மாவட்டச் செய்திகள்

அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு!!?பெண் கிளார்க் மீது குற்றச்சாட்டு! பல வருடங்களாக பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படும் சமுதாய கழிப்பிடம்!?
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்காத காரணம் என்ன!?



பராமரிப்பு இல்லாமல் புதர்கள் மண்டி பாழடைந்த நிலையில் காட்சியளிக்கும் புதுக்கோட்டை மாவட்ட அன்னவாசல் பேரூராட்சியின் சமுதாய கழிப்பறையின் அவலநிலை! கோமாவில் இருக்கும் பேரூராட்சி !?புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளரின் நடவடிக்கை!??
கடந்த ஏழு வருடங்களாக அன்னவாசல் பேரூராட்சி நிர்வாகம் பெண் கிளார்க் சர்மிளா பானு கட்டுப்பாட்டில் இருப்பதாக குற்றச்சாட்டு!?

கடந்த அதிமுக ஆட்சியில் பல லட்ச ரூபாய் மதிப்பில் (2015/2016) ஆம் ஆண்டில் புதிதாக கட்டிய எட்டு சமுதாய கழிப்பறைகள் பராமரிப்பின்றி பெண்கள் பயன்படுத்த முடியாமல் இருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பேரூராட்சி நிர்வாகம்.!

அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் பெண் கிளார்க் சர்மிளா பானு


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி பகுதியில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015/2016 ஆம் ஆண்டில் புதிதாக கட்டப்பட்ட எட்டு கழிப்பறைகள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் பாம்பு விஷப்பூச்சிகள் கூடாரமாக திகழ்ந்த வருகின்றது.

பராமரிப்பின்றி இருக்கும் சமுதாய கழிப்பிடம்


இப்பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் .அதில் குறிப்பாக பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் அனைவரும் இந்தக் கழிப்பறையை தான் பயன்படுத்தி வந்துள்ளனர் . ஆனால் கழிப்பறை கட்டி ஒரு சில மாதங்கள் மட்டுமே இந்த கழிப்பறையை பராமரிப்பு செய்து வந்துள்ளது அன்னவாசல் பேரூராட்சி நிர்வாகம்.


அதன் பின்னர் கழிப்பறையில் மின்சாரம் பழுதடைந்ததை சரி செய்யாமல் விட்டு விட்டதால் கழிப்பறையை சுத்தம் செய்ய தண்ணீர் இல்லாமல் அப்படியே பேரூராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டதால் இரண்டு மூன்று வருடமாக பாழடைந்து செடிகள் புதர்கள் மண்டி கிடக்கின்றது . இதனால் விஷப் பூச்சிகள் கூடாரமாக கழிப்பறை அமைந்து விட்டதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் . தற்போது கழிப்பறை இல்லாமல் பெண்கள் காட்டுப் பகுதிக்கு செல்ல வேண்டிய அவல நிலைக்கு காரணம் பேரூராட்சி நிர்வாகம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.



லட்சக்கணக்கான ரூபாய் அரசு பணத்தில் கட்டப்பட்ட இந்த கழிப்பறைகள் முறையாக அன்னவாசல் பேரூராட்சி நிர்வாகம் பராமரிப்பு செய்யாததால் இந்த கழிப்பறை கட்டிடங்கள் மின் இணைப்புகள் போர்வெல் மற்றும் அதன் மோட்டார்கள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கின்றது . இதனால் அரசு பணம் பல லட்சம் ரூபாய் வீணடிக்கப் பட்டுள்ளது. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கோவமாவில் இருக்கிறது அன்னவாசல் பேரூராட்சி நிர்வாகம்!

அதுமட்டுமில்லாமல் அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்திற்கு செயல் அலுவலராக யார் வந்தாலும் அன்னவாசல் பேரூராட்சியில் என்ன வேலை செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பதை நிர்ணயம் செய்வது பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பெண் கிளாக் சர்மிளா பானு தான்என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. மற்றும் புதிதாக கட்டும் வீடுகளுக்கு வரைபட அனுமதி தர 20,000 முதல் ஒரு லட்சம் வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கட்டிட வரைபட அனுமதி வழங்கப்படுகிறதாம். அதுபோல் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு வரைபட அனுமதி வழங்க பல லட்சங்கள் லஞ்சம் வாங்குவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

வீடுகளுக்கு புதிதாக குடிநீர் குழாய் இணைப்புக்கு 25 ஆயிரம் வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே இணைப்பு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேரூராட்சிக்குட்பட்ட தெருக்களில் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் மற்றும் மின் சாதனங்கள் மற்றும் பிளம்பிங் குழாய்கள் அனைத்தும் குறைந்த விலைக்கு வாங்கியதை அதிக விலைக்கு வாங்கியதாக போலியான எலக்ட்ரிக் கடை பெயரில் பில் வாங்கி பல லட்ச ரூபாய் ஊழல் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேரூராட்சியில் எந்த ஒரு பணிக்கு ஒப்பந்தம் எடுப்பதாக இருந்தாலும் கமிஷன் ஏஜெண்டாக பெண் கிளர்க்…… நினைத்தால் தான் ஒப்பந்தம் எடுக்க முடியுமாம். அந்த அளவிற்கு பேரூராட்சி நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளாராம்.
செயல் அலுவலரே ஏதாவது சந்தேகம் கேட்க வேண்டும் என்றால் பெண் கிளார்க் அறைக்கு வந்து தான் பேச வேண்டுமாம். அந்த அளவிற்கு பவர்ஃபுல்லாக அந்தப் பெண் கிளார்க் இருக்கிறதாக அதிர்ச்சி தகவல் ,
அது மட்டும் இல்லாமல்
எந்த ஒரு பண பரிவர்த்தனைகள் நடந்தாலும் பெண் கிளார்க் அறையில்தான் நடக்குமாம்!
யார் யாருக்கு எவ்வளவு தர வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வது இந்த பெண் கிளாக் தான் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர்
அனைத்து அதிகாரிகளும் இருந்தாலும் கிளர்க் அம்மா சொல்வதைக் கேட்டு பேருராட்ச்சியின் அனைத்து அதிகாரிகளும் நடப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.அன்னவாசல் பேரூராட்சியை பொறுத்து மட்டும் எந்த திட்டத்தில் எவ்வளவு பங்கு போட வேண்டும் எவ்வளவு நமக்கு கிடைக்கும் யார் யாருக்கு எல்லாம் எவ்வளவு பாகப்பிரிவினை செய்ய வேண்டும் போன்ற தொழில்நுட்பங்களை நன்று கற்று தேர்ந்த பெண் கிளார்க் அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இதே அண்ணாவாசல் பேரூராட்சியில் பணிபுரிந்து வருவதால் அனைத்து வரவு செலவு கணக்குகளும் அம்மாவின் கண் சாடைக்கு கீழ்தான் இயங்கும் மாம். பேரூராட்சி அதிகாரிகள் எவராக இருந்தாலும் இவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வந்துள்ளனர் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் அண்ணா வாசல் பேரூராட்சியில் கொரோனா காலகட்டத்திலும் மழைக்காலங்களிலும் தொற்று நோய் ஏற்படாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் கொசு மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடர் மூட்டைகளுக்கு பதில் சுண்ணாம்பு பவுடர் மூட்டைகளை வாங்கி கலந்து ப்ளீச்சிங் பவுடர் (முட்டை ரூபாய் 1200 என்றால் சுண்ணாம்பு மூட்டை ரூபாய் 250 மட்டுமே)ஊழல் செய்துள்ளனர்.
கொரோனா கிருமி நாசினியில் சோப் ஆயில் கலந்து +கிருமி நாசினிஒரு லிட்டர் 1500 ரூபாய் என்றால் சோப் ஆயில் விலை லிட்டர் 200 மட்டுமே) பல லட்ச ரூபாய் ஊழல் முறைகேடு செய்துள்ளனாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பெண் கிளாக் சர்மிளா பானு மற்றும் பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலர்

பேரூராட்சியின்…. பெண் கிளார்க் அவர்களுக்கு கடந்த கால ஆட்சியில் பாரட்டு சான்றிதழ் வழங்கிய அரசியல் வாதிகள் பலர் உண்டாம். சில நாட்களுக்கு முன்புதான் அன்னவாசல் பேரூராட்சி செயலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. தற்போது பேரூராட்சி பொறுப்பு செயலாளராக புதிதாக நியமித்துள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.
யார் பேரூராட்சி செயல் அலுவலராக வந்தாலும் அன்னவாசல் பேரூராட்சி நிர்வாகத்தை ஆட்டிப்படைப்பது என்னவோ பெண் கிளாக்தான் என்கின்றனர் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.

எது எப்படியே திமுக ஆட்சிக்கு வந்து தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற முதல் நாளில் இருந்து ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அடிக்கடி சொல்லுவது உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களாட்சியின் உயிர்நாடி. மக்கள் பணியில் முதல் பணி என்பது உள்ளாட்சித் அமைப்புகள் தான். அந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத் தான் மக்களிடம் நேரடியாக பணியை பெற முடியும். ஆகவே மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வது ஒவ்வொரு அரசு அதிகாரிகளின் கடமை என்றும் அதை விட்டுவிட்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சட்டப்படி, நியாயப்படி விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீனமாக நடந்தால் நான் சர்வாதிகாரியாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது!


தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எச்சரிக்கையை எல்லாம் காற்றில் பறக்க விட்டு அன்னவாசல் பேரூராட்சி நிர்வாகத்தில் ஊழல் முறைகேடு செய்வதில் மட்டுமே தங்கள் குறிக்கோள் பணியாக இருக்கிறார்கள் என்பது தான் வேதனையாக உள்ளது.

மக்களை பற்றி சற்று யோசித்து பனியாற்றினால் ஆட்சிக்கும் கட்சிக்கும் நற்பெயர் கிடைக்கும். இல்லையென்றால் வரும் தேர்தல்களில் ஆளும் கட்சி என திமுக மீது தங்களது அதிருப்தியை இப்பகுதி மக்கள் வெளிப்படுத்துவார்கள் என்பது தான் நிதர்சனம்.
அன்னவாசல் பேரூராட்சியில் நடக்கும் ஊழல் முறைகளுக்கு முறைகேடுகளில் ஈடுபடும் கருப்பு ஆடுகளின் மீது நடவடிக்கை எடுப்பாரா !?மாவட்ட ஆட்சியாளர் !!பொறுத்திருந்து பார்ப்போம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button