100 கோடி மதிப்புள்ள 25 ஏக்கர் அரசு நிலத்தை மதுரை பரவை ஶ்ரீ மீனாட்சி மில் யூனிட் GHCL என்ற பெயரில் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து விற்பனை செய்ததாக அதிர்ச்சி தகவல்!
ஜவுளி ஆலைகளை நிறுவி, நாட்டின் தலைசிறந்த ஜவுளி ஆலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்து, கருமுத்து தியாகராஜ செட்டியார் ஒரு மறுக்கமுடியாத ஜவுளி மன்னராகவும், தி சோனா குழுமத்தின் உந்து சக்தியாகவும் திகழ்ந்தவர் என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.செட்டியார் தனது வாழ்நாளில் பதினான்கு ஜவுளி ஆலைகளை நிறுவினார் – இவற்றில் குறிப்பிடத்தக்கது .
1925 ஆம் ஆண்டில் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும் நெசவு ஆலையும அமைத்தார். மீனாட்சி மில்ஸ், ஒரு காலத்தில் ஆசியாவின் நவீன நூற்பு ஆலை மற்றும் ருக்மணி மில்ஸ் என்று பெயரிடப்பட்டது.
தியாகராசச் செட்டியார் நூல் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு இந்தியாவின் மாபெரும் தொழில் மேதைகளுள் ஒருவரானார்.மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் அறங்காவலர் குழுத் தலைவராகச் செவ்வனே பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது!
14 ஜவுளி ஆலைகள், 19 கல்வி நிலையங்கள், மதுரை வங்கி, மதுரை காப்பீடு நிறுவனம் ஆகியவற்றை நிறுவியவர். கலைத்தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் 81 வயதில் (1974) மறைந்தார்.கருமுத்து தியாகராஜர் செட்டியார், ராதா தம்பதியின் ஒரே மகன் கருமுத்து கண்ணன் ஆவார்.கருமுத்து கண்ணன் 70 வது வயதில் கடந்த ஆண்டு மே மாதம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள பிரபல தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கியவர்
கருமுத்து தியாகராஜன் செட்டியார் என்பதில் தமிழர்களாக இருக்கும் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும்.
ஆனால் தற்போது முத்து தியாகராஜன் செட்டியார் குடும்பத்தின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் 1925 ஆம் ஆண்டு மதுரை பரவை அருகே தொடங்கிய மீனாட்சி மில்லுக்கு தமிழக அரசு சார்பாக வழங்கிய தற்போது 100 கோடி மதிப்புள்ள சுமார் 25 ஏக்கர் அரசு நிலங்களை GHCL நிறுவனம் மேலாளர் N. குமார் என்பவர் நில நிர்வாக அனுமதி இல்லாமல் முறைகேடாக விற்பனை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் பள்ளத்தூர் கிராமம் குன்றக்குடி ரோடு கா.எண் .7 என்ற முகவரியை சேர்ந்த திரு படிக்காசு மகன் பாலசுப்பிரமணியம் என்பவரால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு எண் WP (MD)no.13518/2024 இன் படி வழக்கு தொடரப்பட்டது தொடர்பாக விவரங்களை தெரிவித்துள்ளனர்.
அதில் பார்வை ஒன்றில் காணும் அரசாணை எண் 1012 நாள் 3 /12 /1993 இன் படி மதுரை மாவட்டம் வடக்கு வட்டம் பரவை 2 பிட் கிராமத்தில் ஸ்ரீ மீனாட்சி மில் லிமிடெட் நிறுவனத்திற்கு தமிழ்நாடு நில சீர்திருத்தச் சட்டம் 1961 பிரிவு 37 A இன் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலத்தில் அனுமதியின்றி விற்பனை செய்ததை கண்டறிந்து பார்வை 2 இல் காணும் மதுரை வடக்கு வட்டாட்சியர் விசாரணை செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால்
மதுரை மாவட்டம் மதுரை வடக்கு வட்டம் கிராமத்தில் இயங்கி வந்த ஸ்ரீ மீனாட்சி மில் லிமிடெட் நிறுவன ஆலைக்குரிய நில உச்சவரம்பில் இருந்து விலக்களிக்கப்பட்ட நிலங்களான மதுரை வடக்கு வட்டம் பரவை 2 பிட் கிராமம் ஆர் எஸ் என் 108 /1, 108 3c ,108/10, 109/2சி, 109/2 e ,109 / 2 d மற்றும் 111/2 ஆகியவற்றின் புல எண்ணில் 108/1 ஐ தவிர மற்ற புல எண்கள் அனைத்தும் பல உட் பிரிகளாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு நீல சீர்திருத்தம் சட்டம் 1961 கீழ் விளக்க அளிக்கப்பட்ட நிலங்கள் யாவும் நில சீர்திருத்த சட்ட விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கிராம கணக்குகளை பரிசீலனை செய்ததில் கூளப்பாண்டி மண்டல துணை வட்டாட்சியர் அறிக்கை படியும் தெரிய வருகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காணும் பொருள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மதுரை வடக்கு வட்டாட்சியரின் குறிப் பானை அறிக்கை கோரி கோப்பு நிலுவையில் இருந்த நிலையில் பார்வை 2 இல் காணும் மனு மற்றும் மதுரை வடக்கு வட்டாட்சியரின் குறிப்பான அறிக்கை கோரி தோப்பு நிலுவையில் இருந்த நிலையில் பார்வை 2 இல் காணும் மனு மற்றும் மதுரை வடக்கு வட்டாட்சியரின் அறிக்கை தொடர்பாக மதுரை வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் விசாரணை செய்யும் பொருட்டு முறையாக விசாரணை அனுப்பப்பட்டு 9.2.2024 முதல் விசாரணை நடைபெற்றது முதற்கட்ட விசாரணையில் அரசாணை எண் 1012 நாள் 3 .12 .1993 பிரிவு 37 /A இன் கீழ் ஸ்ரீ மீனாட்சி மில் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு விதிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்களை GHCL நிறுவனம் அரசிடம் இருந்து அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக விற்பனை செய்து உள்ளதாக தெரிய வருகிறது .
மேலும் 1961 தமிழ்நாடு நிலை சீர்திருத்த சட்டம் பிரிவு 37/A இன் கீழ் அனுமதி பெற்று மீனாட்சி மில் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து நிறுவனத்தை நடத்த இயலாத காரணத்தினால் மீனாட்சி மில் பெயரில் செயல்பட்டு வந்த மொத்த கம்பெனியின் GHCL நிறுவனம் SICA the sick industrial companies (special provisional) act 1985 act number 1 of 1986 மூலம் கையகப்படுத்தி அதன் தொடர்ச்சியாக GHCL நிறுவனம் பிரிவு 37 A கீழ் அரசிடம் இருந்து அனுமதி பெறாமல் மேற்படி நிறுவனத்தின் பெயரை மட்டும் GHCL நிறுவனம் என மாற்றம் செய்யப்பட்டு தற்போது இயங்கி வருகிறது. மேலும் மேற்படி நிறுவனத்திடம் இருந்து பிரிவு 37/A இன் படி அங்கீகரிக்கப்பட்ட நிலங்கள்( standard acres ) மற்றும் விதிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்களின் இறைய ஆவணங்களை விசாரணையில் சமர்ப்பிக்குமாறு GHCL நிறுவனத்திடம் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்படி விசாரணையில் மனுதாரர்கள் பாலமுருகன் மற்றும் மூன்று நபர்கள் மதுரை வடக்கு வட்டம் வட்டம் 2 பிட் கிராமம் ஆர் எஸ் என் 108/1, 108/3 c 108/10, 109/2c 109/2e 109/2D, மற்றும் 111 /2 ஆகியவற்றின் புல எங்களில் 108/1 ஐ தவிர மற்ற புல எண்கள் அனைத்தும் பல உட் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு நில சீர் திருத்தச் சட்டம் 1963ல் விலக்களிக்கப்பட்ட நிலங்கள் யாவும் நீல சீர்திருத்த சட்ட விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து மேலும் மேற்காணும் புல எண்களுக்கான பத்திரப்பதிவு நிறுத்தி வைக்க கோரியதன் பேரிலும் மேற்படி விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்டு இருக்கும் நேரில் மேலும் பல பத்திரப் பதிவுகளும் பட்டா மாறுதல்களும் நடைபெற கூடும் என்பதாலும் மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருவதாலும் விசாரணை முடியும் வரை மதுரை வடக்கு வட்டம் பரவை 2 பிட் கிராமம் ஆர் எஸ் என் 108/1 108/3 c, 108 /10 109/2 c, 109/2e 109/2d மற்றும் 111/2 ஆகியவற்றில் புல எண் 108/2 ஆகிய அனைத்து சர்வே எண்களிலும் எந்தவித பத்திரப்பதிகளும் மேற்கொள்ள வேண்டாம் என மனுதாரர் கோரிக்கையின் பேரிலும் அறியா கிரைய பெறுபவர்களை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட பதிவாளர் மதுரை தெற்கு மற்றும் சார்பாக விளாங்குடி ஆகியோருக்கு 22. 3 .2024 தேதியிட்ட கடிதத்தின் பேரில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேற்காணும் பொது தொடர்பாக 9.2.2014 மற்றும் பல விசாரணை அழைப்பாளர்கள் அனுப்பப்பட்டது பார்வை ஆறில் கண்டு கொள்ளாறு விசாரணையில் GHCL நிறுவனத்தினர் சமர்ப்பித்த ஆவணங்களில் மதுரை உள்ளூர் திட்ட குழும உறுப்பினர் செயலாளர் பொறுப்பு அவர்களின் நடவடிக்கைகள் நகல் எண் 4393/20 18 மதி 2 நாள் 17.12 .2018 படி மற்றும் பரவை பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களின் நடவடிக்கைகள் நகல் என் 66/2019 நாள் 27. 6 .2019 இன் படி நிபந்தனையுடன் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது .
மேற்படி நிறுவனத்தினர் சென்னை நில சீர்திருத்த ஆணையரிடம் ஒப்புதல் பெற்றதாக தெரியவில்லை .
எனவே மேற்படி நிறுவனத்தார் நில சீர்திருத்த ஆணையர் சென்னை அவர்களிடம் தமிழ்நாடு நில சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணய) சட்டம் 1961 பிரிவு 37A இன் படி அனுமதி பெறவில்லை என்றால் தமிழ்நாடு நில சீர்திருத்த நில உச்சவரம்பு நிர்ணயச் சட்டம் 1961 பிரிவு 20 இன் படி ரத்து செய்வதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மேல் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 15 ஏக்கர் சர்வே எண்கள் மற்றும் மதுரை மாவட்டம் வடக்கு வட்டம் பரவை கிராமம் பிட் 2 ஸ்ரீ மீனாட்சி மில் லிமிடெட் ஆலைகுறிய விளக்கு அளிக்கப்பட்ட நில உச்சவரம்பு சட்டம் 1961 பிரிவு 37/A இல் உள்ள அரசு நிலங்கள் சார்வே எண் 26/1, 26/2B, 26/5, 25/6, 26/7, 26/8,26/9, 31/10A 105/1A 109/3C 108/3c1A,109/2C1A இந்த சர்வே எண்களில் சுமார் 15 ஏக்கர் அரசு நிலமும் மோசடியாக பத்திரப் பதிவு செய்து உள்ளதாக மதுரை கோட்டாச்சியருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை மணு கொடுத்து நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.அரசாணை நிலை எண் 1012 வருவாய்த்துறை நாள் 3 /12/1993
மதுரை மீனாட்சி மில் நில உச்சவரம்பில் விலக்களிக்கப்பட்ட நிலங்கள் 37 /A இன் கீழ் உள்ள சர்வே எண்கள் வாரியாக உள்ளது.
மற்றும் அரசாணை நிலை எண் 572 நில ஒப்படைப்பு
247 /2 இல் 0.84 ஏக்கர் உள்ளது. தற்போதைய சர்வே எண் 109/2E ஆகும் .
சர்வே எண்கள் (109/2C) (109/2E)(108 /3C )( 129/3B )பேர் மற்றும் 111/2
ஆகியவற்றில் உள்ள நிலங்கள் பல மனைகளாக பிரித்து ஆர் ஜே டி நகர் மற்றும் ஆர் ஜே நகர் என பெயரிட்டு DTCP அனுமதி நகல் எண் 4393/2018 நாள் 17/12/2018 அனுமதி வழங்கியதில் GHCL யூனிட் மீனாட்சி மில் மேலாளர் என்.குமார் அவர்களும் பரவை பேரூராட்சி முன்னாள் சேர்மன் ராஜாவின் மூலம் அனுமதி பெற்றது 17/4/2013 நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு மதுரை மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் நகல் எண் 1432/2023 நாள் 24/07/2023 பரவை ஆர் ஜே டி நகர் அண்ட் ராஜா நகர் லேவுட் அனுமதி ரத்து செய்ய சென்னை நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் நகல் எண் 29 26/2023 நாள் 12 /9 /20 23 பரவை ஆர் ஜே டி நகர் லேவுட் அனுமதி ரத்து செய்ய சென்னை நகர ஊரமைப்பு இயக்குனர் ஒப்புதல் பெற்ற பிறகு ரத்து செய்ய இயலும் என்று தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல்
GHCL யூனிட் மீனாட்சி மில் மேலாளர் என். குமார்
ஆர் ஜே டி நகர் மற்றும் ராஜா நகர் ஆகிய இடங்களில் பத்திர பதிவுகளுக்கு
O.S.R. land பதிவு செய்ய பல போலியான ஆவணங்களை பயன்படுத்தி உள்ளார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
குறிப்பாக மீனாட்சி மில் பல பத்திரங்கள் காணாமல் போனதாக திருநகர் காவல் நிலையத்தில் மிஸ்ஸிங் சர்டிபிகேட் வாங்கி உள்ளார்கள் வாங்கிய நாள் 10 1 2019 புகார் பதிவு செய்யப்பட்ட நாள் 21/12 /2018 ஆகும்.
அதாவது லேஅவுட் அனுமதி 17 /12 /2018 அன்று வழங்கப்பட்டுள்ளது வழங்கப்பட்டுள்ளது.
ஆகையால் இந்த மிஸ்ஸிங் சர்டிபிகேட் மோசடியாக வாங்கப்பட்டுள்ளது.
மற்றும்
லே அவுட் அனுமதி நாள் 17/12 /2018 பிறகுதான் 21/12 /2018 புகார் கொடுக்கப்பட்டு
10/ 1 /2019 அன்று
ஆவணங்கள் தொலைந்து போனதாக (missing certificate )மோசடியாக பெறப்பட்டுள்ளதாகவும் ஆர் ஜே டி நகர் மற்றும் ராஜா நகர் பிளாட்டுக்களில் பதிவு செய்துள்ள O.S.R ஆவணம் முதல் அனைத்தும் பிளாட்டிகளின் ஆவணங்களும் மோசடியாக பத்திரப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக போலி ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
100 கோடி மதிப்புள்ள 25 ஏக்கர் அரசு நிலத்தை போலி ஆவணங்களை வைத்து மீனாட்சி மில் என்ற பெயரில் இருந்து GHCL என்ற பெயரில் நூதன மோசடி செய்துள்ளது தற்போது அம்பலமாக உள்ளது. இதனால் மோசடியாக விற்ற நிலத்தை வாங்கிய நூற்றுக்கணக்கான பேர் தற்போது நீதிமன்றத்திற்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது எப்படியோ வீடு கட்டுவதற்கு இடம் வாங்கும் போது அந்த இடத்திற்கான மூலப் பத்திரம் அது உண்மையான மூல பத்திரமா என நன்கு ஆராய்ந்து அதன் பின்பு அந்த இடத்தை பணம் கொடுத்து வாங்கினால் மட்டுமே தற்போது அந்த இடம் நமக்கு சொந்தமாக இருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை. இனிமேலாவது மோடி ஆவணங்களை வைத்து நிலம் விற்பனை செய்யும் மோசடி கும்பல்களிடம் சிக்காமல் பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.