சட்டத்துக்கு புறம்பாக இரவு பகலாக கோவை மாவட்ட வீரப்ப கவுண்டனூர் சோதனைச் சாவடி வழியாக கேரளாவிற்கு கனிம வளம் கடத்திச் செல்லும் கனரக டாரஸ் லாரிகள் அதி…

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குள் கனிம வளம் எடுத்துச் செல்லும் கனரக டாரஸ் லாரிகள் செல்ல வேண்டுமென்றால் கோவை மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள வாளையார், வேலந்தாவளம், நடுப்புணி, வீரப்பனூர், மீனாட்சிபுரம், வலந்தாயமரம், ஆனைகட்டி, முள்ளி, காரப்பள்ளம்.
வாளையார் ஆகிய ஒன்பது சோதனைச் சாவடிகளை கடந்துதான் கேரளா மாநிலத்திற்குள் சொல்ல முடியும்.
குறிப்பாக முள்ளி சோதனை சாவடி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சுற்றுலா பயணிகளும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப் படுவதில்லை.
காரப் பள்ளம் சோதனைச் சாவடி வழியாக காலை 6 மணிக்கு , சரக்குகள் ஏற்றிச் செல்லும் தனியார் கனரக வாகனங்கள் மற்றும் , தனியார் பேருந்துகள் அனுமதிக்கப் படுவதால் காட் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள், அவசர தேவைக்கு செல்வோர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினந்தோறும் இன்னலுக்கு ஆளாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லைகளில் அமைந்துள்ள 9 சோதனை சாவடிகள் வழியாக கேரளாவிற்கு தினந்தோறும் கனிம வளம் எடுத்துச் செல்லும் நூற்றுக்கணக்கான கனரக டாரஸ் லாரிகள் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக
போக்குவரத்து விதிகளை மீறி கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு அணிவகுத்து செல்கின்றனர். அப்படி செல்லும் நூற்றுக்கணக்கான கனரக டாரஸ் லாரி ஓட்டுனர்களிடம்


கோவை மாவட்டம் தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள வீரப்பகவுண்டனூர் சோதனைச் சாவடியில் பணியில் இருக்கும் காவலர்கள் அரசு அனுமதி சீட்டு இருக்கிறதா! அளவுக்கு அதிகமாக இருக்கிறதா என எந்தவித சோதனையும் செய்யாமல் லஞ்சம் வாங்கிக் கொண்டு கேரளா மாநிலத்திற்குள் கனிம வளம் ஏற்றுச் செல்லும் லாரிகளை அனுமதித்துவரும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.
அது மட்டும் இல்லாமல் குறிப்பாக பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் கோவை திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆகியோர் சட்டவிரோதமாக கனிம வளம் கடத்திச் செல்லும் கனரக டாரஸ் லாரி உரிமையாளர்களிடம் மாதம் பல லட்சம் ரூபாய் மாமூல் வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலம் பல்லடம் கோடாங்கி பாளையம் இச்சிப்பட்டி, சாமிளாபுரம், வேலம்பாளையம் பகுதிகளில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கிவருகின்றன. அவற்றில் பல கல்குவாரிகள் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டு குடியிருப்புகளுக்கும், விவசாயத்துக்கும், நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றன. இந்த நிலையில் கோடங்கிபாளையத்தில் இயங்கும் தனியார் கல்குவாரியில், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் இயந்திரத்தை வைத்து, குழி தோண்டி, அதிக அளவு வெடி மருந்துகளைப் பயன்படுத்தி அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பல மடங்கு அதிக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரள மாநிலத்திற்கு கடத்தி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க கோவை மற்றும் திருப்பூர் கோவை மாவட்டங்களில் இயங்கும் கல் குவாரிகளின் விதி மீறல்களால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக
கல் குவாரிகள் இயங்க அனுமதி அளிக்கும் போது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுவின் அனுமதி பெறாமல் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்ட கல்குவாரிகளுக்கு சுமார் பத்து கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்ட போதிலும், அந்தக் கல்குவாரிகள் மீண்டும் இயங்க கனிமவளத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் கூறிய போது
சட்டத்திற்கு உட்பட்டே கனிம வளங்கள் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றன
“கனிம வளங்கள் கொள்ளை போகிறது என இனிமேல் யாரும் சொல்ல முடியாது!” சட்டத்துக்கு புறம்பாக கனிம வளங்கள் எடுத்துச் சென்றதாக இதுவரை 21 ஆயிரம் வாகனங்கள் பிடிக்கப்பட்டுள்ளன என கூறியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் கனிமவளத்துறை அதிகாரிகளின்
செயல்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் , அண்டை மாநிலங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக கனிம வளங்களை எடுத்து செல்லும் வாகனங்களை கைப்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலும் பதிவு செய்யப்படாமல் இயங்கும் செங்கல் சூளை, எம்.சாண்ட் மற்றும் கிரஷர் அலகுகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படைகள் மண்டலங்களில் திடீர் தணிக்கை மேற்கொண்டு கனிமங்கள் கள்ளத்தனமாக கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த உத்தரவை எல்லாம் காற்றில் பறக்க விட்டு கல்லா கட்டி வரும் திருப்பூர் கோவை மாவட்ட கனிமவளத்துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது அமைச்சர் துரைமுருகன் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
.




