மாதம் பல லட்ச ரூபாய் கல்லாக்கட்டும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளரரின் (PA)உதவியாளர் லட்சுமணன். சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளுக்கு துணை போகும் கனிம வளத்துறை உதவி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் வழக்கு!
கல்குவாரிகள் நடத்துவதற்கு பள்ளி கோவில் சுடுகாடு போன்ற இடங்களிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் தான் இருக்க வேண்டும் என்ற ஒரு சில சட்ட திட்ட விதி முறைகள் இருக்கும் போது அதை எல்லாம் காற்றில் பறக்க விட்டு சட்டவிரோதமாக குவாரிகள் நடத்த அனுமதி வழங்கி வருகிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள்.
சில தினங்களுக்கு முன்பு திருமயம் மெய்யபுரம் கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரிகளை உடனே மூட வேண்டும் என்று கிராமப் பொதுமக்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சாலையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கும் குவாரிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் திருமயம் வட்டாட்சியர் பிரவினா மேரி மற்றும் துணை வட்டாட்சியர் கலெக்ஷன் பாலமுருகன் அவர்கள் பல லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு உடந்தையாக செயல்படுவதாகவும் ஆகையால் உடனே குவாரிகளை மூட வேண்டும் என்றும் வட்டாட்சியர் பிரவீனா மேரி மற்றும் துணை வட்டாட்சியர் பாலமுருகன் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம பொதுமக்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை . சாலையில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து மாலை 6 மணிக்கு வெளியில் விட்டனர். அப்போது பொது மக்களிடம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் முன்னிலையில் இது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு திருமயம் வட்டாட்சியர் தெரிவித்து இருந்தார். அந்த வகையில் நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டத்துறை அமைச்சர் வந்தபோது மையபுரம் கிராம பொதுமக்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஒன்று கூடி அமைச்சரை வழிமறித்து முற்றுகையிட்டனர்.
அப்போது அமைச்சரிடம் நீங்கள் நினைத்தால் உடனே குவாரிகளை மூட உத்தரவு போடலாம் என்றும் அதிகாரிகளை நம்ப முடியாது என்றும் கூறினார்கள் அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தான் குவாரிகளை மூடுவதற்கு உத்தரவு போட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இதற்கான நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தார். ஆனால் பொதுமக்கள் சட்டத்துறை அமைச்சரை விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டதால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருமயம் மெய்யபுரம் பொதுமக்கள் பிரச்சனை சூடு பிடித்த நிலையில் திருமயம் லட்சுமிபுரம் கிராம மக்கள் 23/11/22 அன்று சட்ட விதிகள் மீறி பள்ளி கோவில் மற்றும் சுடுகாடு மூன்றும் இருக்கும் இடத்திற்கு 100 மீட்டருக்குள் மிக அருகில் குவாரி இயங்கி வருவதாகவும் இதனால் அருகிலுள்ள கோவில்கள் அதிர்வுகளால் சேதம் அடைந்து வருவதாகவும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இதனால் உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுடுகாட்டிற்கு அருகில் உள்ளதால் சுடுகாட்டுக்கு செல்லும் வழி பாதையில் குவாரிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் சென்று வருவதால் இறந்தவர்கள் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்லும்போது இடைஞ்சல் ஏற்படுவதாகும் ஆகையால் குவாரியின் அனுமதியை ரத்து செய்யுமாறு கனிமவளத் துறை அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர்.
சட்ட விரோதமாக குவாரி நடத்தும் இடத்திற்கு பொதுமக்கள் கூடியிருந்ததையடுத்து கனிமவளத் துறை அதிகாரி மற்றும் திருமயம் வட்டாட்சியர் மற்றும் திருமயம் துணை காவல் கண்காணிப்பாளர் அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்..
இது சம்பந்தமாக விசாரித்ததில் திருமயம் வட்டாட்சியர் மீது பல புகார்களை வைத்தனர். வட்டாட்சியர் திருமயம் சுற்றியுள்ள கல்குவாரிகள் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக செயல்பட மாதம் பல லட்சம் லஞ்சம் வாங்குவதாகவும் உடனே சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். அதன் பின்பு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள ஒரு சில நேர்மையான அதிகாரிகளிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு (PA)உதவியாளராக இருப்பவர் லட்சுமணன்
லட்சுமணன் இலுப்பூர் தாலுகாவில் உள்ள தனியார் (KALS Distilleries’ ) மதுபான ஆலையில் deputy tahsildar) துணை வட்டாட்சியராக இருக்கிறார்.
இதற்கு முன்பு வருவாய் ஆய்வாளராக (revenue inspector) பணியில் இருந்த போது கனிமவளத் துறை சம்பந்தப்பட்ட பணியை மட்டும் செய்து வந்துள்ளார். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகள் நடத்தும் உரிமையாளர்களுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் கணிசமாக கச்சிதமாக முடித்துக் கொடுத்து வந்துள்ளார். அப்போதே இவருக்கு மாதம் குறைந்தது 10 லட்ச ரூபாய் வருமானம் வந்துள்ளதாகவும் அந்த லஞ்சப் பணத்தில் தன் மனைவி உறவினர்கள் பெயரில் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அதன் பின்பு துணை வட்டாட்சியாளர் பதவி உயர்வு பெற்று இலுப்பையூர் தனியார் மதுபான ஆலையில் பணியில் சேர்ந்தார் தற்போது வரை அங்கு தான் இவர் சம்பளம் வாங்கி வருகிறார் ஆனால் இவருடைய பணபலம் , அரசியல் பலம் அதிகாரிகளின் ஆதரவுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளரின் உதவியாளராக பணி செய்து வருகிறார் என்ற தகவலை தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியாளருக்கு உதவியாளராக இருப்பதற்கு குறைந்தது தாசில்தார் பதவியில் இருப்பவர்கள் தான் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் இல்லை என்றால் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தான் மாவட்ட ஆட்சியாளர் உதவியாளராக பணியமர்த்தப்படுவார்கள் என்ற தகவல் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியாளர் உதவியாளராக முறைகேடாக லட்சுமணன் பணியமனத்தப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளனர்.
தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கனிமவள த்துறையில் எது நடக்க வேண்டும் என்றாலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளரின் உதவியாளராக இருக்கும் லட்சுமனின் கண் அசைவு இல்லாமல் எந்த வேலையும் கனிமவளத்துறையின் உதவி இயக்குனர் செய்வது இல்லையாம் என்கின்றனர். அதுமட்டுமில்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியாளர்களிடமும் குறிப்பாக திருமயம் கொளத்தூர் இலுப்பூர் தாலுகாவில் உள்ள) வட்டாட்சியாளர்கள் ),வருவாய் சம்பந்தப்பட்ட பட்டா போன்ற பணிகளை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் கனிமவளத்துறை சம்பந்தமாக கல் குவாரிகள்
கிராவள் மண் குவாரி எந்த புகார் கோரிக்கைகள் வந்தாலும் நேரடியாக மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு அனுப்பி விட வேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவை போட்டுள்ளதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளத்துறை உதவி இயக்குனர் மாவட்ட ஆட்சியாளரின் உதவியாளர் லட்சுமணன் இரண்டு பேரும் இணைந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியாளர் மற்றும் துணை வட்டாட்சியாளர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் அதுமட்டுமில்லாமல் புதுக்கோட்டை மாவட்ட கனிமவளத் துறையில் மட்டும் மாதம் பல லட்சங்கள் லஞ்சம் கிடைப்பதாகவும் தகவலை சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் குவாரிகளின் அனுமதிய ரத்து செய்து நிரந்தரமாக குவாரிகளை மூட வேண்டி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கிராம பொதுமக்கள் வழக்கு தொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
எது எப்படியோ பலமுறை நீதிமன்றங்கள் கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு எச்சரித்தும் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு சட்ட விரோதமாக நடத்தும் கல்குவாரி உரிமையாளரிடம் தொடர்பு வைத்துக்கொண்டு லஞ்சப் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு உறுதுணையாக கனிமவளத் துறை அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். ! இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா பொறுத்திருந்து பார்ப்போம்.