Uncategorizedநகராட்சி

இயங்காத கல்கு வாரியை குப்பை கிடங்காக மாற்றிய கோவை மதுக்கரை மாநகராட்சி நிர்வாகம்!

கோவை மதுக்கரை நகராட்சியில் சேகரிக்கப்படும், குப்பைகள், இயங்காத கல்கு வாரியில் கொட்டப்பட்டு எரிக்கப் படுவதால் பகுதி முழுவதும் காற்று மாசு அடைந்து பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்களை மூச்சுத் திணறால் அவதிப்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.


மதுக்கரை நகராட்சியில்
27 வார்டுகள் உள்ளன. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, 23 ஆவது வார்டு சல்காரா ஹோட்டல் பின்புறமுள்ள பயன்பாடற்ற கல் குவாரியில் கொட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு 13 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகின்றன. ஒரு டன் குப்பைக்கு 5565 ரூபாய் ஒப்பந்ததாரருக்கு நகராட்சி மூலம் வழங்கப்படுகிறது.


23 ஆவது வார்டில் ராஜேஸ்வரி நகர், ஸ்ரீ என்கிளேவ், பாலு என்கிளேவ், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1500 பேர் வசித்து வருகின்றனர்.


சாலையோரம் கொட்டப்படும் குப்பையில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் தீ வைப்பதால், தீ கொளுந்து விட்டு எரிகின்றன. இதனால் காற்றுமாசு அடைகிறது. மூச்சு திணறல், சுவாச கோளாறுகள் இரவு நேர தூக்கம் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சில நேரங்களில் தீயணைப்பு துறையின் உதவியை நாட வேண்டிய அவசியம் உள்ளது.
குப்பைகளை எரிப்பதால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதோடு நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. பொதுமக்கள் வேறு வழியில்லாமல் அதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அது சம்மந்தமாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் செவி சாய்க்காமல் கண்டு காணாமல் இருந்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Related Articles

Back to top button