Uncategorizedமாவட்டச் செய்திகள்

15 ஆண்டுகளாக அடிப்படை வசதி கேட்டு போராடும் கிராம பொதுமக்கள்!செயலிழந்து கோமாவில் இருக்கும் திருச்சி மாவட்ட ஆட்சி நிர்வாகம்!! பொதுமக்கள் நலன் கருதி அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்!?

திருச்சி மாவட்டம் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட . குளித்தலை லால்குடி மண்ணச்சநல்லூர்,முசிரி துறையூர் (தனி) பெரம்பலூர் (தனி) 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் லால்குடி சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டிலிருந்து நான்கு சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கட்சியைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் லால்குடி   சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  சட்ட மன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் தனது தொகுதிக்குத் தேவைப்படும் முக்கியப் பணிகளை செயல்படுத்திடவும் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டம், மாநில அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.

இதன்படி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தனது தொகுதிகளில் தேவைப்படும் பணியினைக் கண்டறிந்து அப்பணியினை செயல்படுத்திட பரிந்துரைப்பார். ஊரக மற்றும் நகர்ப் புறங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.2017-18ஆம் ஆண்டு முதல் 2.5 கோடியாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்றை கோடி வரை வரையறுக்கப்பட்ட நிதியாகவும், அத்தொகையில் அரசால் குறிப்பிடப்பட்ட முன்னுரிமை பணிகளை மட்டும் செய்யப்படவேண்டும். மீதமுள்ள ஒரு கோடி  வரையறுக்கப்படாத நிதியாகவும் அத்தொகையில் சட்டமன்ற உறுப்பினர் தனது விருப்பப்படி சட்டமன்ற உறுப்பினர் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை தேர்வு செய்யலாம். சூரிய சக்தியுடன் கூடிய தெரு விளக்குகள் நிறுவுதல், சரளை மற்றும் கப்பிச்சாலைகளை தார்ச்சாலையாக மேம்படுத்துதல், மிகவும் பழுதடைந்துள்ள தார்ச்சாலைகளைப் புதுப்பித்தல், (தேவையின் அடிப்படையில் தார்ச் சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி தார்ச்சாலைப் பணி மட்டும் மேற்கொள்ளல்), சிமெண்ட் கான்கிரிட் சாலைகள் அமைத்தல். அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கால்நடை மருத்துவமனைகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்தல் மற்றும் அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு தங்கும் விடுதிகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல். மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அனாதை விடுதிகள் ஆகியவைகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்தல், பாலங்கள் கட்டுதல், கிராம ஊராட்சிகளில் இடுகாடு / சுடுகாடு வசதி இல்லாத பகுதிகளில் கூடுதலாக இடுகாடு, சுடு காடுகள் மற்றும் சுற்றுச் சுவர் அமைத்தல், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்ட விதிமுறைகளின் அடிப்படையில் புதிய வீடுகள் கட்டுதல்.மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அனாதை விடுதிகள் ஆகியவைகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்தல். பாலங்கள் கட்டுதல், இடுகாடு/சுடுகாடு வசதிகளை ஏற்படுத்துதல், தேவையின் அடிப்படையில் மழைநீர் வடிகால் வசதிகளுடன் கூடிய சிமெண்ட் கான்கிரிட் நடைபாதைகள் அமைத்தல், புதிய பொது பூங்காக்கள் அமைத்தல், பொதுக் கழிப்பிடங்கள் கட்டுதல், ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் ஹைட்ராலிக் விசையால் இயக்கப்படுகின்ற தூர்வாரும் இயந்திரங்கள் வாங்குதல் அனைத்தையும் சட்டமன்ற உறுப்பினர் அவருடைய சட்டம் மன்ற தொகுதி நிதியில் இருந்து செலவு செய்யலாம் என அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் இது எல்லாமே அரசு அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மட்டுமே உள்ளது. என சமூக ஆர்வலர்கள். அதற்கு உதாரணமாக சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியின் லால்குடி தொகுதிக்குட்பட்ட கீழரசூர் கிராமமே சாட்சி. 10 ஆண்டுகளாக தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சௌந்தரபாண்டி சொந்த தொகுதியான லால்குடி தொகுதிக்குட்பட்ட கீழரசூர் ஊராட்சியில் எந்த வித அடிப்படை வசதி இல்லை என்று தெரிந்தும் அந்த ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதியை செய்து தர முன் வராததற்கு காரணம் பலமுறை கேட்டும் அவர் பதிலளிக்காமல் தனது முகநூலில் ஒரு பதிவு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அது என்னவென்றால்  லால்குடி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர் சௌந்தரபாண்டியன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் இயற்கை எய்தி விட்டதால் லால்குடி தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது என பதிவிட்டு இருந்தது தான் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது பதிவை தொடர்ந்து பலரும் லால்குடி எம்எல்ஏவை ஏன் ஆய்வு நிகழ்ச்சியில் காணவில்லை. மண்ணின் மைந்தர் எங்கே எனப் பலரும் பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. சம்பந்தமாக சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் கூறியபோது கடந்த சில மாதங்களாகவே அதிகாரிகள் ஒரு எம்எல்ஏவாக இருந்தும் என்னை புறக்கணிக்கின்றனர். எனது தொகுதியில் ஆய்வு பணிக்கு அமைச்சர் வருவது தொடர்பாக எனக்கு எந்த தகவலையும் அதிகாரிகளோ, அமைச்சர் தரப்பில் இருந்தோ தெரிவிப்பதில்லை.இது மிகுந்த மன வலியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இதுபோன்று நடைபெறுவதால் தான் நான் அவ்வாறு பதிவிட்டேன்” என்றார். தற்போது நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் உங்களது பணி எப்படி இருந்தது என கேட்டதற்கு, “அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிட்ட பெரம்பலூர் தொகுதியில் லால்குடி சட்டப்பேரவை தொகுதியும் இடம்பெற்றுள்ளது. நான் எப்படி பணியாற்றினேன் என்பது கட்சியினருக்கு நன்றாக தெரியும்” என்றார்.  ஆனால் அதெல்லாம் ஒருபுறம் இருக்க கட்சிக்குள் இவருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்பதை மட்டுமே குற்றம் சாட்டம் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் அவருடைய தொகுதி மக்களுக்காக எதையுமே செய்யவில்லை என்பதற்கு உதாரணமாக லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழரசூர் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாகவே எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கீழ அரசூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை மனுவை தொடர்ந்து வழங்கி வருகின்றனர் . மனுவை வாங்கி வைத்துக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது.  தற்போது பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சர் நேருவின் மகன் அருண் இருந்து வருகிறார். இவர் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க சென்ற போது  கீழரசூர் கிராமத்தில் 15 ஆண்டுகளாக செய்யாத அடிப்படை வசதிகளை அனைத்தையும் நான் வெற்றி பெற்றவுடன் செய்து தருகிறேன் என்று கீழரசூர் ஊராட்சி பொதுமக்களிடம் உறுதிமொழி கொடுத்து வாக்கு கேட்டார். கிராம மக்களும் அருண் வெற்றி பெற்றால் நமது கிராமத்திற்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பார் என நம்பி வாக்களித்தனர்.ஆனால் வெற்றி பெற்ற பின்பு கீழரசூர் ஊராட்சிக்கு  தேவையான அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய் சமுதாயக்கூடம் விளையாட்டு மைதானம் மற்றும் சாலை வசதி போன்ற இருபதுக்கு மேற்பட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பலமுறை கிராம பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு கொடுத்தும் கண்டும் காணாமல் அமைச்சர் நேருவின் மகனும்  நாடாளுமன்ற உறுப்பினரான அருண் இருப்பதுதான் புரியாத புதிதாக இருக்கிறது என்கின்றனர் கீழரசூர் ஊராட்சி பொதுமக்கள். சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கீழரசூர் ஊராட்சிக்கு  தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை மனு கொடுத்துள்ளதாகவும் . அந்த மனுவில் குறிப்பாக கழிவு நீர் கால்வாய் பொதுக்களிப்பிடம் சாலை வசதி விளையாட்டு பூங்கா நூலகம் பால்வாடி கட்டிடம் சமூக கூடம்  தூர் வாராமல் பராமரிப்பின்றி புதர்முண்டி கிடக்கும் குளங்களை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் போன்ற இருபதுக்கு மேற்பட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கீழரசூர் கிராமம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் புள்ளம்பாடியில் இயங்குகிறது . புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகள் உள்ளது. ஆலம்பாக்கம், ஆலம்பாடி, இ. வெள்ளனூர், ஊட்டத்தூர், எம். கண்ணனூர்,என். சங்கேந்தி, ஒரத்தூர்,கண்ணாகுடி,கருடமங்கலம், கல்லகம்,காணக்கிளியநல்லூர்,கீழரசூர்,குமுளூர்,கோவாண்டகுறிச்சி,சரடமங்கலம் சிறுகளப்பூர்,தாப்பாய்,திண்ணகுளம்தெரணிபாளையம்,நம்புகுறிச்சி,நெய்குளம்பி.கே. அகரம்பி. சங்கேந்தி,புதூர்,பாளையம்,பெருவளப்பூர்மால்வாய்,முதுவத்தூர்,மேலரசூர்,ரெட்டிமாங்குடி,வந்தலைகூடலூர்,வரகுப்பை,விரகாலூர்,வெங்கடாசலபுரம் ஆகிய ஊராட்சிகள் அடங்கும். மக்களவைத் தொகுதிபெரம்பலூர் ஆகும்.தற்போது மக்களவை உறுப்பினர் திமுக கட்சிஅருண் நேரு உள்ளார்.சட்டமன்றத் தொகுதிலால்குடி ஆகும்.சட்டமன்ற உறுப்பினர் திமுக கட்சியைச் சேர்ந்தஏ. சவுந்தர பாண்டியன் உள்ளார்.கீழரசூர் ஊராட்சியில் தென்னரசூர்கீழரசூர்ஆமரசூர் கிராமங்கள்  அடங்கும். 500 க்கும் மேற்பட்டக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 2500 பேர் வசிக்கின்றனர். கீழரசூர் ஊராட்சியில்என்னென்ன அடிப்படை வசதிகள்  உள்ளன என அரசு வெப்சைட்டில் தெரிவித்துள்ளதுகுடிநீர் இணைப்புகள்  270சிறு மின்விசைக் குழாய்கள் 5கைக்குழாய்கள் 7மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்உள்ளாட்சிக் கட்டடங்கள் 20 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள்6ஊரணிகள் அல்லது குளங்கள் 15விளையாட்டு மையங்கள் 1சந்தைகள்ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 41ஊராட்சிச் சாலைகள் 4பேருந்து நிலையங்கள்சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4 இவை எல்லாம் தமிழக அரசின் அதிகாரப்பூர்வமா இணையதளத்தில்  உள்ளது ஆனால் இதில் உள்ள 80 சதவீதம் செயல்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கீழரசூர் ஊராட்சியில் அடிப்படை வசதியான கழிப்பிடம் சாலை வசதி கழிவுநீர் கால்வாய் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம் சமூக கூடம் நீர் நிலைகள் தூர் வாருவது போன்ற முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் 15 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட  முறை கீழரசூர் ஊராட்சி மன்ற கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தாலும் அதை வாங்கி வைத்துக் கொண்டு 15 ஆண்டுகளாக திருச்சி மாவட்ட ஆட்சியர்களாக வரும் ஆட்சியாளர்கள் பெயரளவிற்கு கூட கீழரசூர் ஊராட்சியில் ஆய்வு மேற்கொள்ளாதது ஏன் என தெரியவில்லை என கீழரசூர் கிராம பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 

கீழரசூர் ஊராட்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ளாதற்கு காரணம் என்ன ஆய்வு மேற்கொள்ள யாரும் தடுக்கிறார்களா!? என்பதை திருச்சி மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு விட்டு விடுவோம். எது எப்படியோ திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆகவே திருச்சி மாவட்ட ஆட்சியர் உடனடியாக கீழரசூர் பொதுமக்களின் கோரிக்கையை செவி சாய்த்து நேரில் ஆய்வு மேற்கொண்டு 15 ஆண்டுகளாக  நடைபெறாத அடிப்படை வசதிகளான கழிப்பறை சாலை வசதி கழிவுநீர் கால்வாய் விளையாட்டு மைதானம் சமூகக்கூடம் நூலகம் மற்றும்  தூர் வாராமல் பராமரிப்பின்றி இருக்கும் ஏரிகள்

 விவசாய நிலத்துடன் சரிசமமாக புதர் மண்டி கிடப்பதை  அகற்றி தூர்வாரி  குடிநீர் ஆதாரத்திற்கு நீர்நிலைகளை உருவாக்க வேண்டும் போன்ற முக்கியமான கோரிக்கைகளை கீழரசூர் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக  செய்து கொடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்!

Related Articles

Back to top button