மாவட்டச் செய்திகள்

பலவிதமான ஊட்டச் சத்து உணவுப்பொருட்களை தயாரித்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுத் தொகை வழங்கினார்!

04.03.2022
விருதுநகர் மாவட்டம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., பரிசுகளை வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (04.03.2022) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான ஊட்டச்சத்து உணவு மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.


கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள், குழந்தைகள் ஆகியோரது ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதனடிப்படையில், நடைபெற்ற போட்டியில், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், இயற்கை வழியில் விளைந்த ராகி, சாமை, கொள்ளு, குதிரை வாலி, எள்ளுருண்டை, முளைக்கட்டிய பயிர் வகைகள் மற்றும் இயற்கை விவசாய வழி பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பலவிதமான உணவுப்பொருட்களை தயாரித்து போட்டியில் கலந்து கொண்டனர்.
வட்டார அளவில் உள்ள ஊட்டச்சத்து பணியாளர்களால், இந்த போட்டியில் கலந்துகொண்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, முதல் மூன்று பரிசு பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முதல் பரிசாக ரூ.2500/-மும், இரண்டாம் பரிசாக ரூ.2000/- மும், மூன்றாம் பரிசாக ரூ.1500/- மும், சிறப்பு பரிசாக 2 நபர்களுக்கு தலா ரூ.500/- மும் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப. வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.ம;திலகவதி, சார் ஆட்சியர்(சிவகாசி) திரு.பிருத்திவிராஜ்,இ.ஆ.ப., திட்ட அலுவலர்(தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) .தெய்வேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் கல்யாணகுமார்(அருப்புக்கோட்டை).புஷ்பா(சாத்தூர்), வட்டாட்சியர் செந்தில்வேலன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

49 Comments

  1. Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button