வருவாய்த்துறை

வட்டாட்சியரா!?
வசூல் ராஜாவா!?கொட்டும் கரன்சி மழையில் வேலூர் வட்டாட்சியர் அலுவலகமா!?
வேலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை எப்போது!

வேலூர் வட்டாட்சியர்  தே.முரளிதரன் அலுவலகத்தில் தினந்தோறும் கொட்டும் (கரன்சி) மழையா?
வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரின் பார்வை எப்போது!?

வேலூர் மாவட்டம். வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்

வேலூர் வட்டாட்சியர் முரளிதரன்

வட்டாட்சியராக இருக்கும் தே முரளிதரனின் சொந்த ஊர் தொரப்பாடி.
இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். இவர் 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிசி) மூலம் குரூப் 4 இல் தேர்ச்சி பெற்று கிராம நிர்வாக அலுவலராக வேலூர் தாலுகாவுக்குட்பட்ட
இவர்  சொந்த ஊரான தொரப்பாடிக்குட்பட்ட சத்துவாச்சாரி பகுதி கிராம நிர்வாக அலுவலராகப் பணியில் சேர்ந்துள்ளார்.
அதன் பின்னர்  அதே பிற்காவில் வருவாய் ஆய்வாளராகவும், அதன்பின் அணைக்கட்டு , வேலூர் , காட்பாடி போன்ற வட்டாட்சியர் அலுவலகங்களில் மண்டலத் துணை தாசில்தாராகவும், வேலூர் தாலுக்கா அலுவலகத்தில் சமூகத் திட்ட பிரிவு தாசிலராகவும் , வேலூர் சொந்த தாலுகாவான வருவாய் துறையில் பல்வேறு பிரிவினின் கீழ் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.2013இல் (டிஎன்பிசி) மூலம் குரூப் 2 வில் தேர்ச்சி பெற்று இளநிலை உதவியாளராக வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் வருவாய்த்துறை பிரிவின் கீழ் பணியாற்றியுள்ளார்.
தற்போது லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள வட்டாட்சியர்  முரளிதரன் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை  எந்தெந்த அதிகாரிகளுக்கு எப்படி  கவனித்தால் வேலை நடக்கும் என நன்கு வித்தைகளை அறிந்தவர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இவர் பணியில் இருக்கும் இடத்தில் எல்லாம்  லஞ்சம் வாங்கி கொடுக்கும்  இடைத்தரகர்கள் இவருக்கு வசூல் ராஜா  என்ற பட்டப்பெயர் வைத்துள்ளனர்.
வருவாய்த் துறையில்  இருக்கும் நேர்மையான அதிகாரிகள் மத்தியில் பரவலாக பேசி வருவது காற்று வாய்க்கால் கிடைத்துள்ளது.
இவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல  துணை வட்டாட்சியராக பணியாற்றியபோது இவருக்கு கீழ் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்டுவரும் போலி ஆவணங்களுக்கு  பட்டா வழங்க  பல லட்சங்கள் வரை  கையூட்டு பெற்று முறைகேடு செய்துள்ளதாகவும்
பின்னர் இவருக்கு காட்பாடி தாலுகாவில் ஓராண்டு பணி நிறைவு பெற்ற நிலையில்  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டு பணிபுரிந்து வந்ததாகவும் இப்போது  சில கிராம நிர்வாக அதிகாரிகள் நேரடியாக சென்று மேனுவல் பட்டா கையொப்பம் பெற்றதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
எது எப்படியோ காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக சார்பதிவாளர் பொறுப்பு சிவக்குமாரை தமிழ்நாடு பதிவுத்துறை துணைத் தலைவர் சஸ்பெண்ட் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி தற்போது வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட பட்டா மாறுதல் செய்ய, பட்டா வழங்க, வாரிசு சான்றிதழ் வழங்க, புறம்போக்கு குடியிருப்புப் பகுதிகளில் மின் இணைப்புக்கு சான்றிதழ் வழங்க என சான்றிதழுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு சான்றிதழும்  அதற்கு ஏற்றார் போல் ஒரு தொகையை நிர்ணயித்து புரோக்கர்கள் அல்லது கிராம நிர்வாக அதிகாரி முதல் வருவாய் ஆய்வாளர்கள் வரை பல லட்சங்களை வட்டாட்சியர் முரளிதரனுக்கு வாரி வழங்கி வருவதால் வட்டாட்சியர் அலுவலகமே பணம் கொட்டும் கரன்சி மலையில் தற்போது இருப்பதாகவும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் இரவு நேரங்களில் ஏரிகளிலும் மணல் மற்றும் கனிமவளங்களை   கடத்தி விற்பனை செய்யும் கும்பல் மூலமும் ஒரு பெரிய தொகை மாதம்  மாதம் தாசில்தார் முரளிதரனுக்கு கப்பம் கட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது!

வேலூர் வட்டாட்சியராக முரளிதரன் பொறுப்பேற்ற பின்னர் அலுவலக ஊழியர்கள்  வழக்கமாக வாங்கும் லஞ்சத்தை விட பல மடங்கு உயர்த்தி  வசூலிப்பதாக கூறப்படுகிறது,
எந்த வேலை செய்ய வேண்டும் என்றாலும் பணம் கொடுத்தால் மட்டும் பணி  நடக்கிறது என்றும்  பணம் கொடுக்கல் வாங்கல் தொலைபேசி மூலம் மட்டுமே நடப்பதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் வசூல்ராஜா  வட்டாட்சியர் முரளிதரன் பஞ்சம் ஊழல் முறைகேடு  பற்றிய தகவல் தொலைக்காட்சிகளிலோ பத்திரிகைகளிலோ வெளிவராமல் கவனமாக பார்த்துக் கொள்கிறாராம்.
வசூல்ராஜா வட்டாட்சியர் முரளிதரனின் செயல்பாடுகள் அரசியல்வாதிகளை எல்லாம் ஓரங்கட்டி விடும் அளவிற்கு இருப்பதாகவும் அதனாலேயே
வசூல்ராஜா வட்டாட்சியர் முரளிதரணை  உள்ளூர் அரசியல்வாதி முதல் மாவட்ட ஆட்சியர் வரை பாராட்டி வருவதாகவும் இவரே தனக்கு தானே முத்திரை பதித்துக் கொண்டு பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளிடம்  பொய்களை அள்ளி வீசி வருகிறாராம்.

இதுகுறித்து வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்  சென்று அங்கு உள்ள நேர்மையான அதிகாரிகளிடம் தாசில்தார் முரளிதரனை அரசியல்வாதி முதல் மாவட்ட ஆட்சியர் வரை பாராட்டி வருவதாக சொல்கிறாரே அது உண்மையா என்று கேட்டபோது  அப்படியெல்லாம் யாரும் இந்த வசூல்ராஜா வட்டாட்சியரை பாராட்டிப் பேசவில்லை என்றும்  வசூல்ராஜா வட்டாட்சியர் முரளிதனுடன்  எப்போதும் பல்லி போன்று ஒட்டிக் கொண்டிருக்கும்

கிராம நிர்வாக உதவியாளர் மற்றும்  வாகன ஓட்டுனர் பணியில் இருக்கும்  கோபி  லஞ்சமாக வரும் பணத்தை வசூல்  செய்து எங்கு எப்போது எந்த நேரத்தில் வசூல்ராஜா வட்டாட்சியர் முரளிதரன் இடம்  கொடுக்க வேண்டுமோ அந்த நேரத்தில் கனக்கச்சிதமாக கொடுத்து காரியத்தை சாதித்து வருகிறார்
என வருவாய்த் துறையில் இருக்கும் நேர்மையான அதிகாரிகள் பரவலாக பேசி வருவது   குறித்து

வேலூர் மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலட்சுமி, விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் வேலூர் மாவட்ட ஆட்சியரின் செயல்பாட்டை!

Back to top button