24 மணி நேரம் போலி மதுபாட்டில் கள்ளச்சந்தையில் விற்பனை நடக்கும் கரூர் நகரம்! மாதம் 10 லட்ச ரூபாய் கல்லாக கட்டும் கரூர் மாநகர காவல்துறை! நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்! போதையில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களை காப்பாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!
கரூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சாலையில் முத்தூட் பைனான்ஸ் எதிரே உள்ள டாஸ்மாக் பார் அருகில் உள்ள சந்துக்குள் சட்ட விரோதமாக போலி மதுபாட்டில் விற்பனை செய்யும் அதிர்ச்சி வீடியோ! சட்ட விரோதமாக அனுமதி இல்லாத டாஸ்மாக்மார்களில் போலி மது பாட்டில்களை விற்பனை செய்யும் சமூக விரோதிகளுக்கு அரணாக காவல்துறை இருப்பதாகவும் அதற்காக மாதம் பல லட்சம் ரூபாய் கையூடாக பெற்று வருவதாகவும் வருவதாகவும் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வரும் சமூக விரோதிகள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோத மது பாட்டில்கள் விற்பனை செய்யலாமா என சமூக ஆர்வலர்கள் கேட்டால் அதற்கு நாங்கள் ஒன்றும் சும்மா விற்கவில்லை கொடுக்க வேண்டிய இடத்தில் மாதம் சரியான நேரத்தில் சரியான தொகையை கொடுத்து விட்டு தான் மது பாட்டில் விற்பனை செய்கிறோம் என திமிருடன் பதில் கூறி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது சம்பந்தமாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சட்டவிரோத மது விற்பனை தடுத்து நிறுத்துவது போல் கண்துடைப்பு நாடகம் நடத்திவிட்டு அதன் பின்பு தங்களுக்கு சேர வேண்டிய தொகையை பெற்றுக்கொண்டு கம்பீரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று வருவதாகவும் மீண்டும் போலி மது பாட்டில் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இது சம்பந்தமாக 80 முறை
கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்ததாக சமூக ஆர்வலர் தெரிவிக்கிறார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதனால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி இரவு பகலாக மதுவை வாங்கி குடித்து தங்களது வாழ்வாதாரத்தையே சீரழித்து வருகின்றனர் எனவும் இதனால் பல இளைஞர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. எது எப்படியோ இளைஞர்களின் நலன் கருதி தமிழக முதல்வர் அவர்கள் சட்ட விரோத மதுபாட்டில் விற்பனையை தடுத்து நிறுத்த நேர்மையான காவல்துறை அதிகாரிகளை நியமித்தால் மட்டுமே இந்த சட்ட விரோத விற்பனையை தடுத்து நிறுத்தவும் முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்.