Uncategorized

அதிக கட்டண வசூல்! ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்லும் பொதுமக்களின் அவல நிலை!உள்ளூர் சாமானிய ஏழை எளிய மக்களின் படகு சவாரி கனவை நிறைவேற்றுவாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாதலங்களை விட, திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாக சுற்றுலாப் பயணிகள் குற்றச்சாட்டு!

திருப்பூர் – மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் குளத்தில், சுற்றுலா துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த படகு இல்லத்தை நவம்பர் 26, 2024 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.தமிழ்நாடு சுற்றுலா கழகத்தால் கட்டப்பட்டுள்ள படகு இல்லத்தில் இருந்து 58 ஏக்கர் நீர்நிலையில் 13 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.குளத்தில் சவாரி செய்வதற்காக, மோட்டார் படகு 2, துடுப்பு படகு 3, பெடல் படகு 8 என, மொத்தம் 13 படகுகள் உள்ளன.போட் ஹவுஸ் உணவகம், துரித உணவு கூட்டு, டிக்கெட் கவுண்டர் மற்றும் குழந்தைகள் பூங்கா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மோட்டார் படகில், 20 நிமிட பயணத்துக்கு ஒரு நபருக்கு 100 ரூபாய்; 4 இருக்கை பெடல் படகு மற்றும், 5 இருக்கை துடுப்பு படகுகளில், 20 நிமிட பயணத்துக்கு, ஒரு நபருக்கு 100 ரூபாய்; இரண்டு இருக்கை பெடல் படகில், 30 நிமிட சவாரிக்கு, 150 ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கு வசூலிக்கப்பட்டுவரும் கட்டணம் அதிகமாக உள்ளதாகவும், கட்டணத்தை குறைக்கவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் ஆண்டிபாளையம் குளத்தில் படகு இல்லம் கட்டணம் சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டி பாளையம் குளத்தில் படகு இல்லம் அமைக்கப்பட்டு, படகு சவாரி துவங்கப்பட்டுள்ளது. போதிய பொழுது போக்கு அம்சங்கள் இல்லாத நிலையில், படகு இல்லம் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. மங்கலம் நல்லம்மன் தடுப்பணை, ஒட்டணையிலிருந்து வரும் தண்ணீரால், ஆண்டிபாளையம் குளம் ஆண்டு முழுவதும் நீர் நிறைந்து காணப்படுகிறது. குளத்தின் நடுவே அடர்ந்த மரங்களுடன் கூடிய திடலுக்கு பறவைகள் ஏராளம் வந்து செல்கின்றன.உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஆனால், ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களை விட, ஆண்டி பாளையம் குளத்தில் படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப் படுவது சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.திருப்பூர் நகரம் மற்றும் திருப்பூர் நகரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் சாதாரண, ஏழை, நடுத்தர குடும்பத்தினரே அதிகம் வசிக்கின்றனர். படகு சம்பாதிக்கு நிர்ணயித்துள்ள தற்போதைய கட்டணத்தில் அனைத்து தரப்பு மக்களும் தங்கள் குடும்பத்துடன் படகு சவாரி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கான கட்டணத்தை உடனடியாக குறைக்கவேண்டும். தற்போது, 8 இருக்கை படகு பயணத்துக்கு, 800 ரூபாய்; 2 இருக்கை மிதி படகுக்கு, 300 ரூபாய் என்கிற அடிப்படையில், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தக் கட்டணத்தை குறைத்தால்சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், அதிக எண்ணிக்கையில் சாமானிய ஏழை எளிய மக்கள் தங்கள் குடும்பத்துடன் படகு சவாரியை பயன்படுத்துவார்கள்.இதனால் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கும் அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். அதேபோல் வாகனங்கள் நிறுத்தும் வசதியை முறைப்படுத்தி, படகு இல்ல பகுதியில் ஏற்பட்டுவரும் போக்குவரத்து நெரிசல்களுக்கும் தீர்வுகாண வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.வார விடுமுறையில் கூலி தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கண்டு கழிக்க வசதியாக, கட்டணத்தை குறைக்க வேண்டும்.கட்டணம் அதிகமாக இருப்பதால், சாமானிய மக்கள் படகு சவாரி செல்ல முடிவதில்லை.கட்டணம் மிக அதிகமாக உள்ளதால் வசதி படைத்தவர்கள் மட்டுமே படகு சவாரியை பயன்படுத்த முடிகிறது. அனைவராலும் படகு சவாரி செல்ல முடியாமல் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அனைவருக்கும் பயன்தரும் வகையில் படகு சவாரி கட்டணங்களை குறைக்க போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பொதுமக்கள் நலன் கருதி விரைவாக கட்டணக் குறைப்பு நடவடிக்கை எடுத்து தீர்வுகாண வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாமானிய ஏழை எளிய மக்களின் படகு சவாரி கனவை நிறைவேற்றுவாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Back to top button