மாவட்டச் செய்திகள்

அனாதை பிணத்திற்காக காத்திருக்கும் நவீன எரிவாயு எரியூட்டு தகன மேடை கட்டிடம்.. அதிர்ச்சி தகவல்!

கடந்த 2023 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி மதுரை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக சங்கீதா . பொறுப்பேற்றுக் கொண்டு அலுவல் பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். 2023 ஜூன் மாதம் 9 ஆம் தேதி மதுரை மாவட்டம் வாடிப் பட்டியில் நடந்து வந்த மக்கள் நல திட்டப்பணிகளை ஆய்வு அப்போது குறிப்பாக வாடிப்பட்டி மயானத்தில் 1.49 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வந்த நவீன எரிவாயு (கேஸ்) ஏரயூட்டு தகன மேடையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் நவீன எரிவாயு எரியூட்டு தகன மேடை கட்டிடத்தை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார்!


தற்போது நவீன எரிவாயு எரியூட்டு தகன மேடையின் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வாடிப்பட்டியில் திடீரென ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்தால் அவர்கள் உடலை மயானத்தில் எரியூட்ட வெகு நேரம் காத்திருந்து உடல்களை எரியூட்டும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மயானத்தில் நிழற்குடை இல்லாததால் மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு வரும் கிராம பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. ஆனால் வாடிப்பட்டி மயானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள
எரிவாயு நவீன எரியூட்டு தகன மேடை கட்டிடத்தை திறப்பதற்கான எந்த முயற்சியையும் மதுரை மாவட்ட ஆட்சியர் எடுக்காமல் மௌனம் காப்பதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக வாடிப்பட்டி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது அவர்கள் அதிர்ச்சி தரும் தகவல்களை தெரிவித்தனர். அது என்ன என்றால் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள எரிவாயு எரியூட்டு தகன மேடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்பு சோதனை ஓட்டம் செய்ய வேண்டும் என்றும் அந்த சோதனை ஓட்டத்திற்கு அனாதை பிணம் தேவைப்படுவதாகவும்
அனாதை பிணத்தை கொடுத்தால் மட்டுமே புதிதாக கட்டப்பட்டுள்ள எரிவாயு எரியூட்டு தகனம் மேடையை சோதனை ஓட்டம் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்க முடியும் என்றும் ஆகையால் அனாதை பிணத்திற்காக காத்திருப்பதாகவும் அனாதை பிணத்தை ஒப்படைத்தால் மட்டுமே அந்த உடலை வைத்து நவீன எரிவாயு எரியூட்டும் தகனம் மேடையில் சோதனை ஓட்டத்தை முடித்து ஒப்படைக்க முடியும் என்றும் ஒப்பந்ததாரர்கள் கூறுவதாகவும் ஆனால் அனாதைப் பிணத்தை யார் கொடுப்பது என மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம் முடிவு எடுக்காததால்
அதற்கான நடவடிக்கையை வாடிப்பட்டி பேரூராட்சி மற்றும் மாவட்ட ஆட்சி நிர்வாகம் எடுக்காமல் அலட்சியப் போக்கை கடைப்பிடித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல் மயானத்தில் சுமார் 11லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை கட்டிடத் தையும் பல வருடங்களாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப் பட்டதால் அதுவும் காட்சி பொருளாக மட்டுமே இருப்பதாகவும் அது மட்டுமில்லாமல் தற்போது மழைக்காலம் என்பதால் புதர் முண்டிக்கிடபதாகவும் இதனால் அந்த கட்டிடம் முழுவதும் விரைவில் சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் மக்கள் வரிப்பணம் 11 லட்சம் ரூபாய் வீணடிக்கபபட்டு உள்ளதாகவும் ஆகவே மொத்தம் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் மயானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறை கட்டிடம் மற்றும் நவீன எரிவாயு எரியூட்டு தகனம் மேடை ஆகிய இரண்டு கட்டிடங்களையும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Related Articles

Back to top button