சினிமா

அஜித்தின் (GOOD BAD UGLY)  டிக்கெட் 500, 750 ,1000 வரை விற்பனை செய்யுமாறு ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டுவதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்!


மதுரை மாவட்டம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில்  

  10/04/2025 அன்று  உலகமெங்கும் வெளியாக உள்ள இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அஜித் நடித்த   குட் பேட் அக்லி படத்தின் சிறப்பு காட்சி  அனைத்து திரையரங்குகளிலும் காலை 9 மணிக்கு  திரையிடப்படுகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் குட் பேட் அக்லி  சிறப்பு காட்சிக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம்  500 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்யுமாறு   ரோமியோ பிக்சர்ஸ்  நிறுவனர்  ராகுல் மற்றும் அதன் மேலாளர்  சிவா இருவரும்  திரையரங்கு உரிமையாளர்களை வற்புறுத்தி வருவதாகவும் 500 ரூபாய் டிக்கெட் கொடுத்தால் மட்டுமே காலை 9 மணி சிறப்பு காட்சியை திரையிட முடியும் இல்லையென்றால் மதியம் 12.00 மணிக்கு மேல் தான் முதல் காட்சி திரையிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டும் தேனியில் பேசி வருவதாகவும்
மதுரையில் இயங்கி வரும்  மல்டி காம்ப்ளக்ஸ் மற்றும் inox  திரையரங்கம் ஆகியவகைகளுக்கு காலை 09 மணி சிறப்பு காட்சிக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ரூபாய் 190 மட்டுமே விற்கப்படுகிறது.
ரோமியோ  பிக்சர்ஸ் விநியோக  நிறுவனம் கூறியது போல  மதுரையில் உள்ள ஒரு சில திரையரங்குகள் ரூபாய் 500 முதல் 750 வரை டிக்கெட்டை விற்கிறார்கள்.
திரையரங்கு உரிமையாளர்களின் தொழிலை முடக்கும் செயலாக அரசு விதிமுறைகளை மீறி அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் டிக்கெட் விற்பனை  செய்யச் சொல்வது அரசுக்கு எதிரான செயல்.
மேலும் இதுபற்றி காவல்துறையினரிடமோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ திரையரங்கு உரிமையாளர்கள் புகார்  (complaint ) செய்தால்  வரும் காலங்களில் எந்த படம் ரிலீஸ் செய்தாலும் புகார் கொடுக்கும் திரையரங்கிற்கு மட்டும் திரைப்படம் தர மாட்டோம் எனவும் சொல்லி மிரட்டும் தேனியில் பேசி வருவதாகவும்
கார்ப்ரேட் கம்பெனிகளின் வளர்ச்சிக்காக எங்களைப் தனி திரையரங்கு உரிமையாளர்களின் வாழ்வாதரத்தையே நசுக்க நினைக்கிறார்கள் எனவே குட்பேட் அக்லி திரைபடத்தை  காலை 9 மணி  சிறப்புக் காட்சி எல்லா திரையரங்களிலும் திரையிட அனுமதிக்க வேண்டும் எனவும்,இனிவரும் காலங்களில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மற்றும் தொழிலுக்கும் தகுந்த பாதுகாப்பு  வழங்க வேண்டும்.
அரசு விதி முறைப் படி அரசு நிர்ணயித்த விலைக்கு தொடர்ந்து விற்பனை செய்ய Distribution Association அவர்களிடம் ஒரு புரிந்துணர்வு Meeting ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மதுரை மாவட்ட திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் புகார் மனுவில்  குறிப்பிடப்பட்டுள்ளது.



நாளை காலை அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் சிறப்பு காட்சி நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் திடீரென மதுரை மாநகரில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் தங்களை ரோமியோ பிக்சர்ஸ் என்ற திரைப்பட விநியோக நிறுவனம் மிரட்டுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Articles

Back to top button