ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மண் மற்றும் கனிம கடத்திச் சென்ற லாரியை சுற்றி வளைத்து பிடித்து பறிமுதல் செய்த காவல்துறையினர்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும், குறிப்பாக வேடசந்தூர், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து நள்ளிரவில்
அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக நூற்றுக்கும் மேற்பட்டல் கனரக டாரஸ் லாரிகளில் கனிம வளம் கடத்திச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சம
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்து வருகின்றனர்.
அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக நள்ளிரவில் கடத்தப்படும் கனிம வளங்கள் பெரும்பாலும் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து இரவு நேரங்களில் சட்டவிரோதமாக கனிம வளம் கடத்தலை தடுத்து நிறுத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டச்சத்திரம் அம்பளிக்கை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில்

காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக நள்ளிரவில் கனிம வளம் கடத்தி வந்த லாரியை சுற்றி வளைத்து பிடித்து

லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




