அச்சுறுத்தும் வெறி நாய்கள்! அச்சத்தில் பொதுமக்கள்!நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!
சாலையில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டிச் செல்லும் கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகார்கள்!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா
மடத்துக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோழமாதேவி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கோழி இறைச்சிக்கடை உரிமையாளர்கள் கோழி இறைச்சி கழிவுகளை சாலை ஓரமாக கொட்டிச் செல்வதால் அந்தப் பகுதி முழுவதும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் இதனால் குழந்தைகள் முதல் ட்பெரியவர்கள் வரை தொற்று நோய் பரவும் அச்சத்தில் இருப்பதாகவும் அது மட்டும் இல்லாமல் 20 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டி இருக்கும் இடத்தில் 20 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிவதால்
அந்த வழியில் செல்பவர்களை அச்சுறுத்தி வருவதால்
விபத்துகளும் ஏற்படுவதாக
பொதுமக்கள் பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவதாகவும்
ஊராட்சி மன்றத்
தலைவர் கோழி இறைச்சிக்கழிவுகளை கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விபத்துக்கள் நடப்பதை தடுக்க நிரந்தர திர்வு காண நடவைக்கை எடுக்க வேண்டும். பொது மக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை பிடித்து விலங்குகள் நல வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.