மதுவிலக்கு காவல்துறை

கள்ளச் சந்தையில் போலி மதுபாட்டில் அமோக விற்பனை! அதிர்ச்சி வீடியோ!கண்டுகொள்ளாமல் கல்லாக கட்டும் திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல்துறை!


திண்டுக்கல் மாவட்டம் பழனி அவள் உட்கோட்ட பகுதியில் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது பாட்டில் அமோக விற்பனை செய்யும் வைரல் வீடியோ!


77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு (ஜனவரி 26, 2026), தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், பார்கள் மற்றும் கிளப்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த “உலர் தின” (Dry Day) அறிவிப்பு, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபான விற்பனை நிலையங்களுக்குப் பொருந்தும் என தமிழக அரசு சார்பாக சுற்றறிக்கை
அனுப்பப்பட்டது.
அதை எடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டங்களில்
மதுபானம் (உரிமம்  மற்றும் அனுமதி) விதிகள் 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல். 1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல். 11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும், 26.01.2026 (திங்கள் கிழமை) குடியரசு தினம் முன்னிட்டு  மூட சுற்றறிக்கை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல்
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம்  மற்றும் அனுமதி) விதிகள் 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல். 1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல். 11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும், 26.01.2026 (திங்கள் கிழமை) குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.
விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்தால், தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்   என்று  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ.சரவணன்  சுற்றறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு மதுவிலக்கு காவல்துறையினர் உதவியுடன் கள்ளச் சந்தையில் மது பாட்டில் அமோகமாக விற்பனை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இது சம்பந்தமாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து காவல்துறையினர்  கண்டுகொள்ளாமல் கல்லாகட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக பழனி புளியம்பட்டி நால் ரோடு  அருகே டாஸ்மாக் மதுபான கூடம் பின்புறம் சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை  செய்யும் வீடியோ
மற்றும்
திண்டுக்கல் மாவட்டம்  பழனி தாலுகா
நெய்காரபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
குமரலிங்கம் ரோடு அய்யம்பாளையம் கடை திருப்பூர் மாவட்டம் எல்லை (செக்  போஸ்ட் ) அருகே சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில்  காலை 5 மணியிலிருந்து அதிக விலைக்கு  மது பாட்டில் விற்பனை செய்யும் வீடியோ ஆதாரத்துடன்
திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பழனி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு அனுப்பியும் சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்த சமூக விரோதிகளின் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதற்கெல்லாம் என்ன காரணம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல் என்னவென்றால் சட்டவிரோதமாக அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் மது பாட்டில் விற்பனை செய்பவர்கள் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை பழனி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் கொடுப்பதாகவும் இதனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் ஆகவே விடுமுறை நாட்களில் காலை 6:00 மணி முதலே மது பாட்டில்கள் விற்பனை அமோகமாக நடக்கும் என்றும் அதிர்ச்சி தகவலை சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ சட்டவிரோத மது பாட்டில் விற்பனையை தடுக்க திண்டுக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு காவல்துறையில் நேர்மையான காவல்துறையினரை நியமித்தால் மட்டுமே கள்ளச் சந்தையில் போலி மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை. பொறுத்திருந்து பார்ப்போம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையை…!?

Back to top button