காவல்துறை விழிப்புணர்வு
தேனி சின்னமனூர் அருகே அதிவேகமாக சென்ற டிப்பர் லாரி இரு சக்கர வாகனத்தில் மோதியதில் லாரி டயரில் பெண் சிக்கி உயிரிழந்த கோர சம்பவம்! அதிர்ச்சி வீடியோ!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் சக்கர வாகனத்தில் சென்ற அந்த பெண் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம்.




தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி உடல் மருத்துவ பிரோத பரிசோதனைக்கு விட்டு
விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பேருந்து நிறுத்தம் அருகே கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் தான் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாகவும் இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படதாகவும் இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.




