Watch ” திரைப்பட தயாரிப்பாளர்களிடம் மேடையில் மன்னிப்பு கேட்ட எஸ்.எ.சந்திரசேகர் ” on YouTube
ஏப்ரல் 30ஆம் தேதி நடக்க உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றனர்.ஒன்று மூத்த திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்களின் ஆதரவுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியும் அதேபோல் இயக்குனர் தயாரிப்பாளர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் ஆதரவுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் உரிமை காக்கும் அணியும் போட்டியிடுகின்றனர். தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் தற்போது தலைவராக இருக்கும் முரளி ராமநாராயணன் தலைமையிலும். அதேபோல் மன்னன் தலைமையில் உரிமை காக்கும் அணியும் போட்டியிடுகின்றனர். இந்த இரண்டு அணிகளும் தற்போது வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி விழா நடத்தி உள்ளனர். இரண்டு அணிகளிலும் மூத்த தயாரிப்பாளர்கள் கலந்து ஆதரவு தருவதாக தகவல் வந்துள்ளது.
முரளி இராமநாராயணன் அவர்கள் தலைமையில் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் ” தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி டி நகர் அக்காடு ஹோட்டலில் நடந்தது.
அதேபோல் மன்னன் அவர்கள் தலைமையிலான உரிமை காக்கும் அணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம்
08-04-2023 மாலை 6.30 மணிக்கு வடபழனி கிரீன்பார்க் ஓட்டல் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் எஸ் எ சந்திரசேகர் அவர்கள் கலந்து கொள்வதாக இருந்தது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் வரை அவர் வரவில்லை என்றதும் அங்கு இருந்தவர்களுக்கு மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்பு சிறிது நேரத்தில் கிரீன் பார்க் ஓட்டலுக்கு வந்தடைந்தார். அதன் பின்பு அவர் மேடையில் பேச ஆரம்பித்தவுடன் நான் ஒரு நோன்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால் வருவதற்கு தாமதமாகிவிட்டது என்றும் ஆகவே முதலில் உங்கள் அனைவரிடமும் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டார். அதன் பின்பு பேசிய அவர் நான் இங்கு வரமாட்டேன் என்னை வரவிடாமல் தடுத்து நிறுத்தி விட்டார்கள் எதிரணியினர் என்றுதான் அனைவரும் நினைக்க வேண்டியது இருக்கும். அதற்கு காரணமும் இருக்கு ஏனென்றால் கடந்த மூன்று நாட்களாக என்னிடம் நலன் காக்கும் அணியில் இருந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் எனக்கு எப்போதுமே எதிர்நீச்சல் போடுவது தான் பிடிக்கும் ஆகையால் தான் நான் ஒரு முடிவு எடுத்து விட்டால் பின்வாங்க மாட்டேன் என்றும் அது அவர்களுக்கும் தெரியும் என்றும் இந்த அணியில் இருப்பவர் என்னிடம் ஆசி வழங்கச் சொன்னார் நான் ஆசி வழங்கும் அளவிற்கு பெரிய சாமியார் இல்லை. இந்த அணியை உருவாக்கியதே நான்தான் என்று மேடையில் தைரியமாக சொல்கிறேன் அதுமட்டுமில்லாமல் இந்த தேர்தலில் நான் நின்று வெற்றி பெற்றால் சங்கத்தில் உட்கார்ந்து பணிகளை செய்ய முடியாத நிலையில் என் உடல் தற்போது ஒத்துழைப்பு தராது என்ற காரணத்தினால் நான் நிற்கவில்லை என்றும் பேசியது குறிப்பிடத்தக்கது.