காவல் செய்திகள்

இந்த வாகனத்தில் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு !Press,advocate ,police human rights (மனித உரிமை ) ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்ய டிஜிபி அதிரடி உத்தரவு !

தமிழகத்தில் சில வருடங்களாக வாகனங்களில்( G) என்றுஆங்கிலத்திலும்( அ) என்று தமிழிலும் மற்றும் ( Human rights) press (police) (advocate )(on duty )என்று எழுதியுள்ள வாகனங்களில் சமூகவிரோதிகள் சுற்றித் திரிவதாக காவல் துறைக்கு புகார்கள் வந்த நிலையில் தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு போட்டுள்ளார்.

சமூக விரோதிகள் தங்கள் வாகனங்களில் (police ) (advocate ) (press )on govt duty human rights எழுதிக் கொண்டு பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ள நிலையில் காவல்துறை சோதனையில் பல வாகனங்கள் இதுபோன்று சமூக விரோதிகள் பயன்படுத்திய வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.


தற்போது தமிழக காவல்துறை டிஜிபி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் police ,advocate, press , on God duty ,human rights என்று எழுதியுள்ள வாகனங்களை சோதனை செய்து தனியாக அறிக்கை தயார் செய்து அனுப்ப உத்தரவு போடப்பட்டுள்ளது.
வாகனங்களை சோதனை செய்து வாகனங்களில் உள்ள போர்டு அல்லது ஸ்டிக்கர்கள் விவரங்கள் இருக்க வேண்டும்.

மேலும் serial number, date and time ,vehicle ,registration number ,username ,address ,cell number ,office address, designation ,from to vehicle, app detail ஆகியவை இருக்க வேண்டும் இந்த வாகனங்களின் விவரங்களை தினமும் காவல் உதவி ஆணையர் அல்லது காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் .

மேலும் வாகன சோதனையின்போது தகராறில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி டிஜிபி அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button