்றவாறு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து எந்த ஒரு ஆவணங்களையும் சரிபார்க்காமல்
ஒரு வாகனத்துக்கு சுமார் 10,000 முதல் 25 ஆயிரம் வரை என மாதம் சுமார் ஐந்து லட்சம் வரை புரோக்கர்கள் மூலம் லஞ்சமாக வசூல் செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்  தொடர்ந்து குற்றம் சாட்டி குற்றச்சாட்டிற்கு புதுக்கோட்டை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்  கண்டும் காணாமல் இருப்பதாகவும் அதற்கு காரணம் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் வாங்கப்படும் லஞ்ச பணத்தில்  வட்டார  போக்குவரத்து அலுவலருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எது எப்படியோ
லஞ்ச, ஊழலை முற்றிலும் ஒழிக்க
லஞ்ச ஒழிப்புத்துறை
தொடர்ந்து நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.
நேர்மையான, மக்களுக்கு உதவி செய்யும் நிர்வாகத்தை
என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஆகவே  காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்சம் ஊழல் முறைகேடு நடப்பதாக  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் அச்சமின்றி சென்றுவர முடியும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்களில் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles

Back to top button