700 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க தேனி வீரப்ப அய்யனார் கோவிலை சிவன் கோயிலாக மாற்ற இந்து சிவனடியார்கள் குழுவினரின் முயற்சியை முறியடிக்குமா?இந்து சமய அறநிலையத்துறை!
இந்து சமய அறநிலையத்துறை அனுமதியின்றி நந்தி சிலை வைத்துள்ள தேனி சிவனடியார் என்ற பெயரில் உள்ள அமைப்பினர்!
தேனி மாவட்டம் தேனி வட்டம், அல்லிநகரம் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க, சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு, தோன்றிய சுயம்பு வீரப்ப அய்யனார் கோவில், தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
தேனி- அல்லிநகரம் அருகே சுமார் 5 கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அருள்மிகு வீரப்ப அய்யனார் கோயில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் சித்திரை முதல்நாள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்
தேனிமேற்கே மலையடிவாரத்தில் மலையிலிருந்து வரும் வாய்க்கால் எனும் சிற்றாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயில் சிறப்பான முறையில் கட்டப் பட்டிருந்தாலும் சுவாமியின் கருவறைக்கு மேல் மேற்கூரை அமைக்கப்படவில்லை. சுயம்பு தோற்றமாக உள்ள சுவாமி ஐயனார் சிவ அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். பொதுவாக சுயம்புத் தோற்றத்திற்கு ஆகாய கங்கை அபிஷேகமே சிறப்பு என்பதால் இங்கு சுவாமி கருவறையின் மேல்பகுதி கூரையில்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு தலைமுறைகளுக்கு முன்பு இருந்தவர்களின் வழித் தோன்றல்களின் பூஜை செய்யும் வழக்கம் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு அரசின் அனுமதியின்றி அத்துமீறி தன்னிச்சையாக ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சிலர் கூட்டாக சேர்ந்து ஒரு இந்து சிவனடியார்கள் அமைப்பு போல செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிராமக்கமிட்டி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட 16 பேர்களில், ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்பது பேர் இருந்தும் தங்களுடையசுயலாபத்திற்காக ஒரு சில இந்து அமைப்புக்களை சேர்ந்தவர்களை கையில் வைத்துக்கொண்டு, வீரப்ப ஐய்யனார் கோவில் கிராமக் கமிட்டி என்ற பெயரில் நூதன முறையில் மோசடி வேலைகளை செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
பாரம்பரியமிக்க(வீரப்ப) ஐய்யனார் கோவிலில் கடந்த 13-07-2023 அன்று, இந்து அறநிலையத் துறையின் முறையான அனுமதியின்றி பல லட்சம் மதிப்பிலான நந்தி சிலை கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டு,
சிவன் கோவிலாக மாற்றும் முயற்சியில் நூதன முறையில் அரங்கேற்றம் செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆகம விதிகளுக்கு முரணாக, சாமி சிலையின் எதிரே அமைக்கப்படும் நந்தி சிலையை கருவறையின் கட்டிட உயரத்திற்கு அனுமதியின்றி அத்துமீறி நந்தி சிலை நிறுவப் பட்டுள்ளதாகவும் . இந்து சிவனடியார்கள் என்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வீரப்ப அய்யனார் கோவிலில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருக்கும் முரளிதரன் இதற்கு முன்பு தேனி மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ஆகையால் வீரப்ப அய்யனார் கோவில் வரலாறு பற்றி அவருக்கு முழுமையாக தெரிந்து அப்படி இருந்தும் இந்த கோவில் வளாகத்தில் நந்தி சிலை அமைப்பதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடம் இருந்துள்ளது. எது எப்படியோ வெளிப்படை தன்மை அற்ற கிராமக் கமிட்டி என்ற பெயரில் இந்து சிவனடியார்கள் என்று சொல்லும் அமைப்பினரை கலைத்துவிட்டு வீரப்ப அய்யனார் கோவில் அறங்காவலர் குழுவினை ஏற் படுத்திடவும், அக்குழுவில் அல்லிநகரம் பகுதியில் உள்ள அனைத்து சமூகத்தினரையும் பாகுபாடின்றி, வேறுபாடின்றி, சேர்த்திட, தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், தேனி மாவட்ட ஆட்சியாரும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையினை, சமூக ஆர்வலர்களும், பக்தர்களும், முன்வைக்கின்றனர்.
அது மட்டும் இல்லாமல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் வளாகத்தில் ஒரு சிலையை வைக்கும் முன்பு இந்து சமய அறநிலைத்துறையில் அனுமதி வாங்காமல் சிலை வைப்பதற்கு திண்டுக்கல்லில் இருக்கும் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பாரதி உடந்தையாக இருது சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது அந்த நந்தி சிலைக்கு ஒரு மண்டலம் அதாவது 48 நாட்களுக்கு பூஜை செய்ய வேண்டும் என்று கிராம கமிட்டி என்ற பெயரில் இருக்கும் நபர்கள் சிவனடியார்கள் என்று குழுவாக சேர்த்துக்கொண்டு முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு வீரப்ப அய்யனார் கோவில் செயல் அலுவலர் ராமு திலகம் அனுமதிக்க வில்லை என்றும் தற்போது தகவல் வந்துள்ளது. ஆனால் நந்தி சிலையை வைத்த அந்த கமிட்டி அத்துமீறி சட்டவிரோதமாக பூஜை செய்ய முயற்சி செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
ஆகையால் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் இணை ஆணையர் பாரதி மீது இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலாளர்.கணேசன் இந்து அறநிலையதுறை
(திண்டுக்கல்) இணை ஆணையாளர் பாரதி-JC_ திண்டுகல்.