167 காவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட ஆவடி கூடுதல் காவல் ஆணையர் .
விருப்ப மனு வாங்காமல் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக காவலர்கள் வேதனை!
காவலர்களிடம்
விருப்ப மனு பெற ஆவடி காவல் ஆணையர் மற்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை!

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தை தமிழக முதலமைச்சர் காணொலி வாயிலாக முறைப்படி துவக்கி வைத்தார்.
ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தின் கீழ் மாதவரம் பால்பண்ணை
செங்குன்றம்
மணலி
மணலி நியூ டவுன்
எண்ணூர்
மாங்காடு
பூந்தமல்லி
சாத்தாங்காடு
நசரத்பேட்டை
முத்தாபுதுப்பேட்டை
பட்டாபிராம்
அம்பத்தூர்
அம்பத்துார் எஸ்டேட்
கொரட்டூர்
திருவேற்காடு
போரூர்
ஆவடி
ஆவடி டேங்க் பேக்டரி
திருமுல்லைவாயல்
திருநின்றவூர்,வெள்ளவேடு
செவ்வாய்பேட்டை
சோழவரம்
மீஞ்சூர்
காட்டூர்
ஆகிய 25 காவல் நிலையங்கள் செயல்படுகிறது.
தற்போது ஆவடி காவல் ஆணையராக சங்கர் ஐபிஎஸ் அவர்கள் இருக்கிறார்கள். ஆவடி கூடுதல் காவல் ஆணையராக
பவானீஸ்வரி ஐபிஎஸ் அவர்கள் இருக்கிறார்கள்.
ஆவடி காவல் சரகத்தில் கடந்த
மூன்று வருடங்களாக ஒரே காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் , தலைமை காவலர்கள் உட்பட 167 காவலர்களை பணியிட மாற்றம் செய்து ஆவடி கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் இந்த பணியிட மாற்றம் செய்யும் முன்பு காவலர்களிடம் விருப்ப மனு வாங்காமல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக காவலர்கள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று விருப்பமான பெறாமல் எப்படி பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் முறையிட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக காவலர்கள் மத்தியில் கூறும் போது
உதாரணத்திற்கு பூந்தமல்லி பகுதியில் குடியிருக்கும் காவலர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் நிலையம் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தால் குடியிருக்கும் வீட்டில் இருந்து காவல் நிலையத்துக்கு செல்வதற்கு சுமார் 2 மணி நேரம் ஆகும்.
அது மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் காவல் நிலையத்திற்கு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்போது உயர் அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு காவலர்கள் தள்ளப்படுவார்கள்.
உயர் அதிகாரிகள் ஏதாவது சொல்லிவிட்டால் காவலர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு அவர்களது பணியில் முழு கவனத்தை செலுத்த முடியாமல் போய்விடும். இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள்.
இதையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு தான்
ஒரே காவல் நிலையத்தில் மூன்று வருடங்கள் பணிபுரிந்த காவலர்களை
பணியிடம் மாற்றம் செய்வதற்கு முன்பு காவலர்களிடம் விருப்ப மனு கேட்கப்படுகிறது.
விருப்ப மனு என்பது, பணியாளர்கள் தங்கள் விருப்பமான பணியிடங்களை அல்லது இடமாற்றத்திற்கான காரணங்களை தெரிவிக்கும் ஒரு முறையாக உள்ளது. இது ஒரு முறைசாரா கோரிக்கை அல்ல, மாறாக, ஒரு செயல் முறைக்குட்பட்ட ஒரு முறை. விருப்ப மனுவை சமர்ப்பிப்பதன் மூலம், காவலர்கள் தங்கள் விருப்பங்களையும், கருத்துகளையும் வெளிப்படுத்தலாம், மேலும் அவர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.பணியாளர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தவும், தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும்.இது இடமாற்ற செயல்முறையை வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும் ஆக்குகிறது.
விருப்பங்களை கருத்தில் கொள்வதன் மூலம், பணிக்குச் செல்லும் காவலர்களின் திருப்தியை அதிகரிக்க முடியும்.இது மேலாண்மைக்கு பணியாளர்களின் விருப்பங்களையும், திறன்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது.
அதுமட்டுமில்லாமல் காவலர்களின் விருப்பங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன, குழப்பங்கள் மற்றும் அதிருப்தி தவிர்க்கப்படுகிறது, நிறுவனத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பு அதிகரிக்கும். என்கின்றனர் மூத்த காவல் உயர் அதிகாரிகள்.
ஆகையால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்களிடம் விருப்ப மனு பெற ஆவடி காவல் ஆணையர் அவர்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என காவலர்கள் மத்தியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.




