20 லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு காரில் தப்பிச்சென்ற அமலாக்கத்துறை அதிகாரியை சுற்றி வளைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை!
மூன்று கோடி லஞ்சம் கேட்டதாகவும் 31 லட்சம் கொடுத்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் பணம் கொடுத்த மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்!
20 லட்சம் லஞ்சம் வாங்கி காரில் சென்ற வழக்கத்துறை அதிகாரி யை சுற்றி வளைத்து பிடித்த
லஞ்ச ஒழிப்பு காவல்துறை !
மத்தியபிரதேச பதிவெண் கொண்ட காரில் எடுத்துச் சென்ற 20 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!
திண்டுக்கல்: டிச.2
பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஒரு கார் 1/12/2023 அன்று காலை வந்து கொண்டு இருந்தது. மத்திய பிரதேச பதிவெண் கொண்ட இந்த காரில் நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் எடுத்துச் செல்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்.பி. சரவணன் தலைமையில் டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதா ராணி ஆகியோர் அந்த காரை மடக்கினர்.
பின்னர் அந்த காரை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். காரின் உள்ளே சோதனையிட்ட போது ரூ.20 லட்சம் பணம் இருந்தது.
காரில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் நடக்கும் நெடுஞ்சாலை பணிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக இந்த பணத்தை எடுத்து வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அதன் பேரில் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட போது அவர் பெயர் அங்கித் திவாரி என்றும் பழனி அருகே மருத்துவர் ஒருவர் மீது அமலாக்கத்துறை போடப்பட்டுள்ள அந்நிய செலாவணி வழக்கை முடித்துக் கொடுக்க 20 லட்சம் லஞ்சம் வாங்கிக்கொண்டு காரில் வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
மேலும் அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி அதில் வந்த அழைப்புகளை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் திடிக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிபவர் சுரேஷ் பாபு. இவர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், சுரேஷ் பாபுவை விடுவிக்க அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி என்பவர் ரூ3 கோடி லஞ்சம் கேட்டுள்ளார்.
இதையடுத்து வேறு வழியில்லாமல் அங்கித் திவாரிக்கு டாக்டர் சுரேஷ் பாபு கடந்த மாதம் ரூ 20 லட்சம் லஞ்சம் கொடுத்தார். இருப்பினும், விடாமல் அவரை மிரட்டியுள்ளார். மேலும், 31 லட்சம் லஞ்சம் த வேண்டும் எனக் கேட்டுள்ளார்.இதையடுத்து டாக்டர் சுரேஷ் இது குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி ரசாயனம் தடவிய ரூ 31 லட்சம் நோட்டுகளை சுரேஷ் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு தப்ப முயன்ற திவாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.
இதையடுத்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்குச் சென்றனர். முதலில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனைக்கு அனுமதிக்காத நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பிறகு திவாரியின் பணிபுரிந்த இடத்தில் மட்டும் சோதனையை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடங்கினர்.
இந்த சோதனை காரணமாக அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே பாதுகாப்புப் பணிக்காகத் துணை ராணுவப் படையினர் அங்கே சென்றுள்ளனர். இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு தொடரும் நிலையில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் துணை ராணுவப்படை வீரர்கள் நுழைந்துள்ளனர். இதனால் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் இப்போது உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.