வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை விலைக்கு வாங்கியதாக போலியான ஆவணங்களை வைத்து கொலை மிரட்டல் விடுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விவசாயி புகார்!

மதுரையிலிருந்து 40 கி.மீ. (25 மைல்கள்) தொலைவில் உள்ள சிறுமலை60000 ஏக்கர் பரப்பளவுள்ளவை (200 கி.மீ)

மலைப்பகுதியில் சவ் சவ், எலுமிச்சை, அவரை, காப்பி, ஏலக்காய் உள்ளிட்டவை விளைவிக்கப்படுகிறது. சிறுமலை பகுதியில் உள்ள பழையூர், வேளாம்பண்ணை, தாளக்கடை, கடமான்குளம், அகஸ்தியர்புரம், தென்மலை, புதூர் உள்ளிட்ட பல மலை கிராமங்கள் உள்ளது.
அதி தென்மலை கிராமம் மதுரை மாவட்டத்திற்குள் வருகிறது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் வருகின்ற ஜாரி விராலிப்பட்டியில் மீனாட்சிபுரம் கிராமம் அமைந்துள்ளது.

இப்பகுதி நிலத்தின் மீதான கட்டுப்பாடு யாருக்கு உரியது? என்பது குறித்து பல ஆண்டுகளாக வழக்கு நடந்து, இறுதியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையினால் 03/ 04/ 23 அன்று வனத்துறைக்குக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது.மீனாட்சிபுரத்தில் நுழைவதையும் விவசாயம் செய்வதையும் தடை செய்ய வனத்துறை சார்பாக தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.மீனாட்சிபுரம் கிராமம் பழங்குடிகள் மற்றும் பிற பாரம்பரிய வனவாழ் மக்கள் வன உரிமைச் சட்டம் 2006,(Scheduled Tribes and the Other Forest Dwellers (Recognition of Forest Rights) Act, 2006) கீழ் வரும் பகுதி. எனவே இந்த சட்டத்தின் அடிப்படையில் மக்களை விரட்டுவதென்பது சட்டவிரோதமானதாகும். ஆனால் வனத்துறையினர் தொடர்ந்து அவர்களை அப்பகுதியிலிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் வைக்கின்றனர். இந்தப் பகுதி முழுவதும் உள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலம் வனத்துறைக்கு சொந்தமாக உள்ளது.வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும்விவசாயிகள் ஐந்து ஏக்கர் 10 ஏக்கர் என தனித்தனியாக அவர் அவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். மொத்தம் 796 ஏக்கர் நிலத்தை, அங்கே விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு கொடுக்க முடியாது எனக் கூறிவிட்டனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவே விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது..இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை மேல்முறையீடு செய்தது. அப்போது வனத்துறைக்கு சாதகமாக தீர்ப்பாக அமைந்தது.உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மீனாட்சி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் இருப்பதாகவும் இந்த வழக்கில் அவர்களும் ஒரு மனுதாரராக இணைக்கப்பட்டுள்ளனர். பத்தாண்டுகளாக நடக்கும் வழக்கில் வனத்துறை மீனாட்சி கோயில் விவசாயிகள் மூன்று பேரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள். ஜாரி விராலிப்பட்டியிலிருந்து சாஸ்த்தா கோவில் செல்லும் பாதை நெடுக்கு என்று வளமான விவசாய நிலங்கள் பல உள்ளன. ஏறக்குறைய 250 விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

.இந்த நிலையில் தான் பெருமாள் என்பவர் விவசாயம் செய்து வரும் ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தை சோழவந்தானைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்ப வாங்கி விட்டதாகவும் ஆகவே அந்த விவசாய நிலத்தை விட்டு வெளியே செல்லுமாறு மிரட்டி வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.இது சம்பந்தமாக அந்த புகாரில் கூறியிருப்பது என்னவென்றால் சோழவந்தானைச் சேர்ந்த தங்கப்பாண்டி வயது 70 என்பவர் சிறுமலை தென்மலை பகுதியில் உள்ள மீனாட்சி புரத்தில் நிலம் வாங்கியதாகவும் அந்த நிலத்திற்கான ஆவணங்கள் இருப்பதாகவும் ஆனால் அந்த நிலத்தில் பெருமாள் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். ஆகவே நாங்கள் விலை கொடுத்து வாங்கிய விவசாய நிலத்தில் பெருமாள் விவசாயம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என வாடிப்பட்டி காவல் நிலையத்தில் தங்கப்பாண்டி சார்பாக சுருளி மோகன் என்பவர் 20/01/1/2025 புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார்.அந்தப் புகாரின் அடிப்படையில் வாடிப்பட்டி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் கணேஷ் குமார் விவசாயம் செய்து வந்த பெருமாளை விசாரணைக்கு அழைத்துள்ளார். வாடிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான பெருமாளிடம் உதவி காவல் ஆய்வாளர் கணேஷ் குமார் விசாரணை நடத்தியதில் பெருமாள் விவசாயம் செய்யும் நிலம் வனத்துறைக்கு சொந்தமானது என்றும் அந்த நிலத்தை எப்படி சோழவந்தனைச் சேர்ந்த தங்கப்பாண்டி வாங்க முடியும் அதுமட்டுமில்லாமல் நிலம் சம்பந்தமான புகாரை காவல் நிலையத்தில் எப்படி நீங்கள் விசாரிக்க முடியும் என்றும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் நீங்கள் மீனாட்சிபுரத்தில் உள்ள சுருளி மோகன் என்பவரை வைத்து இந்த பிரச்சனையை முடித்துக் கொள்ளுங்கள் என வாடிப்பட்டி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் கூறி அனுப்பி விட்டதாகவும் உடன் பின்னர் 01/02/3025 அன்று பஞ்சாயத்துக்கு வர வேண்டும் என்றும் அதுமட்டுமில்லாமல் விவசாயம் செய்யும் நிலத்தை ஸ்ரீதர் மற்றும் சுருளி மோகன் ஆகியோரிடம் ஒப்படைத்துவிட்டு உடனடியாக வெளியேற விட வேண்டும் என்றும் பிரபு என்பவர் மிரட்டியதாகவும் ஆகவே எங்கள் குடும்பத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீதர் சுருளி மோகன் ஆகிய இருவர் தான் பொறுப்பு என்றும் அதுமட்டுமில்லாமல் போலி ஆவணங்களை வைத்து வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை தாங்கள் வாங்கியதாக பல விவசாயிகளை தொடர்ந்து மிரட்டி வரும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.