அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்கிறார் இபிஎஸ்!? பொதுச் செயலாளர் பதவிக்கு ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமியை 23ஆம் தேதி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்!!
வருகிற 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்க இருக்கும் நிலையில் 23 ஆம் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து பொதுச் செயலாளர் பதவி ஏற்க உள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல்!
அதிமுகவில் ஒற்றை தலைமை இரட்டைத்தலை என்ற உட்கட்சி மோதல் தற்போது பேசும் பொருளாக உள்ளது.
இதற்கு இடையே பொதுக்குழு நடப்பதற்கு தடை வாங்க ஓபிஎஸ் நீதிமன்றம் அணுகி உள்ளார்.
ஆனால் ஈபிஎஸ் தனக்கு ஆதரவாக 60க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தனக்கு ஆதரவு கேட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவை ஈபிஎஸ் எக்கு தான் என்று கூறியுள்ளனர்.
ஆகையால் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை இபிஎஸ் இருபத்தி இரண்டாம் தேதி ராஜினாமா செய்ய இருப்பதாகவும் இருபத்தி மூன்றாம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.