ஸ்டாலினுக்கு 50நாட்கள் கெடு அண்ணாமலை!இல்லையென்றால் ஸ்டாலின் வீட்டு வாசலில் போராட்டம்!

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகை 1400 கோடி ரூபாய் வழங்க பல்வேறு போராட்டங்களை விவசாய சங்கங்களுடன் திமுக நடத்தியது!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் கரும்பு நிலுவைத் தொகை1400 கோடி ரூபாய் உடனே வழங்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதிமுக ஆட்சியில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு 40 முதல் 50 ரூபாய் வரை பெற்றுக்கொண்டுதான் நெல் மூடைகளை கொள்முதல் செய்வதாக குற்றச்சாட்டு இருந்தது அப்போது விவசாயிகள் சங்கம்ஆங்காங்கே போராட்டம் நடத்தி இந்த முறை முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது உடனே அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது இந்த கொள்முதல் முறை கடை திமுக ஆட்சி வந்தால் உடனே சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது
இந்த இரண்டு பிரச்சினைகளையும் வரும் 50 நாட்களுக்குள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தீர்க்க வேண்டும்.நிறைவேற்றத் தவறினால் தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு வாசலில் போராட்டம்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் அண்ணாமலை பிஜேபி தலைவர்!