20 ஆண்டுகளுக்கு மேல் சீரமைகாமல் கிடப்பில் போடப்பட்ட சலை ! பாலம் இல்லாததால் ஆற்றுக்குள் உயிரை பணயம் வைத்து செல்லும் பொதுமக்கள்! பொதுமக்களின் உயிரை துச்சமாக நினைக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம்!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் தொகுதியில் சின்னாளபட்டி, அகரம், தாடிக்கொம்பு, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை ஆகிய ஏழு பேரூராட்சிகள் உள்ளன. மேலும் ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 48 ஊராட்சிகளும் அடங்கியுள்ளது. தொகுதியில் உள்ள

ஆத்தூர் நீர்த்தேக்கம் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் பல கிராமங்கள் அமைந்துள்ளதால் தென்னை விவசாயம் அதிகளவில் உள்ளது. நெல் மற்றும் இதர பயிர்களும் பயிரிடப்படுகிறது. அதிகம் விவசாயம் சார்ந்தே மக்கள் உள்ளனர். வேலைவாய்ப்புக்கள் வழங்கும் வகையில் பெரிய தொழிற்சாலைகள் இத்தொகுதியில் இல்லை. தென்னை மரங்கள் அதிகளவில் இருப்பதால், இவை சார்ந்து பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அமைத்து இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆத்தூர் தொகுதியில் கிராமங்கள் அதிகளவில் இருப்பதால் கிராமப்புற மாணவர்கள் முன்னேற்றத்திற்காக ஒரு அரசு கலைக்கல்லூரி அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழந்துள்ளது. 1977 முதல் நடைபெற்ற 9 தேர்தல்களில் அதிமுக ஐந்து முறையும், திமுக நான்கு முறையும் வெற்றிபெற்றுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் நத்தம் விஸ்வநாதன் 90 ஆயிரம் வாக்குகளை பெற்றார். திமுக கட்சி வேட்பாளர் ஐ பெரியசாமி ஒரு லட்சத்து 21 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான

ஐ.பெரியசாமி உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி சில மாதங்களுக்கு முன்பு


ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தைச் சேர்ந்த பொன்னிமாந்துரை, கொட்டப்பட்டி கிராமத்தில் இருந்து தனது ஆய்வை தொடங்கி புதுப்பட்டி, மாங்கரை, குட்டத்துப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, மெட்டுர்பலக்கனூத்து சாலை, சித்தரேவு சாலை, ஆத்தூர் ஊராட்சி சாலை மற்றும் சின்னாளபட்டி பேரூராட்சி வழியாக வரும் சித்தரேவு சாலை, காந்திகிராமம் சாலை மற்றும் அம்பாத்துரை- செம்பட்டி சாலை ஆகிய சாலைகளை ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த முன்னாள் தலைமைப் பொறியாளரும், சிறப்பு அலுவலருமான சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்டப் பொறியாளர் சங்கர், குமரன், நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டப் பொறியாளர் சந்திரசேகரன், கோட்டப் பொறியார் மகேஷ்வரன், உதவி கோட்டப் பொறியாளர்கள் கண்ணன், முனீஸ்வரன் உட்பட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். ஆத்தூர் தொகுதியில் சேதம் அடைந்த சாலைகளை புதுப்பிப்பதோடு தேவைப்படும் இடங்களில் வடிகால் வசதியும் செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு செல்லும் வகையில் சாலைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளாட்சி பிரதிநிதிகள் பதிவுக்காலம் முடிந்துவிட்டது. கட்சி நிர்வாகிகளும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து ஊராட்சிகளுக்கு தேவைப்படும் நலத்திட்டங்களை தேர்வு செய்து தனது கவனத்திற்கு கொண்டுவந்து அவற்றை விரைவாக செயல்படுத்த வேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ஐ பெரியசாமியின் சொந்த மாவட்டமான திண்டுக்கல் மாவட்டம் அமைச்சர் ஐ பெரியசாமியின் சொந்த சட்டமன்ற தொகுதியான ஆத்தூர் தொகுதியில்

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் தாடிக்கொம்பு பேரூராட்சியின் 2 வது வார்டில் அமைந்துள்ள ஆண்டியகவுண்டனூர் கிராமம் ஒரு தனி தீவு போல் காணப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆண்டியகவுண்டனூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குடியிருப்புக்கு செல்ல பயன்படுத்தும் பிரதான சாலை

20 வருடங்களுக்கு மேலாக சீர் செய்யாமல் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் இருப்பதால்
அந்த வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மரண பயத்தில் பயணித்து வருகின்றனர். இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், பிற வாகனங்கள் பழுதடைந்த சாலையிலேயே நின்று விடுவதால் பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்
சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் அந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் சந்தன வர்த்தினி ஆறு உள்ளது. ஆற்றை தாண்டி செல்வதற்கு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டாததால் மழை காலங்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் சென்றுவர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு

சுமார் நான்கு கோடி மதிப்பில் சந்தன வர்த்தினி ஆற்றில் தடுப்பு அணை கட்டப்பட்டுள்ளது.

ஆனால் ஆற்றின் குறுக்கே சிரமமின்றி பொதுமக்கள் சென்று வர உயர் மட்ட பாலம் அமைக்கவில்லை எனவும் தற்காலிக தரைப்பாலம் கூட அமைத்து தரவில்லை எனவும்
அமைச்சர் ஐ பெரியசாமியின் சொந்த தொகுதிக்குள் இது போன்ற அவல நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.
இதைவிட என்ன கொடுமை என்றால் திண்டுக்கல்லில் இருந்து ஆண்டியகவுன்டனூர் .
16 கிலோமீட்டர்
ஆண்டிய கவுன்டனூரிலிருந்து வேடசந்தூர் 6 கிலோ மீட்டர் தொலைவில் மிக அருகில் உள்ளது .ஆண்டியகவுன்டனூரிலிருந்து
ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.ஆகையால் பொதுமக்கள் தங்களது கோரிக்கையை சட்ட மன்ற உறுப்பினர் ஆதாவது அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களை நேரில் சென்று கொடுக்க வேண்டுமென்றால் சுமார் 40 கிலோ மீட்டர் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கொடுப்பதற்கான வாய்ப்பே இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
அது மட்டுமில்லாமல்
தாடிக்கொம்பு பேரூராட்சியில் ஆண்டியகவுண்டனூரை சேர்த்து விட்டது தான் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மிகவும் துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதி தொகுதி சீரமைப்புக்கு பிறகு ஆத்தூர் தொகுதியுடன் அகரம் பேரூராட்சியையும், தாடிக்கொம்பு பேரூராட்சியையும் ஆத்தூர் தொகுதிக்குள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டு பேரூராட்சிகளும் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குள்ளாகவே இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆத்தூர் தொகுதி மேற்கே அய்யம்பாளையம் தொடங்கி கிழக்கே தாடிக்கொம்பு பேரூராட்சி ஆண்டியகவுண்டனூர் வரை பறந்து விரிந்து அமையப்பெற்ற ஒரு தொகுதியாகும்
இந்தத் தொகுதிக்கு இரண்டு வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது.
ஒன்று திண்டுக்கல் மேற்கு தாலுகா மற்றொன்று ஆத்தூர் தனி தாலுகா.
இந்த இரண்டு தாலுகாக்கள் உள்ளடக்கியது ஆத்தூர் தொகுதி.
இத்தொகுதி அமைச்சரின் சொந்த தொகுதியாக இருந்தாலும் எந்தவித அடிப்படை வசதிகளை செய்து தர திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் முன் வரவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பாலபாரதி என்பவர் பல ஆண்டுகாலமாக தொடர்ந்து வந்தார்
அப்பொழுதும் ஆண்டியகவுண்டனூர் பகுதிக்கு எவ்வித முன்னேற்றமும், மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஐ பெரியசாமி தொடர்ந்து வருகிறார்.
ஆனால் இப்பகுதிக்கு ஒரு முறை கூட மாவட்டத்தின் அமைச்சராகவும் தொகுதியின் உறுப்பினராகவும் இதுவரை ஆண்டியகவுண்டனூர் போன்ற பகுதிக்கு வருகை தந்து ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டு அறியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
ஆண்டி கவுண்டனூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலையை தான் இதுவரை பயன்படுத்தி வந்தனர். ஆனால் அதன் பின்பு சாலையை சீரமைத்து தர
கிராம பொதுமக்கள் சாலை வசதி செய்து தர பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அதன் பின் பல ஊடகங்கள் பத்திரிகைகளில் சாலை சம்பந்தமாக செய்திகள் வந்தன. அதன் பின் சாலை அமைப்பதற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் உத்தரவிட்டு சில நாட்களுக்கு முன்பு தாண்டிக்குடி பேரூராட்சி சார்பில் பூமி பூஜை செய்யப்பட்டது என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டியகவுண்டனூர் தாடிக்கொம்பு பேரூராட்சியில் அமையப்பெற்றாலும்
பொதுமக்கள் பல இடங்களுக்கு சென்று வர போக்குவரத்து வசதி வேடசந்தூரையே சார்ந்துள்ளது.
ஏனென்றால் வேடசந்தூர் மிக அருகாமையில் இருப்பதாலும், போக்குவரத்து வசதி அனைத்தும் இருப்பதால் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களும் விவசாய பெருங்குடி மக்களும் வேடசந்தூரையே சார்ந்துள்ளனர். ஆகையால் ஆண்டியகவுண்டனூர் கிராமத்தை வேடசந்தூர் சட்ட மன்றத் தொகுதியில் சேர்த்தல் அக்கிராம பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சுலபமாக கேட்டுப் பெறமுடியும் என்கின்றனர் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.
ஏனென்றால் மாரம்பாடி, தவசி குளத்துப்பட்டி, ஜெருசலேம் நகர், ஆண்டியகவுண்டனூர் இதனை சுற்றியுள்ள விவசாயிகளும் தங்களுடைய விளைச்சல் ஆன பொருட்களை சந்தைப்படுத்த வேடசந்தூருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையே உள்ளது.
ஆகையால்
அதனால் ஆண்டியகவுண்டணூரை கடந்து செல்லும் போது சந்தன வர்த்தினி ஆறு ஒன்று குறுக்கே செல்கிறது ஆற்றைக் கடக்கும் பொழுது முறையான சாலைகளும் பாலங்களும் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகும் நிலை உள்ளது
ஏனென்றால் இவ்வழியே தினமும் விவசாயிகள் பால் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தவும்,
நூற்பாலைகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் உட்பட நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் பயணிக்க இந்த பாதையையே பயன்படுத்துகின்றனர்.
மேலும் சரக்கு வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்களும் கடந்து செல்கின்றன.
இப்பகுதிக்கு முறையான க
சாலை வசதியோ தரைப்பாலம் வசதியோ எதுவுமே இல்லாத காரணத்தினால் வியாபாரிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆகவே ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக உள்ள ஐ பெரியசாமி தனது சொந்த தொகுதிக்கு மக்கள் நலன் கருதி சாலை வசதி மற்றும் தரைப்பாலம் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுத்து மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற கருணை காட்டுவாரா !? இல்லை இதே நிலை தொடருமா என இப்பகுதி மக்களின் புரியாத புதிராகவே உள்ளது .
இப்பகுதி மக்களின் மனதில் உள்ள கோரிக்கையையும்,ஏக்கத்தையும் போக்க
மனது வைப்பாரா ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐபி பெரியசாமி . பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பொறுத்திருந்து
பார்ப்போம்……




