விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து !? புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் நிலையம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் ஐஜி அவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் நிலையம் பெண் காவல் ஆய்வாளர் அழகம்மை மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் ஐஜி அவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளதாக தகவல்!


புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பல சமூக விரோதிகள் மது மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும் இந்தத் தொழிலில் ஈடுபடும் சமூகவிரோதிகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பல புகார்கள் மாவட்ட ஆட்சியாளர்மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்களிடம் செய்தி சேகரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது . ஆலங்குடி காவல் நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளராக பணியில் இருப்பவர் அழகம்மை.இப்பகுதியில் நிலம் மற்றும் சொத்து தகராறு ,அடிதடி பிரச்சனை ,கணவன் மனைவி சண்டை ,கந்து வடிக்கு பணம் கொடுத்து வாங்கல் பிரச்சனை, மாமியார் மருமகள் குடும்ப சண்டை போன்ற பல பிரச்சனைகளின் அடிப்படையில் தினந்தோறும் பல புகார்கள் பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்து வருகின்றனர். அப்படி கொடுத்த புகார் மீதுவிசாரணை என்ற பெயரில் புகார் கொடுத்தவர்களை அழைத்து நியாயமான முறையில் நேர்மையான முறையில் விசாரணை நடத்தாமல் அடாவடி பேச்சால் நேர்மையான அதிகாரி போன்ற தோரணையில் விசாரணையை திரைப்படத்தில் வரும் காட்சியை மிஞ்சும் அளவுக்கு அடுக்கு வசனத்தில் பேசி கட்டப்பஞ்சாயத்தை தொடங்குவாராம் இந்த ஆலங்குடி பெண் காவல் ஆய்வாளர் அழகம்மை.
அதன் பின்பு காவல் ஆய்வாளர் அழகம்மையின் விசாரணையின் வேகம் போகப் போக தவறு செய்தவர்கள் பக்கம் குற்றம் செய்தது குறைய தொடங்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏன் என்றால் காந்தி படம் போட்ட 2000 ரூபாய் 10 நோட்டுகள் குறையாமல் ஆலங்குடி பெண் காவல் ஆய்வாளர் கண்ணில் பட்டதும் தவறு செய்தவர்கள் பக்கம் தவறு இல்லாதது போலும் நியாயம் இருப்பது போன்றும் பேச தொடங்குவாராம் பெண் காவல்ஆய்வாளர் அழகம்மை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெண் காவல் ஆய்வாளர் அழகம்மை பேசும் மோசமான வார்த்தைகளால் புகார் கொடுத்த பாதிக்கப்பட்டவர்கள் மனவேதனையில் அங்கிருந்து சென்று விடுவார்களாம்.அதன் பின்பு தவறு செய்தவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து பேரம் பேசி ஒரு பெரும் தொகையை ஆய்வாளரின் கல்லாபெட்டியில் காணிக்கை செலுத்தி விட்டு தங்களது சட்டை கலரை துக்கிவிட்டு எங்களை யாரும் ஒன்னும் செய்ய முடியது என்ற தோனியில் திமிராக காவல்நிலையத்தின் வளாகத்தை விட்டு வெளியே சென்று மீண்டும் தங்களது ஆட்டத்தை ஆரம்பிப்பார்களாம் என்று தன் பக்கம் நியாயம் கிடைக்காத பாதிக்கப்பட்டவர்கள் பரிதாப நிலையில் மண வேதனையுடன் தினம் தினம் ஆலங்குடி காவல் நிலையத்தை விட்டு புலம்பிக் கொண்டு செல்வது வழக்கமான ஒன்றாகும் என்று குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.
மேலும்ஆலங்குடி பகுதியில் அனுமதி பெறாமல் ஒன்பதற்க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் பார்கள் இயங்கிவருவதாகவும் அந்தப் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அனுமதி இல்லாமல் நடத்தும் டாஸ்மார்க் பார்களின் உரிமையாளர்கள் ஆலங்குடி பெண் காவல் துறைஆய்வளர் அலகம்மைக்கு மாதம் மாதம் சேர வேண்டியதை சரியான நேரத்தில் சரியான இடத்தில் சேர்த்து விடுவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஆலங்குடி பெண் காவல் ஆய்வாளர் அழகம்மைக்கு மாதம் மாதம் சோர வேண்டியதை கொடுக்க தவறியவர்களை அழைத்து ருத்ர தாண்டவம் ஒலிக்க தொடங்குமாம். அதன் பின்பு காவல் நிலையத்தில் சேர வேண்டிய காணிக்கையை சேர்த்து விட்டு சென்று விடுவார்களாம்.
ஆலங்குடியின் பெண் காவல் நிலையம் ஆய்வாளர் அழகமையின் கட்டப்பஞ்சாயத்து மற்றும் வசூல் வேட்டை ஆட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஐஜி அவர்கள் ய முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஆலங்குடி பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.