AAA ஆப்ரேஷன் ஸ்டார்ட் !முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
முன்னாள் அதிமுக அமைச்சர் MR.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை பலமணி நேரம் சோதனை!
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த MR.விஜயபாஸ்கர் பல ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக லஞ்சஒழிப்புத்துறைக்கு புகார் வந்த நிலையில் இந்த சோதனை நடப்பதாக தகவல் வந்துள்ளது.
ஒரு சில மாதங்கள் முன்பு 200 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாக புகார் வந்துள்ளதை அடுத்து அந்த நிலங்களின் மதிப்பு 1000 கோடி ரூபாய் மதிப்பு உள்ளதாக புகார் வந்துள்ளது.
கரூர் மாவட்டங்களில் ரெயின்போ என்ற பெயரில் நடக்கும் அனைத்து நிறுவனங்களும் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உடன்பிறந்த சகோதரனின் பெயரில் இருப்பதாகவும் அந்த நிறுவனங்களின் மதிப்பு பல ஆயிரம் கோடி ருபாய் இருக்கும் என்றும் புகார் வந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் பல ஊழல் புகார்கள் இவர்மீது பதியப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் (லாரிகளுக்கு )வேகக்கட்டுப்பாட்டு கருவி ஜிபிஆர்எஸ் பொருத்த அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் அந்தக் கருவிகளை பொருத்தும் ஒப்பந்தம் ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே அளித்து அந்த நிறுவனங்களிடம் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக லாரி உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் அப்போது இருந்த அதிமுக அரசு அந்தக்குற்றச்சாட்டை மறைத்தது.
தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் கரூர்சட்டமன்ற வேட்பாளராக நின்ற எம் ஆர் விஜயபாஸ்கர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டு திமுக செந்தில் பாலாஜி பிரச்சாரம் செய்தார் அதன் எதிர்வினையாக அதிமுக விஜயபாஸ்கர் தற்போது அமைச்சராக இருக்கும்செந்தில் பாலாஜி மீதுகடும் விமர்சனம் செய்தார் .ஆனால் தேர்தலில் MR.விஜயபாஸ்கர் தோல்வி அடைந்தார்.
தற்போது முன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் மீது நடவடிக்கை எடுக்க தற்போது உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக ஆளுநர் மற்றும் ஜனாதிபதி அவர்களிடம் பட்டியலை கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடப்பதாக தகவல் வந்துள்ளது.
அடுத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள்
வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.