Uncategorized

வாகன போக்குவரத்து நெரிசலை சீர் செய்யாமல் கட்டாய மாமூல் வசூல் !மாதம் 10 லட்சம் வரை கல்லா கட்டும் கிளாம் பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்! காவல்துறை உயர் அதிகாரிகளின் நடவடிக்கை எப்போது!?

கட்டாய மாமூல் வசூலில் மாதம் 10 லட்சம் வரை கல்லா கட்டும் கிளாம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்!

கிளாம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக இருக்கும் ஹேமத்குமார் இதற்கு முன்பு பீர்க்கங்கரணை போக்குவரத்து காவல் ஆய்வாளராக மூன்று ஆண்டுகளும், கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளராக இரண்டு ஆண்டுகள் பணி செய்து வந்துள்ளார்.தற்போது தாம்பரம் மாநகரம் காவல் ஆணையர் நியமிக்கப்பட்டு பிரிக்கப்பட்ட பிறகு மறைமலைநகர் போக்குவரத்து காவல் ஆய்வாளராக ஹேமத்குமார் இரண்டு ஆண்டுகளாக பணியில் இருந்து வருகிறார்.அதுமட்டும் இல்லாமல் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து ஜிஎஸ்டி சாலையில் மட்டும் போக்குவரத்து காவல் ஆய்வாளராக ஹேமத்குமார் பணியாற்றி வருகிறார். இவர்டைய சொந்த ஊர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி என்று கூறுகின்றனர்.வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் கள்புத்தூர் சேர்ந்த அதிமுக கட்சியில் முக்கிய புள்ளியாக இருப்பவர் முரளி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஹேமந்த் குமாரின் நெருங்கிய உறவினர் என்ற தகவலும் வந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நல்லம்பாக்கம் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்குவாரிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட கனரக டாரஸ் லாரிகள் மூலம் கனிம வளங்கள் தினம்தோறும் ஜி எஸ் டி சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அப்படி கனிமவளம் எடுத்துச் செல்லும் கனரக டாரஸ் லாரி ஒன்றுக்கு மாதம் சுமார் 1000 ரூபாய் வீதம் 500க்கும் மேற்பட்ட லாரிகளின் உரிமையாளர்களிடம் சுமார் ஐந்து லட்சம் வரை மாதம் மாமூல் வசூல் செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் தென் மாவட்டங்களில் இருந்து வரும்

சரக்கு லாரிகள் மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்தி

ஒரு குறிப்பிட்ட தொகை மாமுல் வசூல் செய்து வருவதாகவும் அதுமட்டுமில்லாமல் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள்,  தங்கும் விடுதிகள், அரசு டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மாமூல் வசூல் சுமார் ஐந்து லட்சம் வரை இருக்கும் என்றும் இந்த மாமூல் வசூல் செய்ய போக்குவரத்து காவலர்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கேமந்த் குமார் பயன்படுத்தி வருவதாகவும் மொத்தம் மாதம் 10 லட்சம் வரை கட்டாய மாமன் வசூல் செய்து கல்லா கட்டி வருவதாகவும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் கட்டாய மாமூல் வசூல் செய்யும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையிலும் அவர் மீது துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதற்கு என்ன காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறும் தகவல் என்னவென்றால் 200-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் இருந்து கனிமூன் எடுத்துச் செல்லும் லாரிகளின் உரிமையாளர்களிடமிருந்து மாதம் வாங்கும் மாமுல் பணம் மற்றும் ஜிஎஸ்டி சாலையில் உள்ள வணிக வளாகங்கள் ஓட்டல்கள் தங்கும் விடுதிகள் அரசு டாஸ்மாக் பார் ஆகியவற்றில் இருந்து மாமுல் வசூல் செய்யும் குறிப்பிட்ட தொகை ஆகியவற்றை வைத்துகாவல்துறையில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தொகையை மாதம் மாதம் குறித்த நேரத்திற்குள் கொடுத்து விடுவதால் உயர் அதிகாரிகள் காவல் ஆய்வாளர் ஹேமந்த் குமாரை அந்தப் பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யாமல் இருக்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவலையும் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஹேமந்த்குமார் மீது வரும் குற்றச்சாட்டுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவராமல் ஹேமந்த் குமாரின் நெருங்கிய உறவினர் என்று சொல்லிக் கொள்ளும்வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் கள்புத்தூர் சேர்ந்த அதிமுக கட்சியில் முக்கிய புள்ளியாக இருப்பவர் முரளி ஆதரவாக இருந்து பார்த்துக் கொள்கிறார் என்றும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

தற்போது தென் மாவட்டங்களில் இருந்து வரும் அரசு போக்குவரத்து பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரில் நிறுத்தி பயணிகளை இறக்கிச் செல்வதால், பயணிகள் சாலையைக் கடந்து மிகவும் ஆபத்தான முறையில் பேருந்து முனையத்துக்கு சொல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸாருக்கு பொதுமக்கள் தொடர்ந்து புகார்தெரிவித்து வருகின்றனர்.

தற்போது ஜிஎஸ்டி சாலையில் பெரும் வாகன போக்குவரத்து நெரிசல் தினம் தோறும் ஏற்பட்டும் வரும் நிலையில் வாகன போக்குவரத்தை சீரமைக்க போதுமான போக்குவரத்து காவலர்கள் இல்லாத நிலையில் மாமூல் வசூலிப்பதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கேமந்த் குமார் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஜிஎஸ்டி சாலையில்

வாகன போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதற்கு அனுபவம் இல்லாத 50 க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஒத்துழைப்போடு  நியமனம் செய்கின்றார். இதனால் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. நேர்மையும், திறமையும் உள்ள பல போக்குவரத்து காவல் ஆய்வாளர்களை இந்த பகுதியில் நியமிக்காமல் இருப்பதால் ஜிஎஸ்டி சாலை முழுவதும் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தினந்தோறும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணி செய்யும் உதவி காவல் ஆய்வாளர்களை பழி வாங்கும் நோக்கத்தில் அவர்களை பணி செய்ய விடாமல் பழிவாங்கும் நோக்கத்தில் ஹேமந்த் குமார் செயல்பட்டு வந்ததால் அவர்கள் வெவ்வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் பெற்று சென்று விட்டார்கள் என்ற தகவலையும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.ஆனால் இதுவரை போக்குவரத்து காவல் ஆய்வாளராக இருக்கும் கேம்குமார் சுழற்சி முறையில் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யாமல் இவருக்கு மட்டும் தனி அதிகாரத்தை உயர் அதிகாரிகள் கொடுத்து வருவது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு சனிக்கிழமையன்று இவருக்கு பிரத்தியமாக இரவு பணிக்காக நியமிக்கப்படுகிறார்., மிக முக்கிய நபர்கள் வருகையின் பொழுது சுழற்சி முறையில் அட்வான்ஸ் பைலட் பணி மற்ற ஆய்வாளர்களுக்கு தருகிறார்கள். இவர் ஒரு முறை கூட அட்வான்ஸ் பைலட் பணிக்கு இதுவரை ஹேமத்குமாருக்கு உயர் அதிகாரிகள் கொடுக்காதது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமில்லாமல் ஜிஎஸ்டி சாலையில் வாகன போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த ஆயுதப்படை காவலர்களை மட்டுமே போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணிக்கு ஈடுபடுத்தி விட்டு போக்குவரத்து காவலர்கள் மாமூல் வசூல் வேட்டைக்கு சென்று விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஒரு நாளும் வாகன போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் நேரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கேம குமார் நின்று சாலையில் போக்குவரத்தை சீர்படுத்தியதை பார்த்ததே இல்லை என அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.இவரது மாமூல் வசூல் வேட்டைக்கு சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டுமில்லாமல் தினந்தோறும் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி ஜிஎஸ்டி சாலை பகுதியில் நேர்மையும் திறமையும் உள்ள போக்குவரத்து காவல் ஆய்வாளர்களை நியமித்தால் மட்டுமே அப்பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாமல் வாகனங்கள் சீராக செல்ல முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து காவலாய் வளர்ப்பார் கேமன் குமார் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா !?இல்லை எப்போதும் போல் கேமன்குமார் மாதமாதம் கொடுக்கும் சன்மானத்தை வாங்கிக் கொண்டு கண்டும் காணாமல் இருக்கப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,!

Related Articles

Back to top button