அரசியலமைப்பு சட்டத்தை மீறி அமலாக்கத்துறை செயல்படுவதாகவும்
அரசியலமைப்பு கட்டமைப்பை யாராலும் தொடக் கூட முடியாது!
உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி கடும் கண்டனம்!
டாஸ்மாக் நிறுவனம் 1000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு தடை விதித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி முறைகேடு நடந்து உள்ளதாக


டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம்.
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ரூ.1000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் டாஸ்மாக் பொது மேலாளர் (மொத்த விற்பனை மற்றும் நிர்வாகம்) சங்கீதா மற்றும் துணை பொது மேளாளர் (விற்பனை மற்றும் கொள்முதல்) ஜோதி சங்கர் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, தொழிலதிபர் ரத்தீஷ் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை 60 மணி நேரம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையைச் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றம் என்பது நாட்டு மக்களுக்கு எதிரான குற்றம் என்று தெரிவித்த நீதிமன்றம் தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் அமலாக்கத்துறை சட்டப்படி தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனை சட்ட விரோதமானது என்று அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு 23/05/2025 அன்று இந்த வழக்கு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எடுத்து வைத்த வாதத்தில்”அமலாக்கத்துறை சோதனையின் போது
பெண் அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து 60 மணி நேரம் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்தனர். ஒரு சிலர் மட்டும் நள்ளிரவு ஒரு மணியளவில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய செல்போனை பறிமுதல் செய்வது அந்தரங்க உரிமைக்கு எதிரானது. அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியது போல, ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை” என
தமிழக அரசும் அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதங்களை முன்வைத்தது. அமலாக்கத் துறை எப்போதும் வெளிப்படையாக இருந்ததில்லை என்றும் தமிழ்நாடு அரசு வாதம் முன்வைத்தது. மேலும், அமலாக்கத் துறையின் சோதனை நடந்து கொண்டிருந்த போதே, டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி என ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பேட்டியளித்தார்.. அதற்கு என்ன அர்த்தம் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
தனிநபர் செய்த விதிமீறலுக்காக அரசு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா !?. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தலாம் என்றும் டாஸ்மாக் அலுவலகத்தில் எத்தனை மது பாட்டில்கள் உள்ளன, அதில் இருக்கும் க்யூ ஆர் கோடு, பார் கோடு ஆகியவை எப்போது தயாரிக்கப்பட்டது, எத்தனை பார் கோடு தயாரிக்கப்பட்டு, எத்தனை பயன்படுத்தப்பட்டது, எத்தனை பயன்படுத்தப்படவில்லை, பார் கோடு இல்லாமல் திருட்டுத்தனமாக விற்கப்பட்டது எத்தனை என்றெல்லாம் அமலாக்கத்துறை விசாரணை செய்தது.
இதற்காக சிசிடிவி கேமராக்கள், டாஸ்மாக் கடைகளில் மின்சாரம் எத்தனை நேரம் எரிந்தது என்பதற்கான பில்லை வைத்து அது இயங்கிய நேரத்தை கூட கணக்கிட முயற்சி செய்ததையும் கண்டித்த உச்சநீதிமன்றம்ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி விசாரிக்க முயற்சி செய்வீர்கள் என்றும் சோதனை நடத்துவதற்கானஎந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்று கேள்வி கேட்டுள்ளது. ஏனென்றால் டாஸ்மாக் தொடர்பாக 52 எப்ஐஆர் உள்ளன. இதில் பல அதிமுக மாஜிக்களுக்கு எதிரான எப்ஐஆர் இதில் எது என்று அமலாக்கத்துறை கூறினால் அது திமுகவிற்கு மட்டுமல்ல.. பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவிற்கு சிக்கல். அதனால் அமலாக்கத்துறைக்கு புதிய சிக்கல் வந்துள்ளது.
அமலாக்கத் துறையினர் வரம்பு மீறிச் செயல்படுவதாகவும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இருப்பதாகவும்
அரசியலமைப்புச் சட்டத்தை மீறி இருப்பதாகவும் கடும் கண்டனத்தை தெரிவித்த உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதிகள் வழக்கு விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்!தொடர்ந்து இந்த புகார் தொடர்பாக அமலாக்கத்துறை உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவும் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.