அனைத்து துறை அதிகாரிகள் இல்லாமல் திட்டமிடாமல் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் பொதுமக்கள் அலைக்கழிப்பு ! மதுரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஜூலை ஏழாம் தேதி தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் கொடுக்கும் அணுக்கள் மீது ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; மனுவை முடித்து வைப்பதற்காக, தற்காலிக பதில் கூறி கோரிக்கை மனுக்களை தட்டிக் கழிக்க கூடாது : மக்களுக்காக உழைப்பதே எனது குறிக்கோள்” என துவக்க விழாவிலேயே, முதல்வர் ஸ்டாலின் கடுமையாக அதிகாரிகளை எச்சரித்து அறிவுறுத்தி பேசியது குறிப்பிடத்தக்கது.இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் எல்லோரும் ஒரே குடையின்கீழ் கூடி, மக்களுடைய கோரிக்கைகளை பெற்று பதிவு செய்வார்கள்.
முகாம்களில் பெறப்படுகின்ற மனுக்கள் எல்லாம், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 நாட்களுக்குள்ளாக உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும் எனவும் தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார்.மக்களுடன் முதல்வர்” திட்டம் ஒரு சிறப்புத் திட்டம். பெறப்படும் விண்ணப்பங்களை சரியாக பரிசீலனை செய்து, பயனுள்ள வகையில், இறுதியான பதில்களை வழங்கவேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலர்களையும், மீண்டும் மீண்டும் நான் கேட்டுக் கொண்டு, “மக்களுடன் முதல்வர்” திட்டம் முழுமையான வெற்றி பெறவேண்டும் எனவும் துவக்க விழாவில் தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது
அதனையடுத்து தமிழகம் முழுவதும் 2500 கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதன் பின்பு தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமப்புறங்களிலும் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை ரீதியான அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இந்த முகாம்களில்
இலவச பட்டா, முதியோர் ஓய்வூதியத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு ஒதுக்கீடு, பட்டா மாறுதல், உட்பிரிவு மாற்றுதல், இ-சேவை சான்றிதழ் கோருதல், தொழில் கடன் கோருதல் கேட்டு ஏராளமான மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழக முதல்வரின் கோரிக்கைகளை காட்டில் பறக்க விட்டு துறை அதிகாரிகளே இல்லாமல் மதுரை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடப்பதால் பொதுமக்களை அலைக்கழிப்பு செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் இரும் பாடி ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளா கத்தில் நான்கு கிராம ஊராட்சி மன்றத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கான சிறப்பு முகாம் இன்று 28.8.2024 புதன்கிழமை காலை 10 மணி அளவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவங்கியது.
இந்த சிறப்பு முகாமில் 4 கிராம பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த பகுதியில் ஒரு ஹோட்டல் கூட இல்லாததால் நானும் மற்றும் பலரும் மதியம் சாப்பிடாமல் கூட எங்கள் மனுவை கணிணியில் பதிவு செய்து எப்போது மைல்கில் கூப்பிடுவார்கள் என்று காத்துக்கிடந்து மனுவை வாங்கிய பின்பு அந்த மனுவை ஒதுக்கப்பட்ட சம்மந்தப்பட்ட துறைகளின் அனுவலகத்திற்கு சென்றால் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் இல்லாததால் மனுவை கொடுக்க முடியாமல் பலர் அலைந்து விட்டு மனுவையே கொடுக்காமல் சென்று விட்டார்கள் சிலர் வேறு துறை அதிகாரிகளிடம் சென்றும் பலனில்லை என்று வருத்தப்பட்டார்கள்.
அதன் பின்பு நான் உள்ளே சென்று பார்த்த போது தொழிலாளர் நல வாரிய அலுவலகம் மற்றும் உணவு கூட்டுறவு அலுவலகம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு துறைகளின் ஊழியர்கள் இந்த முகாமை விட்டு வீட்டிற்கு சென்று விட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் மனு கொடுக்காமலேயே சென்று விட்டார்கள்.
அதன் பின்பு நான் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கைபேசி மூலம் புகார் செய்தேன் அவர் அந்த மனுவை அவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்ப நானும் அனுப்பி விட்டேன்.
அதன் பின்பு மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அவர்களிடம் புகார் செய்தேன் அதன் பிறகு BDO அவர்களிடம் போனை கொடுக்கச்சொன்னார் – நான் BDO அலுவலக ஊழியரிடம் போனை கொடுத்து AD சார் பேசிய பின்னர் எனது உணவு கூட்டுறவு துறைமற்றும் | மாற்று திறனாளிகள் நலத்துறையை சேர்ந்த மனுக்களை BDO அலுவலகத்தில் உள்ள ஊழியர்களே வாங்கி விட்டு எனக்கு 2 ரசீதுகளை கொடுத்தார்கள்.
அதே போல் எனது வருவாய்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சம்மந்தப்பட்ட 2 மனுக்களையும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளேநேரில் வாங்கி ரசீதுகளை முறையாக எனக்கு வழங்கினார்கள்.
எனவே நான் 4 நான்கு துறைகளுக்கு மனு கொடுக்க சென்றபோது காணாமல் வீட்டிற்கு போன 2 துறைகளின் ஊழியர்கள் மற்றும் நலவாரிய ஊழியர்கள் மற்றும் இந்த முகாமில் . கடைசி வரை இருக்காமல் பாதியிலேயே சென்று விட்டு மனு கொடுக்க வந்தவர்களை ஏமாற்றி சென்று தமிழக அரசுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுதிவரும் சம்மந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
இனி வரும் காலங்களில் மதுரை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் இது போன்று நடக்காமல் முகாம் ஆரம்பம் முதல் முகாம் முடிந்து கடைசி வரை மற்ற அனைத்து துறைகளின் அரசு அதிகாரிகள் அவசியம் இருந்து பொதுமக்களிடம் அனைத்து மனுக்களையும் வாங்கித்தான் விழா முடிந்தால் தான் வெளியே செல்ல வேண்டும்
அதே போல் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் முகாமில் பொதுமக்கள் கொடுக்கப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் விரைந்து உரிய முறையில் விசாரனை செய்து இப்போது நாட்களில் உரிய நடவடிக்கையுடன் பதில் கடிதம் மனுதாரர்களுக்கு அனுப்பிட வேண்டும். என்று அனைத்து துறைகளின் அரசு அதிகாரிகளுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன் பெறும்படி மக்களுடன் முதல்வர் திட்ட நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் ஒரு சில துறை அதிகாரிகளின் மீது தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.