காவல் செய்திகள்

10 லட்சம்  மோசடி! சஸ்பெண்ட் ஆன பெண் ஆய்வாளருக்கு ஆதரவாக  துணை காவல் கண்காணிப்பாளர்!??

10 லட்சம் பணத்தை பறித்துக்கொண்ட மதுரை மாவட்டம்
நாகமலை புதுக்கோட்டை ஆய்வாளர் வசந்திக்கு
சமையநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆதரவாக இருந்ததாக குற்றச்சாட்டு!?

மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் ஆய்வாளராக  வசந்தி பணியாற்றி வந்த போது 

அந்த புகார்கள் எல்லாம் மறைக்க அப்போது இருந்த சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர்
சட்டவிரோதமாக மணல் திருடி வந்த நபர்களுக்கும்
லாரியில் எடுத்துச் செல்ல உதவியாக இருந்த
காவல் ஆய்வாளர் வசந்திக்கு ஆதரவாக இருந்து வந்ததாக தகவல்கள் வந்தன.

சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆதரவோடு
வைகை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் திருடி வந்தவர்களுடன் கைகோர்த்து கொண்டு மாதம்
பல லட்சங்கள் கைமாறாக பெற்றுக்கொண்டதாக பொது மக்களால் புகார்கள் வந்தது.

அந்த நிலையில்
சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார் வசந்தி.
அருப்புக்கோட்டை காவல் ஆய்வாளராக சில மாதங்களே பணியாற்றி வந்தார் அந்த நிலையில்
அங்கிருந்து ஒரு மாதம் முன்பு மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்

கடந்த 5 ந்த் தேதி சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த கொங்கன் மகன் ஹர்சத் வயது 33 இவர் மதுரை வில்லாபுரத்தில் பேக் தைக்கும் டெய்லராக பணி செய்து வந்தார் தற்போது சொந்தமாக கடை வைப்பதற்கு தன் முதலாளியிடம் நான்கு லட்சமும் தன் உறவினர்களிடம் பெற்ற 6லட்சம் மொத்தம் பத்து லட்சத்தை வைத்திருந்தார். சொந்தமாக கடை வைக்க 10 லட்சம் போதாதா நிலையில் மதுரை திருமங்கலம் பாண்டியனிடம் 5 லட்சம் கடன் கேட்டிருந்தார்   பாண்டியன் 5 லட்சம் கடனுக்காக ஆவணங்களை எடுத்துக்கொண்டு நாகமலை புதுக்கோட்டைக்கு வரச் சொல்லியிருந்தார்.

ஹர்ஷத் ஆவணங்களுடன் காத்திருக்கும் பொழுது பாண்டியன் நண்பர்கள் கார்த்திக், உக்கிரபாண்டி ,பால்பாண்டி மூன்று பேரும் அங்கு வந்தார்கள் வந்த சிறிது நேரம் கழித்து நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி அந்த இடத்திற்கு வந்தார்.

அப்போது காவல் ஆய்வாளர் ஹர்ஷத்திடம் உங்களின் மீது புகார் உள்ளது காவல் நிலையத்திற்கு வருமாறு வாகனத்தில் ஏற்றி கையில் இருந்த 10 லட்சத்தை பெற்று ஆய்வாளர் வாகன ஓட்டுனர் இடம் கொடுத்து வாகனத்தை காவல் நிலையத்துக்கு செல்லும்படி ஓட்டுநரிடம் சொல்லி வாகனம் சென்ற சிறிது தூரத்தில் வாகனத்தை நிறுத்தி ஹார்ஷத்தை இறக்கிவிட்டு காவல் நிலையத்துக்கு வரச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

பணத்தைப் பறிகொடுத்த ஷர்சத் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு சென்று காத்திருந்தார் அப்போது காவல் ஆய்வாளர் ஹர்சத்தின் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டார் .எவ்வளவோ கெஞ்சியும் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து கொண்டிருந்தார்.

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட ஹர்சத் சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க சென்றபோது அவர் காவல் ஆய்வாளர் வசந்தி அவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாகவும் தகவல் வந்துள்ளது! நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் 20 நாட்களாக பத்து லட்ச ரூபாயை கையில் வைத்துக் கொண்டு இருந்ததை துணை காவல் கண்காணிப்பாளருக்கு தெரியாமல் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது! ஆகையால் இந்த விஷயத்தில் சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்டு இருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது!!

மதுரைமாவட்டம் சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளராக வரும் அனைவரும் சரகத்தில் உள்ள காவல் ஆய்வாளர்களுக்கு சாதகமாகவே நடந்து வந்துள்ளதாக இதுவரை தகவல் வந்துள்ளது!

பணத்தை பறி கொடுத்த ஹர்ஷத் என்ன செய்வது அறியாது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்

உடனேமாவட்டக்குற்றப்பிரிவு காவல் துறைக்கு காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் அவர்கள் விசாரிக்க உத்தரவிட்டார்.
உடனே குற்றப்பிரிவு காவல்துறையினர் நடந்த சம்பவத்தை விசாரித்ததில் வசந்தி ஆய்வாளர் தன் வாகன ஓட்டுநரிடம் 10 லட்சத்தை கொடுத்து வைத்திருக்கச் சொல்லி இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது .

சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளராக வரும் அனைவரும் சரகத்தில் உள்ள காவல் ஆய்வாளர்களுக்கு சாதகமாகவே நடந்து வந்துள்ளதாக இதுவரை தகவல் வந்துள்ளது!

இதையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் வசந்தியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தனர் உடனே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் அவர்கள் காவல் ஆய்வாளர் வசந்தியை  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தற்போது வழிப்பறி செய்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்படுவார் என்றநிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு தலைமறைவாக உள்ளதாக தகவல் வந்துள்ளது .

இந்த வழக்கு விசாரனையில்  சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் உடந்தையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறைக்கு எழுந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

எது எப்படியோ பொது மக்களுக்கு காவலாக இருக்கும் காவல்துறையை நம்பி தான் வியாபாரிகள்  பணத்தை எடுத்து சென்று வருகின்றனர் .

வேலியே பயிரை மேய்வது போல ஒரு சில காவல் ஆய்வாளர்கள் ஒரு சில காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் இப்படி பணத்திற்கு ஆசைப்பட்டு தவறான செயல்களில் ஈடுபடுவதால் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.

எது எப்படியோ தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் இதுபோல காவல் ஆய்வாளர் உயரதிகாரிகள் தவறு செய்வதாக பொது மக்கள்கொடுக்கும் புகார்களை  நேரடி விசாரணை செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்நிலை மாறும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button