தமிழ்நாடு

அரசு திட்ட பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் திட்டங்கள் குறித்து இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட மண்டல அளவிலான அலுவலர்கள் ஆய்வு கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடந்தது.

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 9 நபருக்கு 67.10 லட்சம் மதிப்பிலான ஆட்டோ மற்றும் சரக்கு வாகனம் மற்றும் புகைப்பட கருவிகள் வழங்கப்பட்டது.

2019-20 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களின் 100% தேர்ச்சி பெற்ற பள்ளியின் ஆசிரியர்கள் 45 பேருக்கு ஊக்கத்தொகையாக 5000 வீதம் 2.25 லட்சம் வழங்கப்பட்டது.

121 நபர்களுக்கு 115 கோடி மதிப்பிலான இலவச பட்டா வழங்கப்பட்டது. 14.5 லட்சம் மதிப்பிலான நடமாடும் மீன் உணவகம் பழங்குடியினர் நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் இடையில் படிப்பை நிறுத்தாமல் கண்காணித்து அந்த மாணவர்கள் முழுமையாக கல்வி பயில உறுதி செய்ய வேண்டும்.

அரசு திட்ட பணிகள் கொரோனா பேரிடர் காலத்தில் சரி பெற செயல்படவில்லை என்பது இந்த ஆய்வு கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

தற்போது கொரோனா பேரிடர் கட்டுக்குள் வந்துள்ளது. ஆகையால் அரசு திட்ட பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு அமைச்சர்களை கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி IAS, முதன்மைச்செயலாளர் மணிவாசகன், ஆணையர் மதுமதி ஐஏஎஸ், தாட்கோ மேலாண்மை இயக்குனர் விவேகானந்தன் ஐஏஎஸ், இணை ஆணையர் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ராகுல் IFS, காவல் துறை கூடுதல் இயக்குனர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்) ஜெயராமன் ஐபிஎஸ், காவல்துறை துணை தலைவர் தாட்கோ விஜயலட்சுமி ஐபிஎஸ், தாட்கோ மேலாளர் மற்றும் அலுவலர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button