அமைச்சரின் அதிரடி நடவடிக்கை! ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

நாள்: 20.07.2021
விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.
விருதுநகரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக 17.07.2021 அன்று மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்
தனர்.
அதனடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு நடைபெற்று வரும் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி, சுகாதார வசதி ஏற்படுத்துவது தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், ஏற்கனவே புதிய பேருந்து நிலையத்தின் பயன்பாடு குறித்தும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டத்திற்கு செல்லும் பேருந்துகள், நகர் மற்றும் ஊரக பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் குறித்தும், மீண்டும் புதிய பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர் ஜெ.மேகநாதரெட்டி சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்ரமணியன், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி, வட்டாட்சியர் செந்தில்வேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்
தனர்.