மருத்துவம்
50 படுக்கைகளுடன் அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையம்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில், 50 படுக்கைகளுடன் கூடிய அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தினை இன்று திறந்துவைத்து ஆய்வு செய்த அமைச்சர் கே என் நேரு. இந்த நிகழ்ச்சியில், நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜான் எபினேசர் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.